Home /News /business /

BSNL வழங்கும் விஐபி நம்பர்கள்.. நீங்களும் பெற இதை செய்தாலே போதும்!

BSNL வழங்கும் விஐபி நம்பர்கள்.. நீங்களும் பெற இதை செய்தாலே போதும்!

பிஎஸ்என்எல்

பிஎஸ்என்எல்

BSNL vip number : ஆன்லைன் மூலமாக ஏலத்தில் நம்பர் பெறுவது எப்படி என்று பார்க்கலாம்.

    ஃபோன் நம்பர் என்பது நாம் பிறரை தொடர்பு கொள்ளவும், பிறர் நம்மை தொடர்பு கொள்ளவும் ஒரு இணைப்பை ஏற்படுத்தும் விஷயம் மட்டும் தான். அதே சமயம், நீங்கள் ஏதேனும் தொழில் நடத்துபவராக இருந்தால், வாடிக்கையாளர்கள் உங்கள் ஃபோன் நம்பர்களை எளிதில் நினைவில் வைத்துக் கொள்ளும் வண்ணம் விஐபி (ஃபேன்ஸி) நம்பராக இருக்க வேண்டும் என்று நீங்கள் விரும்புவீர்கள். இது தவிர, சில தனிநபர்களுக்கும் ஃபேன்ஸி நம்பர் வேண்டும் என்ற எண்ணம் இருக்கும்.

    குறிப்பாக, ஃபோன் நம்பரின் தொடக்கத்தில் அல்லது இறுதியில் நமது பிறந்த தேதி, வருடம் அல்லது வாகன எண் அல்லது மனதுக்கு பிடித்தமான எண் உள்ள நம்பர்களை வாங்கிப் பயன்படுத்துவதில் சிலருக்கு தனி ஆர்வம் உண்டு. அலுவலக பயன்பாட்டிற்காக அல்லது குடும்ப உறுப்பினர்களுக்காக அடுத்தடுத்த சீரியல்களை கொண்ட நம்பர்களை வாங்கி சிலர் பயன்படுத்துவார்கள். உங்கள் நோக்கம் எதுவாக இருப்பினும், உங்களுக்கு விஐபி நம்பர் வேண்டும் என்ற எண்ணம் இருக்குமானால், அதற்கான வாய்ப்பை பிஎஸ்என்எல் நிறுவனம் வழங்குகிறது.

    இதையும் படிங்க.. பர்சனல் லோன் வாங்கும் போது இந்த தவறுகளை மட்டும் செய்யாதீர்கள்!

    இ-ஆக்‌ஷன் முறையில் ‘விஐபி நம்பர்கள்’ என்ற பெயரில் பிஎஸ்என்எல் நிறுவனம் கவர்ச்சிகரமான நம்பர்களை விற்பனை செய்கிறது. நீங்கள் இருந்த இடத்திலேயே ஆன்லைன் மூலமாக உங்களுக்கு பிடித்தமான ஃபோன் நம்பர்களை ஏலம் மூலமாக பெற முடியும். ஃபோஸ்ட்பெய்டு மற்றும் ப்ரீபெய்டு ஆகிய இரண்டு வகையிலும் விஐபி நம்பர் ஒதுக்கீடு செய்யப்படும். இப்போது, ஆன்லைன் மூலமாக ஏலத்தில் நம்பர் பெறுவது எப்படி என்று பார்க்கலாம்.

    இதையும் படிங்க.. லோன் பெறுவது முதல் விசா வாங்குவது வரை.. வெளிநாட்டு கல்வியில் பெற்றோர்களின் பங்கு!

    * பிஎஸ்என்எல் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு செல்லவும்
    * இந்த தளத்தின் டாப் பார்-இல் உள்ள லாகின்/ரெஜிஸ்டர் என்பதை கிளிக் செய்யவும்.
    * உங்களிடம் ஏற்கனவே உள்ள மொபைல் எண் மற்றும் இ-மெயில் முகவரி ஆகியவற்றை குறிப்பிடவும். இப்போது நீங்கள் லாகின் செய்வதற்கான விவரங்கள் உங்கள் இ-மெயில் முகவரிக்கு வரும்.
    * லாகின் விவரங்களை குறிப்பிட்டு வெற்றிகரமாக லாகின் செய்யுங்கள்.
    * உங்கள் முன் காட்சிப்படுத்தப்பட்டிருக்கும் ஃபேன்ஸி நம்பர்களில் ஏதேனும் ஒன்றை தேர்வு செய்யுங்கள்.
    * இப்போது ‘கண்டினியூ டூ கார்ட்’ கொடுங்கள். இதைத் தொடர்ந்து, பதிவுக் கட்டணம் செலுத்தவும் (திரும்பப் பெறத்தக்கது)
    * இப்போது ஏல நடவடிக்கை தொடங்கியதும், குறைந்தபட்ச ஏல தொகையை குறிப்பிடவும்.
    * ஒவ்வொரு ஃபேன்ஸி நம்பருக்கும் 3 பயனாளர்களை பிஎஸ்என்எல் தேர்வு செய்யும். எஞ்சியுள்ள பயனாளர்களுக்கு அவர்களது பதிவுக் கட்டணம் 10 நாட்களில் திருப்பி அளிக்கப்படும்.
    * தேர்வு செய்யப்பட்ட மூன்று பயனாளர்களும், அவர்கள் குறிப்பிட்ட ஏலத் தொகைக்கு ஏற்ப ஹெச்1, ஹெச்2, ஹெச்3 என வகைப்படுத்தப்படுவார்கள். அதிகபட்ச ஏலத்தை குறிப்பிட்டவருக்கு நம்பர் ஒதுக்கப்படும். அவர் எடுத்துக் கொள்ள விரும்பவில்லை என்றால், அதற்கு அடுத்து உள்ளவருக்கு அந்த எண் ஒதுக்கப்படும்.
    * ஏலத்தில் நம்பரை எடுத்தவருக்கு, அடுத்த சில நாட்களில் நம்பர் ஒதுக்கப்பட்டுவிடும்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Sreeja
    First published:

    Tags: BSNL, Telecom

    அடுத்த செய்தி