Home /News /business /

அதே விலையில் கூடுதல் டேட்டா நன்மைகள்.. பிளான்களை திருத்திய BSNL!

அதே விலையில் கூடுதல் டேட்டா நன்மைகள்.. பிளான்களை திருத்திய BSNL!

பிஎஸ்என்எல்

பிஎஸ்என்எல்

BSNL-ன் பிளான்கள் மறுசீரமைப்பில் கட்டணங்கள் மாற்றப்படவில்லை என்றாலும் சில கூடுதல் நன்மைகள் சேர்க்கப்பட்டுள்ளன.

மத்திய அரசின் டெலிகாம் நிறுவனமான பாரத் சஞ்சார் நிகம் லிமிடெட் (BSNL) அதன் பிராட்பேண்ட் பிளான்களை திருத்தி அமைத்துள்ளது. இந்த திட்டங்கள் வட்டம் சார்ந்தவை (circle-specific) மற்றும் அந்தமான் மற்றும் நிக்கோபார் வட்டத்திற்கு பொருந்தும். இந்தியாவில் அதிக பிராட்பேண்ட் கட்டணங்களை அந்தமான் மற்றும் நிக்கோபார் சர்க்கிள் கொண்டுள்ளது.

இதனிடையே BSNL-ன் பிளான்கள் மறுசீரமைப்பில் கட்டணங்கள் மாற்றப்படவில்லை என்றாலும் சில கூடுதல் நன்மைகள் சேர்க்கப்பட்டுள்ளன. எனவே யூஸர்கள் இப்போது பழைய விலையில் முன்பை விட அதிக டேட்டாவை பெறுவார்கள். அந்தமான் நிக்கோபார் தீவுகளில் FUP-க்கு முந்தைய வேக வரம்பை BSNL அதிகரித்துள்ளது. BSNL - ஃபைபர் மற்றும் DSL-ன் புதிய பிராட்பேண்ட் பிளான்கள் பின்வரும் நன்மைகளுடன் திருத்தப்பட்டுள்ளன.

BSNL-ன் திருத்தப்பட்ட FTTH பிராட்பேண்ட் பிளான்கள்:

* 10MBPS வேகத்தில் 40GB டேட்டாவை வழங்கும் ரூ.99 திட்டமானது இப்போது 15 MBPS வேகத்தில் 70GB டேட்டாவை வழங்குகிறது. 70GB லிமிட்டை எட்டும் வரை வழங்கப்படும் 15 MBPS வேகம், அதன் பிறகு 512 Kbps ஆக குறைக்கப்படும்.

ALSO READ |  உங்கள் சம்பள கணக்கில் PF இருக்கா? இந்த மாத இறுதிக்குள் நீங்கள் செய்ய வேண்டிய வேலை இதுதான்!

* ரூ.799-க்கு தற்போது 60GB டேட்டா வழங்கும் பிளான் இனி இருமடங்கு டேட்டா பலன்களை வழங்கும். அதாவது இனி ரூ.799 பிளான் 120GB டேட்டாவை வழங்கும். இந்த பிளானில் இன்டர்நெட் ஸ்பீட் 30 MBPS ஆக இருக்கும். 120 GB லிமிட்டை தாண்டிய பிறகு அது 512 Kbps ஆக குறைக்கப்படும்.

* ரூ.1000-க்கு கீழ் உள்ள கடைசி பிராட்பேண்ட் திட்டத்தின் விலை ரூ.999. இந்த திட்டத்தின் கீழ் யூஸர்கள் 200GB வரை 40 MBPS ஸ்பீட் லிமிட்டை பெறுவார்கள். அதன் பின்னர் மற்றும் 512 Kbps ஸ்பீடைபெறுவார்கள்.

* இதற்கு அடுத்த பிராட்பேண்ட் திட்டத்தின் விலை ரூ.1499. இந்த பிளானில் 300GB என்ற டேட்டா லிமிட்டை யூஸர்கள் எட்டும் வரை 80 MBPS ஸ்பீட் வழங்கப்படுகிறது.அதன் பிறகு வேகம் 2 MBPS-ஆக குறைக்கப்படுகிறது.

* ரூ.1899 பிளானும் திருத்தப்பட்டு 500GB டேட்டா வரை 100 MBPS ஸ்பீட் வழங்குகிறது. டேட்டா லிமிட்டிற்கு அதன் பிறகு வேகம் 2 MBPS-ஆக குறைக்கப்படுகிறது.

ALSO READ |  பிட்காயினை விரும்பும் பெண்கள்.. Shiba Inu கிரிப்டோகரன்சியை விரும்பும் ஆண்கள் - WazirX ஆய்வில் தகவல்

ரூ.2799, ரூ.3999, ரூ.5999 மற்றும் ரூ.7999 விலையில் உள்ள பிராட்பேண்ட் பிளான்களையும் BSNL திருத்தியுள்ளது. இந்த பிளான்கள் முறையே 150 MBPS, 200 MBPS, 250 MBPS மற்றும் 300 MBPS ஸ்பீட் மற்றும் 2 Mbps, 4 Mbps, 5 Mbps மற்றும் 10 Mbps வரை FUP ஸ்பீடை அளிக்கின்றன.

BSNL-ன் திருத்தப்பட்ட DSL பிராட்பேண்ட் பிளான்கள்:

BSNL நிறுவனம் அந்தமான் மற்றும் நிக்கோபார் வட்டத்தில் DSL பிராட்பேண்ட் பிளான்களையும் திருத்தியுள்ளது. இந்த வட்டத்தில் BSNL வழங்கும் DSL பிராட்பேண்ட் பிளான்கள் ரூ.350 முதல் துவங்கி 10 Mbps ஸ்பீடை வழங்குகின்றன. யூஸர்களுக்கு கூடுதல் டேட்டா பலன்களை வழங்கும் 3 பிளான்கள் ரூ-1000-க்கு கீழ் உள்ளன. இதில் ரூ.350 பிளானின் டேட்டா லிமிட் 30 GB-யில் இருந்து 50 GB-யாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

ALSO READ |  வருஷம் பொறந்த உடனே ஜனவரி மாதத்தில் மட்டுமே இத்தனை விடுமுறைகள்!

அதேசமயம் ரூ.650 மற்றும் ரூ.1000 பிளான்களின் டேட்டா லிமிட் முறையே 150 GB மற்றும் 250 GB வரை அதிகரிக்கப்பட்டுள்ளது. மேலும் BSNL ரூ.1400, ரூ.1750, ரூ.2750, ரூ.3750, ரூ.5000, மற்றும் ரூ.7500 விலையில் பிராட்பேண்ட் திட்டங்களை வழங்குகிறது. இந்த பிளான்கள் 550 GB டேட்டா, 900 GB டேட்டா, 1250 GB டேட்டா, 1800 GB மற்றும் 3000 GB டேட்டாவை தருகின்றன. இதில் ரூ.1750 வரையிலான பிளான்கள்1 Mbps FUP ஸ்பீடை வழங்குகின்றன, ரூ. 7500-க்கு கீழ் உள்ள பிளான்கள் 2 Mbps வேகத்தை அளிக்கின்றன.
Published by:Sankaravadivoo G
First published:

Tags: BSNL

அடுத்த செய்தி