கடனில் சிக்கித் தவிக்கும் BSNL: மூடப்படும் அபாயம்!

மத்திய அரசின் நடவடிக்கையை கண்டித்து வரும் 18 முதல் 20ம் தேதி வரை இந்தியா முழுவதும் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபடப்போவதாக BSNL ஊழியர் சங்கம் தெரிவித்துள்ளது.

கடனில் சிக்கித் தவிக்கும் BSNL: மூடப்படும் அபாயம்!
பிஎஸ்என்எல்
  • News18
  • Last Updated: February 13, 2019, 7:56 PM IST
  • Share this:
BSNL நிறுவனத்தை கடனில் இருந்து மீட்க முடியவில்லை என்றால் அந்நிறுவனத்தை இழுந்து மூடுவது குறித்து மத்திய அரசு பரிசீலிக்கத் தொடங்கியுள்ளது.

இந்நிலையில் மத்திய அரசின் நடவடிக்கையைக் கண்டித்து வரும் 18 முதல் 20-ம் தேதி வரை இந்தியா முழுவதும் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபடப்போவதாக BSNL ஊழியர் சங்கம் தெரிவித்துள்ளது.

BSNL நிறுவனத்தின் தற்போதைய நிலை குறித்து தொலைத்தொடர்புத் துறை செயலாளருக்கு அந்நிறுவனத்தின் தலைவர் அனுபம் ஸ்ரீவஸ்தவா விளக்கியுள்ளார்.


இந்தச் சந்திப்பில், BSNL நிறுவனத்தை கடனில் இருந்து மீட்டு லாபத்திற்குக் கொண்டு வர வாய்ப்புகள் உள்ளதா? பங்கு விற்பனை மூலம் நிதி திரட்ட முடியுமா? அல்லது BSNL நிறுவனத்தை மூடிவிடலாமா? என்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது. இவற்றில் ஏதேனும் ஒன்றை செய்ய வேண்டிய கட்டாயத்தில் இருப்பதாகவும், எதை செய்யலாம் என்று விரைவில் முடிவு செய்து அரசிடம் தெரிவிக்குமாறு, BSNL நிறுவனத்திற்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

காரணம் BSNL நிறுவனத்தின் கடன் 31 ஆயிரத்து 287 கோடியாக உள்ளது. இது பொதுத்துறை நிறுவனங்களின் மொத்த நஷ்டத்தில் 25 சதவிதம் .

மொபைல் கட்டணம் குறைப்பால், லேண்ட்லைன் போன் பயன்பாடு பாதிக்கப்பட்டுள்ளதாக BSNL நிறுவனம் தெரிவித்துள்ளது.அதிகப்படியான ஆட்கள் மற்றும் சம்பளம் தான் நஷ்டத்திற்கு மிகப்பெரிய காரணமாக BSNL நிறுவனம் தெரிவிக்கிறது.

BSNL நிறுவனத்தில் 56 முதல் 60 வயது வரை உள்ளவர்கள் சுமார் 67 ஆயிரம் ஊழியர்கள் இருப்பதாகவும், இதில் பாதி பேர் விருப்ப ஓய்வூதியம் பெற்றால் 3 ஆயிரம் கோடி சேமிக்க முடியும் என்று BSNL தரப்பில் கணிக்கப்பட்டுள்ளது.

ஓய்வு பெறும் வயதை 60ல் இருந்து 58 ஆக குறைத்தால் ஆண்டுக்கு 3 ஆயிரம் கோடி சேமிக்க முடியும் என்கிறது BSNL நிறுவனம்.

கூடிய விரைவில், BSNL நிறுவனம் புத்துயிர் பெற நடவடிக்கை எடுக்கப்படுமா அல்லது, மூடப்படுமா என்பது குறித்து அறிவிப்பு வெளியாகும் என தெரிகிறது.

மேலும் பார்க்க: தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை வைத்திருந்தால் ரூ.1 லட்சம் அபராதம்...
First published: February 13, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்