முகப்பு /செய்தி /வணிகம் / களத்தில் குதித்த பிஎஸ்என்எல்.. ரூ.99க்கு இவ்வளவு வசதிகளா.? BSNL அறிவித்த அசத்தல் ஆஃபர்!

களத்தில் குதித்த பிஎஸ்என்எல்.. ரூ.99க்கு இவ்வளவு வசதிகளா.? BSNL அறிவித்த அசத்தல் ஆஃபர்!

BSNL புதிய பிளான்

BSNL புதிய பிளான்

இரண்டாவது சிம்மிற்கு வேலிடிட்டி தான் முக்கியமான தேவையாக இருக்கும். அது போக குறைந்தபட்ச அழைப்பு மற்றும் டேட்டா சேவைகள் இருந்தால் போதுமானது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Chennai, India

தொலைத்தொடர்பு நிறுவனங்கள் எல்லாம் போட்டி போட்டுகொண்டு தங்களது மாதாந்திர பிளான்களை அறிமுகம் செய்து வருகிறது. ஜியோ மற்றும் ஏர்டெல் நிறுவனங்கள் 5ஜி சேவையை அறிமுகம் செய்த பின்னர் குறைந்தபட்ச பலன்களின் அதிகரித்து விட்டது. இந்த வாரத்தின் தொடக்கத்தில் ஏர்டெல் நிறுவனம் தனது குறைந்தபட்ச பிளான் மதிப்பை ரூ.155 ஆக உயர்த்தியது. இந்நிலையில் குறைவான தொகையில் பிளான்கள் தேடும் மக்களுக்கு BSNL ஒரு சிறந்த திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது.

அரசின் தொலைத்தொடர்பு நிறுவனமான பாரத் சஞ்சார் நிகம் லிமிடெட் (Bharat Sanchar Nigam Limited-BSNL பொதுவாகவே வாடிக்கையாளர்களிடையே மலிவான திட்டங்களுக்காக அறியப்படுகிறது. BSNL இன் திட்டங்கள் மற்ற நிறுவனங்களை விட மிகவும் மலிவானவை என்பதால், குறிப்பிட்ட எண்ணிக்கையிலான வாடிக்கையாளர்கள் BSNL இன் சிம்மை இரண்டாவது சிம்மாக பயன்படுத்துகின்றனர். அப்படி வைத்திருக்கும் இரண்டாவது சிம்மிற்கு வேலிடிட்டி தான் முக்கியமான தேவையாக இருக்கும். அது போக குறைந்தபட்ச அழைப்பு மற்றும் டேட்டா சேவைகள் இருந்தால் போதுமானது. அப்படி இருக்கும் பட்சத்தில் அந்த தேவைகளுக்கு ஏற்ப ஒரு ஆண்டு வேலிடிட்டி உள்ள திட்டத்தை BSNL அறிவித்துள்ளது.

புதிதாக அறிமுகப்படுத்தியுள்ள BSNL ரூ.1,198 திட்டத்தில் மக்கள் ஆண்டு முழுவதும், அதாவது 365 நாட்களுக்கு வேலிடிட்டி பெறுவர். இதுவே இந்தத் திட்டத்தின் மிகப்பெரிய பலன். இது தவிர, மாதம் தோறும் எந்த நெட்வொர்க்குக்கு அழைக்க 300 நிமிடங்கள் மற்றும் 300 எஸ்எம்எஸ் இலவசம். அதே போல் மாதத்திற்கு 3 ஜிபி டேட்டா இலவசம் .

இரண்டாவது சிம்மை ஆண்டு முழுவதும் செயலில் வைத்திருக்க வேண்டியவர்களுக்கு இந்த திட்டம் சிறந்தது. திட்டம் ஆண்டு முழுக்க என்றாலும் இலவச தேட மற்றும் கால்கள் மாதம் ஒருமுறை புதுப்பிக்கப்படும்.

BSNL இன் ரூ.1198 திட்டத்தின் நன்மைகளுடன், மாதத்திற்கான செலவைப் பற்றி பேசினால், இந்த திட்டத்தின் மாத செலவு வெறும் ரு 99. தான் ஆகும். மாதம் ரூ.99க்கு இலவச அழைப்புகள் மற்றும் இலவச டேட்டாவைப் பெறுகிறீர்கள் என்றால் இது நன்மை தரும் திட்டம் தானே!


First published:

Tags: BSNL, Recharge Plan, Recharge Tariff