• HOME
  • »
  • NEWS
  • »
  • business
  • »
  • வற்புறுத்தி கொடுக்கப்படும் வி.ஆர்.எஸ்... போராட்டத்துக்குத் தயாராகும் BSNL ஊழியர்கள்!

வற்புறுத்தி கொடுக்கப்படும் வி.ஆர்.எஸ்... போராட்டத்துக்குத் தயாராகும் BSNL ஊழியர்கள்!

பி.எஸ்.என்.எல்.

பி.எஸ்.என்.எல்.

விஆர்எஸ் எடுத்துக்கொண்டால் பென்சன் தொகை கிடைப்பதில் உள்ள சிக்கலும் ஊழியர்களைக் கவலை கொள்ளச் செய்வதாகவும் கூறப்படுகிறது.

  • News18
  • Last Updated :
  • Share this:
    வற்புறுத்தி விஆர்எஸ் வழங்கப்படுவதால் BSNL ஊழியர்கள் நாடு தழுவிய உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்துள்ளனர்.

    BSNL நிர்வாகம் தனது ஊழியர்களை வற்புறுத்தி விஆர்எஸ் எடுக்கச் சொல்வது, ஓய்வு வயதை குறைப்பதாக மிரட்டுவது என ஈடுபட்டு வருவதாக அகில இந்திய BSNL ஊழியர்களின் கூட்டமைப்பு புகார் தெரிவித்துள்ளது. இதைக் கண்டித்து BSNL ஊழியர்கள் வருகிற நவம்பர் 25-ம் தேதி நாடு தழுவிய உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக அறிவித்துள்ளனர்.

    இதுகுறித்து BSNL ஊழியர்கள் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் அபிமன்யூ கூறுகையில், “விஆர்எஸ்-க்கு நாங்கள் எதிர்ப்புத் தெரிவிக்கவில்லை. விஆர்எஸ் விரும்புவோர் அதன் மூலம் பயனடையலாம். ஆனால், வலுக்கட்டாயமாக விஆர்எஸ் கொடுப்பது கண்டிக்கத்தக்கது. ஓய்வு பெறும் வயதை 58 ஆகக் குறைப்பதாக மிரட்டுவது சரியில்லை. இதனால்தான் நாங்கள் உண்ணாவிரதப் போராட்டத்துக்குத் தயாராகி உள்ளோம்” என்றார்.

    விஆர்எஸ் எடுத்துக்கொண்டால் பென்சன் தொகை கிடைப்பதில் உள்ள சிக்கலும் ஊழியர்களைக் கவலை கொள்ளச் செய்வதாகவும் கூறப்படுகிறது.

    மேலும் பார்க்க: ஆன்லைன் ஷாப்பிங் செய்ய ஸ்மார்ட்போனைவிட லேப்டாப், கணினி சிறந்தது..!

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Rahini M
    First published: