35,000 ஊழியர்களுக்கு விருப்ப ஓய்வு அளிக்கும் பிஎஸ்என்எல்; என்ன காரணம்?

பிஎஸ்என்எல் நிறுவனம் ஊழியர்களுக்கு வழங்கி வந்த விடுமுறை பயணப் படி, மருத்துவச் செலவுகள் போன்ற நன்மைகளைக் குறைத்துள்ளது.

Web Desk | news18
Updated: February 11, 2019, 7:53 PM IST
35,000 ஊழியர்களுக்கு விருப்ப ஓய்வு அளிக்கும் பிஎஸ்என்எல்; என்ன காரணம்?
பிஎஸ்என்எல்
Web Desk | news18
Updated: February 11, 2019, 7:53 PM IST
பொதுத் துறை டெலிகாம் நிறுவனமான பிஎஸ்என்எல் செலவுகளைக் குறைக்கப் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

அதன் ஒரு கட்டமாகப் பிஎஸ்என்எல் நிறுவனம் ஊழியர்களுக்கு வழங்கி வந்த விடுமுறை பயணப் படி, மருத்துவச் செலவுகள் போன்ற நன்மைகளைக் குறைத்துள்ளது.

அது மட்டும் இல்லாமல் 35,000 ஊழியர்களை விருப்பு ஓய்வு அளித்து அனுப்ப மட்டும் பிஎஸ்என்எல் நிறுவனம் 13,000 கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளது.

சென்ற ஆண்டுப் பிஎஸ்என்எல் எடுத்த செலவு குறைப்பு நடவடிக்கையால் நிறுவனத்திற்கு 2,500 கோடி ரூபாய் சேமிப்பு கிடைத்துள்ளது. இதுவே பிஎஸ்என்எல் ஊழியர்கள் குறைப்பை மேற்கொள்ளக் காரணமாக அமைந்துள்ளது.

ரிலையன்ஸ் ஜியோவின் வணிக ரீதியான சேவை வந்த பிறகு தனியார் டெலிகாம் நிறுவனங்களே திணறிய நிலையில் கடனில் இருந்து வந்த பிஎஸ்என்எல் லாபத்தையும் பதிவு செய்தது.

டிராய் வெளியிட்ட தரவுகளின் படி ஜூலை - செப்டம்பர் காலாண்டில் பிஎஸ்என்எல் 1,284.12 கோடி ரூபாயும், ஜியோ 8,271 கோடி ரூபாயும், வோடாஃபோன் ஐடியா 7,528 கோடி ரூபாயும், பார்தி ஏர்டெல் 6,720 கோடி ரூபாயும் வருவாய் ஈட்டியிருந்தன.

மேலும் பார்க்க: வராத தண்ணீருக்கு வரியா?
First published: February 11, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...