Home /News /business /

BSNL 4G: சுதந்திர தினத்தன்று வாடிக்கையாளர்களுக்கு சொல்ல போகும் குட் நியூஸ் இதுதான்!

BSNL 4G: சுதந்திர தினத்தன்று வாடிக்கையாளர்களுக்கு சொல்ல போகும் குட் நியூஸ் இதுதான்!

பிஎஸ்என்எல்

பிஎஸ்என்எல்

BSNL 4G announcement :ஏர்டெல், ஜியோ, வோடோஃபோன் போன்ற நிறுவனங்கள் மேற்கொண்டு வருகின்றன.

    இந்திய பொதுத்துறை தொலைத்தொடர்பு நிறுவனமான BSNL நிறுவனமும், வாடிக்கையாளர்களுக்காக 4ஜி இன்டர்நெட் சேவையை அறிமுகம் செய்ய உள்ளது. நாட்டின் 75ஆவது சுதந்திர தின விழா கொண்டாடும் நாளன்று இந்த சேவையை தொடங்குவதற்கு BSNL நிறுவனம் திட்டமிட்டிருப்பதாக தெரிகிறது.

    நாட்டில் உள்ள பெரும்பாலான தொலைத்தொடர்பு நிறுவனங்கள் 5ஜி சேவையை தொடங்குவதற்கான ஆயத்தப் பணிகளை தொடங்கியுள்ள நிலையில், BSNL நிறுவனம் இப்போது தான் 4ஜி சேவையில் அடியெடுத்து வைக்கிறது. ஆனால், இதில் சிறப்பம்சம் என்ன என்றால், பிஎஸ்என்எல் அறிமுகம் செய்யும் 4ஜி நெட்வொர்க் என்பது முற்றிலுமாக உள்நாட்டிலேயே தயார் செய்யப்படுவது ஆகும்.

    இதையும் படிங்க.. பர்சனல் லோன் வாங்கும் போது இந்த தவறுகளை மட்டும் செய்யாதீர்கள்!

    இதுகுறித்து பிஎஸ்என்எல் நிறுவனத்தின், கன்ஸ்யூமர் மொபிலிட்டி பிரிவு இயக்குநர் சுஷில் குமார் மிஸ்ரா கூறுகையில், “டாடா கன்சல்டன்சி நிறுவனத்தை, டெக்னாலஜி பார்ட்னராக கொண்டு, 4ஜி சேவையை பிஎஸ்என்எல் அறிமுகம் செய்ய உள்ளது. முதல் முறையாக 4ஜி சேவைகளுக்கு, முழுமையான இந்திய தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட உள்ளது’’ என்று கூறினார்.

    4ஜி சேவைகளை வழங்குவதற்காக பிஎஸ்என்எல் நிறுவனம் நாடெங்கிலும் 1,00,000 டவர்களை கட்டமைத்து வருகிறது. ஸ்மார்ட் டவர்களுக்குப் பதிலாக, குறைந்த செலவிலான மோனோபோல்ஸ் அமைக்கும் பணிகள் நடைபெறுகின்றன என்றும், இது அதிக செயல்திறன் வாய்ந்தவை என்றும் மிஸ்ரா தெரிவித்தார். 4ஜி சேவையானது நாட்டின் பெருவாரியான முக்கிய நகரங்களில் அறிமுகம் செய்யப்பட உள்ளது.

    முற்றிலும் இந்திய தொழில்நுட்பத்தில் உருவான 4ஜி சேவையை பயன்படுத்தி, கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்தில் முதலாவது சோதனை கால் ஒன்றை பயன்படுத்தியதாக இந்திய தொலைத்தொடர்பு துறை செயலாளர் கூறியிருந்தார். இதற்கிடையே, நாட்டின் முக்கிய நகரங்களில் 5ஜி சேவைகளை அறிமுகம் செய்வதற்கான ஆயத்தப் பணிகளை ஏர்டெல், ஜியோ, வோடோஃபோன் போன்ற நிறுவனங்கள் மேற்கொண்டு வருகின்றன.

    ஃபைபர் நெட் கனெக்‌ஷன் எண்ணிக்கையிலும் பின்னுக்கு தள்ளப்பட்ட பிஎஸ்என்எல்!

    கம்பியில்லா தொலைத்தொடர்பு வசதிகளை செய்து கொடுப்பதில், மற்ற நிறுவனங்களை காட்டிலும் பிஎஸ்என்எல் நிறுவனம் பின்தங்கியிருந்த போதிலும், ஃபைபர் நெட் மற்றும் லேண்ட்லைன் போன்ற கனெக்‌ஷன்களில் பிஎஸ்என்எல் நிறுவனம் முன்னணியில் இருந்து வந்தது. ஆனால், இப்போது அதிலும் பிஎஸ்என்எல் பின்னுக்கு தள்ளப்பட்டு ஜியோ நிறுவனம் முதல் இடத்தை பிடித்துள்ளது.

    இதையும் படிங்க.. State Bank வழங்கும் அட்டகாசமான பிக்சட் டெபாசிட் திட்டம்… மூத்த குடிமக்களுக்கு ஜாக்பாட் தான்!

    கடந்த ஆண்டு நவம்பர் மாதத்தில் ஜியோ பிராண்பேண்ட் சேவைகளில் 0.19 மில்லியன் பயனாளர்கள் புதிதாக இணைந்தனர். இதன் மூலமாக அந்த நிறுவனத்தின் பிராண்பேண்ட் பயனாளர்களின் எண்ணிக்கை 4.3 மில்லியனாக அதிகரித்தது. இது ஏர்டெல் மற்றும் பிஎஸ்என்எல் ஆகிய இரண்டு நிறுவனங்களைக் காட்டிலும் கூடுதல் ஆகும். பிஎஸ்என்எல் நிறுவனத்தில் 4.2 மில்லியன் பிராட்பேண்ட் வாடிக்கையாளர்களும், ஏர்டெல் நிறுவனத்தில் 4.1 மில்லியன் பிராட்பேண்ட் வாடிக்கையாளர்களும் உள்ளனர்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Sreeja
    First published:

    Tags: Airtel, BSNL, Jio

    அடுத்த செய்தி