பிரென்ட் Vs WTI - அமெரிக்காவின் ஆஃபர்... இந்தியாவுக்கு பல நூறு கோடி ரூபாய் மிச்சம்

அரபு நாடுகளிடம் இருந்து வாங்கும் கச்சா எண்ணெயின் அளவை படிப்படியாக குறைத்து வரும் இந்தியா, அமெரிக்காவிடம் வாங்குவதை அதிகரித்துள்ளது. இதனால் வரும் நாட்களில் இந்தியாவுக்கு பல நூறு கோடி ரூபாய் லாபம் கிடைக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.

பிரென்ட் Vs WTI - அமெரிக்காவின் ஆஃபர்... இந்தியாவுக்கு பல நூறு கோடி ரூபாய் மிச்சம்
கோப்புப்படம்
  • News18
  • Last Updated: June 11, 2020, 5:23 PM IST
  • Share this:
சவுதி அரேபியா, ஈராக், ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட கச்சா எண்ணெய் உற்பத்தியில் ஆதிக்கம் செலுத்தும் 12 நாடுகள் கூட்டமைப்பு "ஒபெக்" என்றும் அவற்றின் தயாரிப்பு "பிரென்ட் (Brent)" கச்சா எண்ணெய் என்றும் குறிப்பிடப்படுகிறது. போட்டியாளரான அமெரிக்காவின் வெஸ்டர்ன் டெக்சாஸ் நிறுவன தயாரிப்பு, "WTI," கச்சா எண்ணெய் என்றழைக்கப்படுகிறது.

சவுதி அரேபியா தலைமையில் இயங்கும் "ஒபெக்" அரசியல்ரீதியாக வலுவானதாகும். பெட்ரோல், டீசலுக்கு மூலப்பொருளான கச்சா எண்ணெயை அதிகம் இறக்குமதி செய்யும் நாடுகளில் மூன்றாமிடத்தில் உள்ளது இந்தியா. நாளொன்றுக்கு சராசரியாக 45 லட்சம் பீப்பாய்கள் தேவைப்படும் நிலையில், மொத்தத் தேவையில் 80 சதவீதத்தை ஒபெக் நாடுகளின் பிரென்ட் எண்ணெய் மூலம் சமாளிக்கிறது. இந்நிலையில் இந்தியாவின் பார்வை சமீபகாலமாக அமெரிக்காவை நோக்கி திரும்பியுள்ளது.

அமெரிக்காவிடமிருந்து 2.4 கோடி பீப்பாய் டபிள்யு.டி.ஐ., எண்ணெயை இறக்குமதி செய்ய இந்தியன் ஆயில் நிறுவனம் சில தினங்களுக்கு முன் டெண்டர் வெளியிட்டுள்ளது.


இந்தியாவின் மொத்த இறக்குமதியில் 3 சதவீதமாக இருந்த டபிள்யு.டி.ஐ., எண்ணெய் அளவு, 2020-ம் ஆண்டில் 4 சதவீதமாக உயர்ந்துள்ளது. இந்தியாவுக்கு கச்சா எண்ணெய் அதிகம் ஏற்றுமதி செய்யும் நாடுகளில் 9ம் இடத்தில் இருந்த அமெரிக்கா தற்போது 7ம் இடத்துக்கு முன்னேறியுள்ளது.

அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யும் அளவுக்கு இந்தியா அங்கிருந்து இறக்குமதி செய்வதில்லை என்றும் அதில் கடும் ஏற்றத்தாழ்வு நிலவுவதாகவும் குறைபட்ட அதிபர் டிரம்பின் கோரிக்கைக்கு இந்தியா செவிசாய்த்ததாகவே கருதப்பட்டாலும், இந்தியாவுக்கு இது லாபகரமாகவே இருக்கும். அமெரிக்காவின் டபிள்யு.டி.ஐ., எண்ணெய் விலை, பிரென்ட் எண்ணெயைவிட விலை குறைவு என்பது முக்கிய காரணம்.

பிரென்ட் எண்ணெய் ஒரு பீப்பாய் 40 டாலர்களுக்கு விற்றால் டபிள்யு.டி.ஐ., 38 டாலர்களுக்கு விற்கப்படுகிறது. டபிள்யூடிஐ- எண்ணெய் இறக்குமதியை அதிகரித்தால் இந்தியாவுக்கு கணிசமான லாபம் கிடைக்கும். பொருளாதார ரீதியாக தடுமாறிக் கொண்டிருக்கும் இந்தியாவுக்கு இது உதவிகரமாக இருக்கும். காமதேனுவான இந்திய சந்தையை பிடிப்பதற்காக கூடுதலாக விலை குறைப்பை அளிக்க அமெரிக்கா முன்வந்துள்ளது. இதனால் இந்தியாவுக்கு பல நூறு கோடி ரூபாய் மீதமாகும்.இந்திய பெரும் சந்தையை இழக்க விரும்பாதபட்சத்தில் பிரென்ட் எண்ணெய் விலையும் போட்டியாக குறைக்கப்படும். ஒபெக் நாடுகள் மற்றும் அமெரிக்கா இடையே விலை குறைப்பு போட்டி நிகழ்ந்தால் இந்தியா போன்ற நாடுகள் பலன்பெறுவது உறுதி என சந்தை வல்லுநர்கள் கூறுகின்றனர்.











First published: June 11, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading