சீனாவைப் புறக்கணிப்போம், சீனப் பொருட்களைப் புறக்கணிப்போம், சீனாவிலிருந்து இறக்குமதியைக் குறைப்போம் போன்ற கோஷங்கள் பொய்த்துப் போனதையே இந்தப் புள்ளி விவரங்கள் அம்பலப்படுத்துகின்றன.
இந்திய-சீன இருதரப்பு வர்த்தகம் 86.4 பில்லியன் டாலர்கள். இந்தியாவின் பெரிய வர்த்தகக் கூட்டாளியாக சீனாதான் 2021-ல் இருந்து வந்துள்ளது, சீனாவுடனான எல்லைப்பிரச்னையில் சீனப் பொருட்களைப் புறக்கணிப்போம் என்றெல்லாம் சீன விரோத கோஷங்கள் எழுந்தன, ஆனால் அவையெல்லாம் பொய்த்துப் போனதை இந்த வர்த்தகப் புள்ளிவிவரங்கள் அம்பலப்படுத்தியுள்ளன.
2021-ல் இந்தியாவின் மொத்த வர்த்தகம் 13% குறைந்து 684.77 டாலர்களாக இருந்த போதும் சீனாவுடனான வர்த்தகத்திற்குக் குறைவில்லை. 2021-ல் மாறாக அமெரிக்காவுடனான இந்திய இருதரப்பு வர்த்தகம் 9.5% குறைந்து 80.5 பில்லியன் டாலர்களாக உள்ளது. சீனாவுடனான இருதரப்பு வர்த்தகம் 2021-ல் 86.4 பில்லியன் டாலர்கள்.
அதாவது சீனாவுடன் இருதரப்பு வர்த்தகம் 5.53% அதிகரித்துள்ளது. மற்ற முக்கிய நாடுகளுடனான இருதரப்பு வர்த்தகம் பெரிய அளவில் இந்தியாவுக்குக் குறைந்துள்ளது.
அமெரிக்காவை அடுத்து யுஏஇயுடனான வர்த்தகம் 2021-ல் 26.72 குறைந்துள்ளது. சவுதி அரேபியாவுடனான இந்திய வர்த்தகம் 33.39% குறைந்துள்ளது. இராக்குடனான வர்த்தகம் அதிகபட்சமாக 38.38% குறைந்துள்ளது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
இந்தியாவின் மிகப்பெரிய இறக்குமதி நாடாக சீனாதான் இன்னமும் திகழ்கிறது, 65 பில்லியன் டாலர்கள் இறக்குமதி மதிப்பாகும். மாறாக அமெரிக்காவிலிருந்து இந்திஅயவின் இறக்குமதி மதிப்பு 19.4% சரிவு கண்டு 28.88 பில்லியன் டாலர்களாக உள்ளது. ஒட்டுமொத்தமாக இறக்குமதி 393.6 பில்லியன் டாலர்களாக சரிவு கண்டுள்ளது, அதாவது 17% குறைந்துள்ளது.
கல்வான் பள்ளத்தாக்கு மோதலில் இந்திய ராணுவ வீரர்கள் 20 பேர் பலியானதையடுத்து ஆளும் தரப்பு சீனாவைப் புறக்கணிப்போம் என்ற பிரச்சாரத்தை முன்னெடுத்தது, சீன செயலிகளுக்குத் தடை விதிக்கப்பட்டன. ஆனால் இப்போது இறக்குமதிக்காக சீனாவை இந்தியா அதிகம் நம்பியிருக்கிறது என்பதைத்தான் இந்த புள்ளிவிவரங்கள் அம்பலமாக்கியுள்ளன. குறிப்பாக மின்னணு, பிளாஸ்டிக், ரசாயனம் போன்ற துறைகளில் சீனாவையே இந்தியா அதிகம் நம்பியுள்ளது.
இந்திய வர்த்தகக் கூட்டமைப்பு சீனப் பொருட்களை பயன்படுத்த வேண்டாம், இறக்குமதி செய்ய வேண்டாம் என்ற பிரச்சாரத்தை முன்னெடுத்தும் பயனில்லை, இதுவரை சீனாதான் இந்தியாவின் பெரிய வர்த்தகக் கூட்டாளியாக இருந்து வருகிறது. அதே போல் சீனாவுக்கு ஏற்றுமதியும் 27% அதிகரித்து 21.18 பில்லியன் டாலர்களாக உள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 46, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: China vs India, Trade