Home /News /business /

நூற்றாண்டு விழாவை கொண்டாடும் போஸ்ச் இந்தியா நிறுவனம் - ரூ.1,000 கோடி முதலீடு செய்ய திட்டம்!

நூற்றாண்டு விழாவை கொண்டாடும் போஸ்ச் இந்தியா நிறுவனம் - ரூ.1,000 கோடி முதலீடு செய்ய திட்டம்!

போஸ்ச் இந்தியா

போஸ்ச் இந்தியா

Bosch India : தொழில்நுட்ப துறையில் உள்ளூர்மயமாக்கல் நடவடிக்கைகளுக்காக அடுத்த 5 ஆண்டுகளில் ரூ.1,000 கோடி முதலீடு செய்ய இருப்பதாக போஸ்ச் இந்தியா தெரிவித்துள்ளது.

தொழில்நுட்பம் மற்றும் அது சார்ந்த சேவைகளின் சப்ளையர் நிறுவனமான போஸ்ச், இந்திய சந்தையில் நுழைந்து 100 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது. மேம்பட்ட ஆட்டோமேட்டிவ் தொழில்நுட்ப துறையில் உள்ளூர்மயமாக்கல் நடவடிக்கைகளுக்காக அடுத்த 5 ஆண்டுகளில் ரூ.1,000 கோடி முதலீடு செய்ய இருப்பதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதுதவிர மொபிலிட்டி தொடர்புடைய உற்பத்தி பொருள்களை ஒரே பிளாட்பார்ம் கீழ் கொண்டு வரும் நோக்கில், மொபிலிட்டி மார்க்கெட் என்ற புதிய தளத்தை போஸ்ச் இந்தியா நிறுவனம் தொடங்கியுள்ளது.

போஸ்ச் நிறுவனம் தனது முதலாவது விற்பனை ஏஜென்சி பிரிவை கடந்த 1922ஆம் ஆண்டு கொல்கத்தாவில் தொடங்கியது. தற்போது அந்நிறுவனத்துக்கு சொந்தமாக இந்தியாவில் 18 உற்பத்தி ஆலைகள் மற்றும் 7 மேம்பாட்டு மையங்கள் உள்ளிட்டவை உள்ளன. சுமார் 31,500 பேர் போஸ்ச் நிறுவனத்தில் பணியாற்றி வருகின்றனர்.

இதையும் படியுங்கள் : பிரதமர் மோடி திறந்து வைக்கும் ஸ்ரீராமானுஜசாரியா சிலை குறித்த சுவாரஸ்யமான தகவல்கள்!

நிறுவனத்தின், மேலாண்மைக் குழு தலைவர் ஸ்டீபன் ஹர்டங் இதுகுறித்து கூறுகையில், “ஜெர்மன் பொறியியல் தொழில்நுட்பத்தில் சிறப்பான உத்திகளையும், இந்திய தொழில் சக்தியையும் இணைத்து அனைத்து பிரிவுகளிலும் இனோவேஷன் பொருள்களை போஸ்ச் நிறுவனம் உற்பத்தி செய்துள்ளது’’ என்று தெரிவித்தார்.

ஜெர்மனிக்கு வெளியே ஆர்&டி குழுவினரால் நடத்தப்படும் போஸ்ச் நிறுவனத்தில் மொபிலிட்டி வர்த்தக துறையில் சர்வதேச தரத்திலான உற்பத்தி, சேவை தரம் போன்றவை மூலமாக தனித்துவமான, கட்டுபடியாகும் விலையில், இந்தியாவுக்கு ஏற்ற இனோவேஷன்கள் உருவாக்கப்பட்டுள்ளன என்று அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

அடுத்த 5 ஆண்டுகளில், மேம்பட்ட ஆட்டோமேடிவ் தொழில்நுட்ப துறையில் ரூ.1,000 கோடி முதலீடுகளை செய்ய இந்த நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இந்தியாவின் சுயசார்பு உற்பத்தியை பூர்த்தி செய்வதாக இது அமையும் என்று கூறியுள்ளது.

இதையும் படியுங்கள் : மாற்று திறனாளி நபரை பணிக்கு அமர்த்தி வாக்குறுதியை காப்பாற்றிய ஆனந்த் மஹிந்திரா.! பாராட்டும் நெட்டிசன்கள்

இதுகுறித்து, போஸ்ச் குழுமம் - இந்தியா நிறுவனத்தின் தலைவரும், அந்நிறுவனத்தின் மேலான் இயக்குநருமான சௌமித்ரா பட்டாச்சார்யா கூறுகையில், “போஸ்ச் நிறுவனத்தின் நூற்றாண்டு வெற்றியை எங்கள் நிறுவனத்தில் அர்ப்பணிப்போடு, கடின உழைப்பை மேற்கொண்டு வரும் அனைத்து பணியாளர்களுக்கும் சமர்ப்பிக்கிறோம். இந்த மகத்தான சாதனையை அடைய காரணமாக இருந்த ஊழியர்களுக்கு நான் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்’’ என்று தெரிவித்தார்.

கடந்த 2020ஆம் ஆண்டில், சர்வதேச அளவில் பவர் டூல்ஸ், வீட்டு உபயோக பொருட்கள் மற்றும் ஹீட்டிங் சாதனங்கள் போன்ற விற்பனையில் போஸ்ச் நிறுவனம் 4 மில்லியன் பொருட்களை விற்பனை செய்திருந்த நிலையில், அதில் இருந்து 50 சதவீதம் அதிகரித்து தற்போது 2021ம் ஆண்டில் 6 மில்லியன் பொருட்கள் விற்பனை ஆகியுள்ளன என்று இந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

தங்கள் பொருட்களின் ஆயுட்காலத்தை மேம்பட்ட தொழில்நுட்பம் மூலமாக அடுத்தக்கட்டத்துக்கு நகர்த்திச் செல்ல உறுதி பூண்டிருப்பதாக போஸ்ச் நிறுவனம் கூறியுள்ளது.
Published by:Sankaravadivoo G
First published:

Tags: Investment

அடுத்த செய்தி