• HOME
  • »
  • NEWS
  • »
  • business
  • »
  • உள்நாட்டு விமானப் பயணம் ₹987 முதல்... ஸ்பைஸ்ஜெட் அதிரடி டிக்கெட் தள்ளுபடி!

உள்நாட்டு விமானப் பயணம் ₹987 முதல்... ஸ்பைஸ்ஜெட் அதிரடி டிக்கெட் தள்ளுபடி!

மாதிரிப்படம்

மாதிரிப்படம்

கொரோனா வைரஸ் பாதிப்பால் பங்குச்சந்தை வர்த்தகத்தில் ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தின் பங்குகள் 17 சதவிகித வீழ்ச்சியைச் சந்தித்துள்ளன.

  • Share this:
    இந்தியாவின் பட்ஜெட் விமான நிறுவனமாகக் கருதப்படும் ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் தனது வசந்த கால சலுகையாக உள்நாட்டு விமானப் பயணங்களை 987 ரூபாய் முதல் வழங்குவதாக அறிவித்துள்ளது.

    இதேபோல் சர்வதேச விமானப் பயணங்கள் 3,699 ரூபாய் முதல் வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. மார்ச் 12-ம் தேதி முதல் 15-ம் தேதி வரையில் இந்த ஆஃபர் நிலுவையில் இருக்கும். இந்த காலகட்டத்தில் முன்பதிவு செய்பவர்களுக்கு இந்த ஆஃபர் பிப்ரவரி 28, 2021 வரை பொருந்தும்.

    குழுவாக முன்பதிவு செய்ய விரும்புவோருக்கு இந்த சலுகை பொருந்தாது. டிக்கெட் தள்ளுபடி உடன் ஒரு வேளை உணவும் இலவசமாக வழங்கப்படும். கூடுதலாக ஸ்பைஸ்ஜெட் வழங்கும் இதர உணவு, சொகுசு இடவசதி, முன்னரே உள்நுழையும் வாய்ப்பு உள்ளிட்ட சேவைகளுக்கான கட்டணமும் 50 சதவிகிதம் தள்ளுபடியில் வழங்கப்படும்.

    ஸ்டாண்டர்டு சார்டர்ட் டெபிட் அல்லது கிரெடிட் கார்டு மூலம் முன்பதிவு செய்வோருக்கு கூடுதலாக 1,000 ரூபாய் தள்ளுபடி செய்யப்படுகிறது. கொரோனா வைரஸ் பாதிப்பால் பங்குச்சந்தை வர்த்தகத்தில் ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தின் பங்குகள் 17 சதவிகித வீழ்ச்சியைச் சந்தித்துள்ளன.

    மேலும் பார்க்க: மோசமான வீழ்ச்சியைச் சந்தித்த இந்தியப் பங்குச்சந்தை... முதலீட்டாளர்களுக்கு ₹9 லட்சம் கோடி நஷ்டம்!

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Rahini M
    First published: