பங்குச்சந்தை பரிதாபங்கள். ஆக்ஸிஜனை நம்பி ஏமாந்து போன முதலீட்டாளர்கள்!

பங்குச்சந்தை

அந்நிறுவனம் வங்கி சாரா நிதி நிறுவனம் ஆகும், Oxygen என்ற பெயரில் இருப்பதால் அது ஆக்ஸிஜன் உற்பத்தியுடன் தொடர்புடைய நிறுவனம் என தவறாக முதலீட்டாளர்கள் புரிந்து கொண்டிருக்கின்றனர்

  • Share this:
மருத்துவ ஆக்ஸிஜனுக்கான தேவை அதிகரித்துள்ளதால் ஆக்ஸிஜன் சம்பந்தப்பட்ட பங்குகளில் முதலீடு செய்வதாக நினைத்து பங்குச்சந்தையில் முதலீட்டாளர்கள் ஏமாந்துள்ள நிகழ்வு கலகலப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

உலக நாடுகளில் இல்லாத வகையில் இந்தியாவில் கொரோனா பாதிப்பு இன்று கடுமையாக அதிகரித்துக் கொண்டிருக்கிறது. கடந்த ஆண்டைக்காட்டிலும் கொரோனாவின் 2வது அலை படுமோசமாக மாறிக் கொண்டிருக்கும் நிலையில் இந்தியாவில் நாள்தோறும் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை 3 லட்சத்தையும், உயிரிழப்புகளின் எண்ணிக்கை 2,000ஐயும் கடந்து பதிவாகி வருகிறது. இதன் காரணமாக கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கத்தேவையான மருந்துகள், ஆக்ஸிஜன், ஐசியூ படுக்கைகள் போன்றவற்றிற்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதில் மிகவும் குறிப்பிடும் வகையில் சமீபத்திய நாட்களில் மருத்துவ ஆக்ஸிஜனுக்கான தட்டுப்பாடு ஏறக்குறைய பெரும்பாலான மாநிலங்களில் ஏற்பட்டுள்ளது.

கொரோனாவின் பாதகமான இந்த சூழலை தங்களுக்கு சாதகமாக மாற்றிவிட துடித்த பங்குச்சந்தை முதலீட்டாளர்கள் ஆக்ஸிஜன் உற்பத்தி நிறுவனங்களில் தங்களின் முதலீட்டை குவித்து வருகின்றனர். இதன் காரணமாக அந்நிறுவனங்களின் பங்கு மதிப்பு உயர்ந்து கொண்டு வருகிறது. இது போன்ற முதலீட்டாளர்களின் செண்டிமெண்ட் காரணமாக National Oxygen, Linde India, Bhagwati Oxygen மற்றும் பிற நிறுவனங்களில் தங்களின் முதலீட்டை அதிகரித்து வருகின்றனர். சமீபத்திய நாட்களில் இந்நிறுவனங்களின் பங்கு மதிப்பு மும்பை பங்குச்சந்தையில் அதிகரித்து வருகிறது. ஆக்ஸிஜன் தயாரிப்பு நிறுவனங்கள் மட்டுமின்றி Kanto Cylinders போன்ற சிலிண்டர் தயாரிக்கும் நிறுவனங்களின் பங்கு மதிப்பும் அதிகரித்து வருவதை காண முடிகிறது.

பங்குச்சந்தை சுவாரஸ்யம்:

இதனிடையே ஆக்ஸிஜன் உற்பத்தி நிறுவனம் என கருதி Bombay Oxygen Investments என்ற நிறுவனத்தில் முதலீட்டாளர்கள் முதலீட்டை அதிகரித்ததால் அந்நிறுவன பங்கின் விலை தாறுமாறாக அதிகரித்தது. கடந்த ஒரு மாதத்தில் மட்டும் இந்நிறுவனத்தின் பங்கு மதிப்பு 133% என விண்ணை முட்டும் வகையில் அதிகரித்துள்ளது. ஆனால், உண்மையில் அந்நிறுவனம் ஆக்ஸிஜன் உற்பத்தியில் ஈடுபடவில்லை.
2020-ல் இந்தியாவின் வறுமை இரட்டிப்பானது, கொரோனா 2-ம் அலையால் இன்னும் மோசமாகும்: அமெரிக்க ஆய்வில் தகவல்

மாறாக அந்நிறுவனம் வங்கி சாரா நிதி நிறுவனம் ஆகும், Oxygen என்ற பெயரில் இருப்பதால் அது ஆக்ஸிஜன் உற்பத்தியுடன் தொடர்புடைய நிறுவனம் என தவறாக முதலீட்டாளர்கள் புரிந்து கொண்டிருக்கின்றனர் போலும். இதனை உணர்ந்த பின்னர் அந்நிறுவனத்தில் இருந்து முதலீட்டை நீக்கி வருகின்றனர். இதனையடுத்து இன்று Bombay Oxygen Investments பங்கு விலை 5% சரிந்துள்ளது.
Published by:Arun
First published: