Home /News /business /

boi : குவிந்த புகார்கள்.. வாடிக்கையாளர்களுக்கு பேங்க் ஆப் இந்தியா வங்கி சொன்ன குட் நியூஸ்!

boi : குவிந்த புகார்கள்.. வாடிக்கையாளர்களுக்கு பேங்க் ஆப் இந்தியா வங்கி சொன்ன குட் நியூஸ்!

பேங்க் ஆஃப் இந்தியா

பேங்க் ஆஃப் இந்தியா

bank of india : வாடிக்கையாளர்களின் புகார்களுக்கு பேங்க் ஆப் இந்தியா வங்கி நிர்வாகம் பதில் அளித்தது. தடங்கலுக்கு வருந்துவதாகவும், புகார்கள் ஏதேனும் இருந்தால் தெரிவிக்கவும் என கூறியுள்ளது.

  • Trending Desk
  • 2 minute read
  • Last Updated :
    கடந்த 4 நாட்களாக வாடிக்கையாளர்களிடம் இருந்து பல்வேறு புகார்கள் வந்த நிலையில், இன்டர்நெட் சேவைகள் அனைத்தும் மீட்டெடுக்கப்பட்டுள்ளதாக ஃபேங்க் ஆப் இந்தியா வங்கி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

    முன்னதாக, இந்த வார தொடக்கத்தில் டிவிட்டரில் பேங்க் ஆப் இந்தியா வெளியிட்ட பதிவில், தங்களுடைய கோர் பேங்கிங் சிஸ்டத்தை மேம்படுத்தி வருவதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், இந்த அப்டேட்டுக்கு பிறகு, இன்டர்நெட் சேவைகள் அனைத்தும் முடங்கி விட்டதாக வாடிக்கையாளர்கள் பலர் டிவிட்டரில் புகார்களை கொட்டித் தீர்த்தனர்.

    பொதுவாக சர்வர் பராமரிப்பு அல்லது மேம்பாட்டு பணிகளின்போது ஓரிரு மணி நேரம் அல்லது ஒரு நாளுக்கு இன்டர்நெட் சேவைகள் தடைபடுவது வாடிக்கையான ஒன்று. ஆனால், பேங்க் ஆப் இந்தியா வங்கி சேவைகள் 4 நாட்களாக முடங்கியதால் வாடிக்கையாளர்கள் கொதித்தெழுந்தனர்.

    இத்தகைய சூழலில், வாடிக்கையாளர்களுக்கு முக்கிய அறிவிப்பு என்ற பெயரில் வங்கி நிர்வாகம் பதிவு வெளியிட்டது. அதில், ”அப்டேட்டுக்கு பிறகு நெஃப்ட், ஆர்டிஜிஎஸ், பிஓஐ இன்டர்நெட் பேங்கிங் மற்றும் பிஓஐ மொபைல் பேங்கிங் போன்ற சேவைகள் மீண்டும் செயல்பாட்டுக்கு வந்துள்ளதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம், தொடர்ந்து இணைந்து இருங்கள்’’ என்று கூறப்பட்டுள்ளது.

    இதேபோன்று டிவிட்டரில், வாடிக்கையாளர்களுக்கு வங்கி நிர்வாகம் அளித்துள்ள பதிலில், “உங்களுக்கு ஏற்பட்ட தடங்கலுக்கு வருந்துகிறோம். அனைத்துச் சேவைகளும் மீட்டெடுக்கப்பட்டுள்ளன. இன்னும் பிரச்சினைகள் நீடித்தால் எங்களுக்கு தெரியப்படுத்தவும்’’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதையும் படிங்க. Voter ID ஆவணத்தில் முகவரியை மாற்றுவது இவ்வளவு ஈஸியா?

    முன்னதாக, வங்கிச் சேவைகள் முடங்கியதால் ஆர்டிஜிஎஸ், நெஃப்ட் போன்ற பரிவர்த்தனைகள் பாதிக்கப்பட்டதால் வாடிக்கையாளர்கள் மிகுந்த சிரமங்களை எதிர்கொண்டனர். பரிவர்த்தனைகள் பாதியில் தோல்வி அடைந்தன. எண்ணற்ற செக்-கள் க்ளியர் ஆகவில்லை. இதனால், டிவிட்டரில் அடுத்தடுத்து புகார் மழை பொழிந்தது.

    ரூ.2.4 லட்சம் ஆர்டிஜிஎஸ் செய்திருந்த சுதிப்தா சின்ஹா என்ற வாடிக்கையாளர், “பொதுவாக ஆர்டிஜிஎஸ் பரிவர்த்தனை 30 நிமிடங்களில் முடியும் என ஆர்பிஐ தெரிவிக்கிறது. ஆனால், இங்கு 6 மணி நேரம் ஆகியும் எனது பரிவர்த்தனை முடங்கியிருக்கிறது. இதை எப்படி ஏற்றுக் கொள்வது?’’ என்று டிவிட்டரில் கேள்வி எழுப்பியிருந்தார்.

    இதையும் படிங்க.. எஸ்பிஐ வாடிக்கையாளர்களுக்கு மகிழ்ச்சி தரும் அந்த 2 அறிவிப்புகள்.. முழு விவரம்!

    சையது இர்பான் என்ற வாடிக்கையாளர் வெளியிட்ட பதிவில், ஒரு பரிவர்த்தனைக்கு 4 நாட்கள் காத்திருப்பதன் மூலமாக 1950களுக்கு நாம் திரும்பிச் செல்கிறோமா? என்று கண்டனம் தெரிவித்திருந்தார்.

    இன்டர்நெட் சேவைகள் அனைத்தும் 4 நாட்களுக்கும் மேலாக முடங்கியதால் தன்னை போன்ற சிறு வியாபாரிகள் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று பவிக் ஜோஷி என்ற வியாபாரி கூறியிருந்தார்.

    இந்நிலையில், பெரும்பாலான வாடிக்கையாளர்களின் புகார்களுக்கு ஃபேங்க் ஆப் இந்தியா வங்கி நிர்வாகம் பதில் அளித்தது. தடங்கலுக்கு வருந்துவதாகவும், புகார்கள் ஏதேனும் இருந்தால் https://www.bankofindia.co.in/OnlineGrievance என்ற முகவரியில் தெரிவிக்கலாம் என்றும் வங்கி நிர்வாகம் தெரிவித்தது.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Sreeja
    First published:

    Tags: Bank accounts, Savings

    அடுத்த செய்தி