Home /News /business /

இந்த தீபாவளிக்கு உங்களின் சொந்த வீடு கனவு நிறைவேறும்... இன்ப அதிர்ச்சி கொடுத்த பிரபல வங்கி!

இந்த தீபாவளிக்கு உங்களின் சொந்த வீடு கனவு நிறைவேறும்... இன்ப அதிர்ச்சி கொடுத்த பிரபல வங்கி!

பேங்க் ஆஃப் இந்தியா

பேங்க் ஆஃப் இந்தியா

அக்டோபர் 18 முதல் அமலுக்கு வந்துள்ளது. வரும் டிசம்பர் 31ஆம் தேதி வரையில் இந்த வட்டி மாற்றம் அமலில் இருக்கும்

    சொந்த வீடு வாங்க சரியான நேரம் வந்து விட்டது. காரணம், பிரபல வங்கி கொடுத்திருக்கும் ஹோம் லோன் ஆஃபர் வாடிக்கையாளர்களை இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

    பண்டிகை நாட்கள் நெருங்கி விட்டதால் கடந்த சில நாட்களாக வங்கிகளிடம் இருந்து வாடிக்கையாளர்களுக்கு அடுத்தடுத்த நல்ல செய்திகள் சென்று கொண்டிருக்கின்றன. அதாவது தீபாவளி, பொங்கல், புத்தாண்டு சிறப்பு சலுகைகளாக வங்கிகள் லோன் ஆஃபர்கள், கார் லோன்கள் வழங்குவது வழக்கம். அந்த வகையில் பிரபல பொதுத்துறை வங்கியான பேங்க் ஆஃப் இந்தியா வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கு பண்டிக்கைகால சிறப்பு சலுகையாக புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. ஏற்கெனவே எஸ்பிஐ, பேங்க் ஆஃப் பரோடா, கொடாக் மகிந்த்ரா வங்கி, பஞ்சாப் நேஷனல் வங்கி ஆகியவை ஹோம் லோன், கார் லோன்களில் பல சலுகைகளை அறிவித்துவிட்டன. அதனைத் தொடர்ந்து தற்போது பேங்க் ஆஃப் இந்தியா வங்கியும் களத்தில் குதித்துள்ளது.

    இந்த தீபாவளிக்கு வாடிக்கையாளர்கள் குறைந்த வட்டி விகிதத்தில் கடன் வாங்கலாம். வீட்டுக் கடன், வாகனக் கடன்களுக்கான வட்டி விகிதம் குறைக்கப்பட்டுள்ளது.புதிய வட்டி விகிதம் அக்டோபர் 18 முதல் அமலுக்கு வந்துள்ளது. வரும் டிசம்பர் 31ஆம் தேதி வரையில் இந்த வட்டி மாற்றம் அமலில் இருக்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. வீட்டுக் கடன் வட்டி விகிதம் 6.50 சதவீதமாகக் குறைந்துள்ளது. வாகனக் கடன் வட்டி விகிதம் 6.85 சதவீதத்துக்கு வந்துள்ளது. இதற்கு முன்னர் வீட்டுக் கடனுக்கு 6.85 சதவீத வட்டியும், வாகனக் கடனுக்கு 7.35 சதவீத வட்டியும் நடைமுறையில் இருந்தது.இவற்றுக்கான செயல்பாட்டுக் கட்டணமும் ரத்து செய்யப்பட்டுள்ளது.

    போஸ்ட் ஆபீஸ் திட்டங்களில் சேமித்தால் லாபம் நிச்சயம்..ஆபத்து இல்லாத முதலீடு!

    புதிய கடன் அல்லது கடன் பரிமாற்றத்திற்கு விண்ணப்பிக்கும் வாடிக்கையாளர்களுக்கு புதிய வட்டி விகிதம் பொருந்தும்.இந்த புதிய அறிவிப்பை வங்கி நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. பண்டிகை நாட்களில் வீடு, கார் போன்றவற்றை வாங்குவது மிக மிக நல்லது. உங்கள் மனதிலும் அந்த திட்டம் ஓடிக் கொண்டிருந்தால் இந்த வாய்ப்பை உடனே பயன்படுத்தி கொள்ளுங்கள். இந்த பண்டிகையில் உங்கள் கனவை நிறைவேற்றிக் கொள்ளுங்கள்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Sreeja Sreeja
    First published:

    Tags: Home Loan

    அடுத்த செய்தி