அந்த முக்கிய வங்கியில் செய்யப்பட்ட மாற்றம்! இனிமே பழைய வட்டி கிடைக்காது!

வட்டி விகிதத்தில் மாற்றம்

12 மாதங்கள் முடிந்தபிறகு முன்கூட்டியே திரும்ப பெற்றால் அதற்கு வாடிக்கையாளர்களிடம் அபராதம் வசூலிக்கப்படாது.

  • Share this:
    பேங்க் ஆஃப் இந்தியா வங்கியில் அக்கவுண்ட் வைத்திருப்பவரா நீங்கள்? இந்த அப்டேட் உங்களுக்கு தான்.

    பொதுவாக மிடில் கிளாஸ் மக்கள் தொடங்கி தொழிலபதிபர்கள் வரை பிச்சட் டெபசிட் முதலீட்டில் அதிக ஆர்வம் செலுத்துவது அனைவருக்கும் தெரியும். இந்த முதலீடு திட்டத்தில் வட்டி அதிகம் கிடைப்பதும் லாபம் இரட்டிப்பாக கிடைப்பது தான் பலரும் இதை விரும்ப காரணமாக உள்ளது. அதிலும் குறிப்பாக சில வங்கிகளில் பிக்சட் டெபாசிட்திட்டத்தில் வட்டி அதிகம் கொடுக்கப்படுகின்றன. இந்த திட்டத்தில் முதலீடு செய்வதற்கு முன்பு எந்த வங்கியில் நல்ல வட்டி , லாபம் பெற முடியும் என்பதை நன்கு ஆராய்ந்து விசாரித்த பின்னரே வங்கியை தேர்வு செய்யுங்கள். ஏற்கெனவே ஒரு குறிப்பிட்ட வங்கியில் திட்டத்தை செயல்பாட்டில் வைத்திருப்பவர்கள் அவ்வப்போது வட்டி மாற்றங்களைப் பற்றியும் தொடர்ந்து அறிந்து வைத்திருங்கள்.

    அந்த வகையில் பேங்க் ஆஃப் இந்தியா வங்கி தனது நிலையான வைப்புக்களுக்கான வட்டி விகிதங்களை மாற்றியது உங்களுக்கு தெரியுமா? ரூ.2கோடிக்கும் குறைவான 7 நாள் முதல் 10 ஆண்டுகள் வரையிலான வெவ்வேறு டெபாசிட்களுக்கு வட்டி விகிதங்கள் மாற்றப்பட்டு அறிவிக்கப்பட்டுள்ளன. கூடவே சில சலுகைகளும் அறிவிக்கப்பட்டுள்ளன. அதுக்குறித்த முழு விபரம் இதோ உங்களுக்காக.ரூ.5 லட்சத்திற்கும் குறைவாக டெபாசிட் செய்து 12 மாதங்கள் முடிந்தபிறகு முன்கூட்டியே திரும்ப பெற்றால் அதற்கு வாடிக்கையாளர்களிடம் அபராதம் வசூலிக்கப்படாது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    அதுவே, ரூ.5 லட்சத்திற்கும் குறைவாக டெபாசிட் என்றால் 0.50% அபராதம் வசூலிக்கப்படும். ரூ. 5 லட்சத்திற்கும் மேற்பட்ட டெபாசிட் என்றால் 1.00% அபராதம் வசூலிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    1 வருடம் முதல் 2 வருடங்களுக்குள்ளான டெபாசிட் திட்டங்களுக்கு – 5.00% வட்டி வழங்கப்படுகிறது.
    2 ஆண்டுகள் முதல் 3 வருடங்களுக்குள்ளான டெபாசிட் திட்டங்களுக்கு -5.05% வட்டி வழங்கப்படுகிறது.
    3 ஆண்டுகள் முதல் 5 வருடங்களுக்குள்ளான டெபாசிட் திட்டங்களுக்கு 5.05% வட்டி வழங்கப்படுகிறது
    5 ஆண்டுகள் முதல் 8 வருடங்களுக்குள்ளான டெபாசிட் திட்டங்களுக்கு 5.05% வட்டி வழங்கப்படுகிறது
    8 ஆண்டுகள் முதல் 10 ஆண்டுகளுக்குள்ளான டெபாசிட் திட்டங்களுக்கு 5.05% வட்டி வழங்கப்படுகிறது



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Sreeja Sreeja
    First published: