எத்தியோபிய விமான விபத்திற்குப் பிறகு முதல் 737 மேக்ஸ் ஜெட் விமான ஆர்டர் பெற்ற போயிங்!

எத்தியோபிய விமான விபத்திற்குப் பிறகு முதல் 737 மேக்ஸ் ஜெட் விமான ஆர்டர் பெற்ற போயிங்!
போயிங்
  • News18
  • Last Updated: June 20, 2019, 3:57 PM IST
  • Share this:
எத்தியோபிய விமான விபத்திற்குப் பிறகும் பிரிட்டிஷ் ஏர்வேஸ் நிறுவனம் போயிங் 737 மேக்ஸ் விமானத்தை வாங்க முடிவு செய்துள்ளது.

சென்ற மார்ச் மாதம் எத்தியோபியன் ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்குச் சொந்தமான போயிங் 737 மேக்ஸ் ரக விமானம் ஒன்று விபத்துக்குள்ளானதில், அதில் பயணித்த 157 பேரும் உயிரிழந்தனர். முன்னதாக 5 மாதங்களுக்கு முன்பு இந்தோநோசியாவின் லயன் ஏர் நிறுவனத்துக்குச் சொந்தமான இதே ரக விமானம் விபத்துக்குள்ளானதில் அதில் பயணம் செய்த 189 பேரும் இறந்தனர்.

அதற்கு 5 மாதங்களுக்கு முன்பும் ஒரு 737 மேக்ஸ் ரக விமானம் விபத்துக்குள்ளாகியிருந்தது. எனவே இந்தியா, சீன உள்ளிட்ட பல்வேறு நாடுகள் போயிங் 737 மேக்ஸ் ரக விமானத்தை தங்கள் வான் பகுதியில் பறக்க தடைவிதித்தனர்.


அதன் பின்பும் அந்த விமானம் குறித்து இதுவரையிலும் பல்வேறு சர்ச்சைகள் எழுந்து வருகின்றன். இந்நிலையில் பிரிட்டிஷ் ஏர்வேஸ் நிறுவனம் 200 போயிங் மேக்ஸ் விமானத்தை வாங்கும் ஆர்டரை கொடுத்துள்ளது. இந்த ஆர்டரின் மதிப்பு 2400 கோடி டாலர் என்று கூறப்படுகிறது.

மறுபக்கம், போயிங் நிறுவனம் 737 மேக்ஸ் ரக விமான மென்பொருளை மாற்றும் பணிகளிலும் ஈடுபட்டு வருகிறது.

மேலும் பார்க்க:
First published: June 20, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்