ஹோம் /நியூஸ் /வணிகம் /

கறுப்புப் பண விவகாரம்: வெளியானது சுவிஸ் வங்கியில் பணம் வைத்திருப்பவர்கள் பட்டியல்! அடுத்து என்ன?

கறுப்புப் பண விவகாரம்: வெளியானது சுவிஸ் வங்கியில் பணம் வைத்திருப்பவர்கள் பட்டியல்! அடுத்து என்ன?

சுவிஸ் வங்கியில் கருப்பு பணம்

சுவிஸ் வங்கியில் கருப்பு பணம்

சுவிஸ் வங்கியில் கருப்பு பணம் வைத்திருக்கும் நூற்றுக்கணக்கான நபர்களின் கணக்குத் தகவல் வெளியாகியுள்ளது. அரசு, அடுத்து என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறது? இதைப் பற்றிய முழு விவரங்களை இங்கே பார்க்கலாம்.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  ஆயிரக்கணக்கான இந்தியர்கள் கோடிக்கணக்கான ரூபாய்களை சுவிட்சர்லாந்து நாட்டில் உள்ள வங்கியில் சேமித்து வைத்திருப்பதாகவும், இவை அனைத்துமே கணக்கில் வராத கருப்பு பணம் என்றும் கூறப்பட்டு வருகிறது. அது மட்டுமல்லாமல் இந்திய அரசு கருப்பு பணத்தை மீட்பதற்கு பல விதமான நடவடிக்கைகளையும் எடுத்து வருவதாகவும் பல காலமாக சொல்லப்பட்டு வந்துள்ளது. தற்பொழுது இந்த செய்தி உண்மையாகி இருக்கிறது.

  ஏற்கனவே பலமுறை சுவிட்சர்லாந்து, பண்டமாற்று முறை போல, தகவல் பரிமாற்றம் மூலம் கருப்பு பணம் வைத்திருப்பவர்களின் தகவல்களை வெளியிடுவதாக கூறி 74 நாடுகளிடம் தெரிவித்து, தகவல்களைப் பெற்றது. ஆனால் அதில் 27 நாடுகளுக்கு எந்தவிதமான தகவலையும் சுவிட்சர்லாந்து வெளியிடவில்லை.

  நீண்ட காலமாக இவ்வாறு கண்ணாமூச்சி ஆட்டம் நடந்து கொண்டிருந்தது. ஆனால் ஒருவழியாக தற்போது ஸ்விஸ் வங்கியில் வங்கி கணக்கு வைத்திருக்கும் இந்தியர்களின் பட்டியல் வெளியாகியுள்ளது. அதிலும் நான்காவது பட்டியல் வெளியாக இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

  Read More : எஸ்பிஐ உட்பட பல்வேறு வங்கிகளின் 90 லட்சம் பயனாளர்களின் கார்ட் பேமெண்ட் தகவல்கள் கசிந்தன - இதனால் பாதிப்பு ஏற்படுமா?

  வருடாந்திர, தானியங்கி தகவல் பரிமாற்றத்தின் (AEOI) கீழ் சுவிட்சர்லாந்து 34 லட்சம் கணக்குகள் பற்றிய விவரங்களை 101 நாடுகளுடன் பகிர்ந்துள்ளது. இதில், தனிநபர், கார்பரேட் நிறுவனங்கள் மற்றும் தொண்டு நிறுவனங்கள் ஆகியவற்றின் கணக்குகளும் இருக்கும்; ஒரு நபர் ஒன்றுக்கும் மேற்பட்ட கணக்குகளையும் வைத்திருக்கலாம் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சுவிட்சர்லாந்து, 101 நாடுகளைச் சார்ந்த நபர்களின் கணக்குகளை வெளியிட்டுள்ளது. இருப்பினும் ஃபெடரல் டாக்ஸ் அசோசியேஷன் அதை பற்றிய விவரங்களை வெளியிடவில்லை.

  தொடர்ச்சியாக நான்கு ஆண்டுகளாக கணிசமான எண்ணிக்கையில் இந்தியர்களின் சுவிஸ் நாட்டில் இருக்கும் வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களில் கணக்குகள் வைத்திருக்கிறார்கள் என்ற தகவல் வெளியாகி வருவதால், இந்தியா இந்த 101 நாடுகளில் முக்கியமான நாடாக இருக்கும் என்று கருதப்படுகிறது.

  Read More : ஆசையும் ஆர்வமும் மட்டும் இருந்தா போதாது.. டிஜிட்டல் கரன்சி பற்றி இதுவும் தெரிஞ்சுக்கோங்க!

  இந்த கணக்குகளைப் பற்றி வேறு எந்த குறிப்பிட்ட தகவலும் வெளியிடவில்லை. அவ்வாறு வெளியிட்டால் அது தகவல் பரிமாற்றத்தின் விதிமுறைகளை மீறுவதாக இருக்கும். அதுமட்டுமில்லாமல் கூடுதலாக மேற்கொள்ளக்கூடிய நடவடிக்கைகளை இது பாதிக்கலாம் என்று அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அது மட்டுமில்லாமல் யாரெல்லாம் வரி ஏய்ப்பு செய்து இருக்கிறார்கள், பண மோசடிகளில் ஈடுபட்டுள்ளனர், தீவிரவாத இயக்கத்துக்கு உதவி செய்துள்ளனர் என்பதை பற்றிய விவரங்களை பெறுவதற்கு இந்த தகவல் பெரிய அளவில் உதவியாக இருக்கும் என்றும் கூறியுள்ளனர்.

  எவ்வளவுதான் முறையாக வரி செலுத்தினாலும் கணக்கில் வராத பணம் வைத்திருப்பவர்களின் எண்ணிக்கை கணிசமாகத்தான் இருக்கிறது. இதில் கணக்கில் வராத சொத்து சேர்த்து இருப்பவர்கள், வருமானம் ஈட்டி இருப்பவர்கள், முதலீடு செய்திருப்பவர்கள் தங்களுடைய எல்லா வருமானங்களையும் முதலீடு வழியாக, பங்குகள் வழியாக வேறு நாடுகளில் டிரான்ஸ்ஃபர் செய்திருப்பவர்கள் உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் இந்த தானியங்கி தகவல் பரிமாற்ற திட்டத்தின் மூலம் எளிதில் தெரிந்து கொள்ள முடியும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

  Published by:Lilly Mary Kamala
  First published:

  Tags: Black money