Home /News /business /

ஆர்டர் செய்த 24 மணிநேரத்தில் வீட்டு வாசலில் பேக்கேஜ் குடிநீர் டெலிவரி - Bisleri App அறிமுகம்!

ஆர்டர் செய்த 24 மணிநேரத்தில் வீட்டு வாசலில் பேக்கேஜ் குடிநீர் டெலிவரி - Bisleri App அறிமுகம்!

பிஸ்லெரி

பிஸ்லெரி

App மூலம் செய்யப்படும் எந்தவொரு ஆர்டரும் 24 மணி நேரத்திற்குள் வாடிக்கையாளரின் வீட்டு வாசலில் டெலிவரி செய்யப்படுவதை அப்ளிகேஷன் உறுதி செய்யும் என்றும் கூறப்பட்டுள்ளது.

  • Trending Desk
  • 2 minute read
  • Last Updated :
பேக்கேஜ் செய்யப்பட்ட குடிநீரை விற்பனை செய்யும் நிறுவனமான பிஸ்லெரி இன்டர்நேஷனல் (Bisleri International), D2C சர்வீஸை (Direct To Consumer Service)அதாவது நுகர்வோருக்கு நேரடி சேவையை வழங்கும் ஸ்மார்ட் ஃபோன் App ஒன்றை உருவாக்கி அறிமுகப்படுத்தி இருக்கிறது. இந்த App-ன் பெயர் Bisleri@Doorstep என்பதாகும். இந்த புதுமையான மற்றும் யூஸர் ஃபிரெண்ட்லி ஆப், தற்போது நாட்டின் 26 நகரங்களில் ஆக்ட்டிவில் உள்ளது.

Bisleri@Doorstep-ன் அறிமுகம் பிஸ்லெரி இன்டர்நேஷனல் தனது இ-காமர்ஸ் முயற்சியை பெருக்கவும் நுகர்வோரின் வளர்ந்து வரும் தேவைகளை நிவர்த்தி செய்வதற்கும் மேற்கொண்டு வரும் முயற்சிகளின் ஒரு பகுதியாகும். பிஸ்லெரியின் இந்த புதிய App மூலம் வாடிக்கையாளர்கள் அவர்களின் மற்ற தேவைகளைப் போலவே பேக்கேஜ் செய்யப்பட்ட தண்ணீரை ஆர்டர் செய்து, தங்கள் வீட்டு வாசலில் டெலிவரியை பெற முடியும்.

மேலும் வாடிக்கையாளர்கள் வாரத்தின் 7 நாட்களும் 24 மணிநேரமும் (24*7) இதை பயன்படுத்தலாம் என்று பிஸ்லெரி நிறுவனம் கூறி இருக்கிறது. இந்த App-ஐ உருவாக்கும் யோசனை கோவிட்-19 தொற்றின் தீவிரம் காரணமாக போடப்பட்ட லாக்டவுன்களின் போது, நிறுவனம் வீட்டு வாசலில் மினரல் வாட்டரை வழங்க தொடங்கியதன் மூலம் ஏற்பட்டது.

ஹோம் டெலிவரியை தொடர்ந்து நிறுவனத்தின் அனைத்து தயாரிப்புகளையும் நுகர்வோர்கள் அணுகக்கூடிய ஒன்-ஸ்டாப் பிளாட்ஃபார்மின் வருகை குறித்து நிறுவனம் அறிவித்தது மிகவும் யூஸர் ஃபிரெண்ட்லி மற்றும் எளிதில் அணுக கூடியதாக மாற்ற, நிறுவனம்ஒன்-ஸ்டாப் இ காமர்ஸ் பிளாட்ஃபார்மை அறிமுகப்படுத்தியது. இங்கு வாடிக்கையாளர்கள் நிறுவனத்தின் அனைத்து தயரிப்புகளையும் அணுக முடியும்.

Also read... 2022-ல் அதிக ஊழியர்களை பணியமர்த்த திட்டமிட்டுள்ள ஐடி மற்றும் டெலிகாம் நிறுவனங்கள்!

கூடுதலாக, ஃபிரெஷ் மினரல் வாட்டரை தடையின்றி வழங்குவதை உறுதி செய்ய சந்தா வசதியையும் பிஸ்லேரி வழங்கியது. இந்நிலையில் தற்போது புதிதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள இந்த அப்ளிகேஷன் நிறுவனத்தின் இ-காமர்ஸ் பிரிவை வலுப்படுத்துவதற்கான முக்கிய படியாகும். ஆண்ட்ராய்டு மற்றும் iOS என இரண்டிலும் இந்த App-ஐ கிடைக்க செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Also read... Jio Balance : ரீசார்ஜ் பேலன்ஸை தெரிந்து கொள்ள இத்தனை வழிகள் இருக்கு தெரியுமா?

App மூலம் செய்யப்படும் எந்தவொரு ஆர்டரும் 24 மணி நேரத்திற்குள் வாடிக்கையாளரின் வீட்டு வாசலில் டெலிவரி செய்யப்படுவதை அப்ளிகேஷன் உறுதி செய்யும் என்றும் நிறுவனம் கூறி இருக்கிறது. பிஸ்லெரி மொபைல் App-ன் அறிமுகத்துடன், வாடிக்கையாளர்கள் ஆர்டர்களை மிக எளிதாக கையாளலாம் மற்றும் கண்காணிக்கலாம். யூஸர்கள் தொடர்ந்து ஃபிரெஷ் மினரல் வாட்டரை அணுகுவதை உறுதி செய்ய மெம்பர்ஷிப்பிற்காக sign up செய்யலாம் என்றும் நிறுவனம் கூறி இருக்கிறது.

Also read... Airtel ரீசார்ஜ் செய்திருப்பவர்கள் இந்த சேவையை தெரிந்து கொள்வது நல்லது!

இதனிடையே Bisleri International-ன் CEO ஏஞ்சலோ ஜார்ஜ் பேசுகையில், consumer profiles-களை உருவாக்க இந்த App-ன் மூலம் பெறப்பட்ட டேட்டாவை நிறுவனம் பயன்படுத்தும் என்றும், மேலும் வாடிக்கையாளர்களுடன் நிறுவனத்தின் தொடர்புக்கு உதவும் வகையில் வடிவமைக்கப்பட்ட தகவல் தொடர்பு நெட்வொர்க்கை செயல்படுத்தும் என்றும் கூறினார்.

மேலும் பேசிய ஏஞ்சலோ ஜார்ஜ், "வாடிக்கையாளர்களின் வீட்டு வாசலில் பேக்கேஜ் செய்யப்பட்ட குடிநீரை டெலிவரி செய்யும் முதல் நிறுவனமாக Bisleri மாறி இருக்கிறது. எங்களின் இந்த சேவையை பயன்படுத்த விரும்பும் நபர்களின் எண்ணிக்கை படிப்படியாக அதிகரித்து வருகிறது. எங்கள் வெப்சைட்டும் டிராஃபிக் கீழ் குறிப்பிடத்தக்க உயர்வை கண்டுள்ளது. இது உண்மையில் ஊக்கமளிக்கிறது. Bisleri@Doorstep-ஐ அறிமுகப்படுத்தியதன் விளைவாக சந்தாக்கள் இன்னும் வேகமாக அதிகரிக்கும் என்று நாங்கள் உறுதியாக நம்புகிறோம்" என்று கூறி இருக்கிறார்.
Published by:Vinothini Aandisamy
First published:

Tags: Business, Drinking water

அடுத்த செய்தி