உலகப் பணக்காரர்கள் பட்டியலில் இழந்த இடத்தைப் பிடித்த பில் கேட்ஸ்..!

இத்தகைய சூழலில்தான் மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் பங்குகள் உயர் மீண்டும் முதலிடத்தைக் கைப்பற்றியுள்ளார் பில் கேட்ஸ்.

உலகப் பணக்காரர்கள் பட்டியலில் இழந்த இடத்தைப் பிடித்த பில் கேட்ஸ்..!
பில் கேட்ஸ்
  • News18
  • Last Updated: November 16, 2019, 7:55 PM IST
  • Share this:
உலகப் பணக்காரர்கள் பட்டியலில் நேற்று வரையில் முதலிடத்தில் அமேசானின் ஜெஃப் பீசோஸ் இருந்தார்.

ஆனால், நேற்று மாலையில் மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் பங்குகள் திடீர் உச்சம் பெற்றதால் அந்நிறுவனத்தின் நிறுவனர் பில் கேட்ஸ் முதலிடத்தைப் பெற்றுள்ளார். பல ஆண்டுகளாக உலகப் பணக்காரர்கள் பட்டியலில் முதலிடத்தில் இருந்தவர் பில் கேட்ஸ்.

ஆனால், கடந்த 2018-ம் ஆண்டு அமேசான் நிறுவனத்தின் சிஇஓ ஜெஃப் பீசோஸ் உலகப் பணக்காரர்கள் வரிசையில் முதலிடத்தைப் பிடித்தார். ஆனால், பீசோஸ் தனது மனைவியை விவாகரத்து செய்ததால் தனது சொத்துகளின் பெரும் பகுதியை தனது மனைவிக்கு ஜீவனாம்சமாக வழங்கினார்.


இதனால், உலகப் பணக்காரர்கள் வரிசையில் பின் தங்கினார் பீசோஸ். இத்தகைய சூழலில்தான் மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் பங்குகள் உயர மீண்டும் முதலிடத்தைக் கைப்பற்றியுள்ளார் பில் கேட்ஸ். மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் பங்குகள் சுமார் 48 சதவிகித வளர்ச்சியைப் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் பார்க்க: வாடிக்கையாளர்களிடமிருந்து பேக்கிங் ப்ளாஸ்டிக் பைகளை திரும்பப்பெறும் ஃப்ளிப்கார்ட்!
First published: November 16, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading