உலகப் பணக்காரர் பட்டியலில் பில்கேட்ஸ்-க்கு மீண்டும் பின்னடைவு!

இந்தியாவின் மிகப் பெரிய கோடீஸ்வரரான முகேஷ் அம்பானி 51.8 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் 13 வது இடத்தில் உள்ளார்.

news18
Updated: July 18, 2019, 12:33 PM IST
உலகப் பணக்காரர் பட்டியலில் பில்கேட்ஸ்-க்கு மீண்டும் பின்னடைவு!
பில்கேட்ஸ், ஜெஃப் பிசோஸ், பெர்னார்ட் அர்னால்ட்
news18
Updated: July 18, 2019, 12:33 PM IST
உலகின் 2-வது மிகப்பெரிய பணக்காரர் என்ற அந்தஸ்தை, பிரான்ஸ் தொழிலதிபர் பெர்னார்ட் அர்னால்டிடம், பில்கேட்ஸ் பறிகொடுத்துள்ளார்.

உலகின் பெரும் பணக்காரர்களின் பட்டியலை புளூம்பர்க் நிறுவனம் வெளியிட்டு வருகிறது. அதில் பல ஆண்டுகளாக முதலிடத்தில் இருந்த பில்கேட்ஸை அமேசான் நிறுவனர் ஜெஃப் பெசோஸ் ஏற்கனவே பின்னுக்குத் தள்ளி முதலிடம் பிடித்தார்.

இந்நிலையில், பிரான்சின் LVMH நிறுவனத் தலைமைச் செயல் அதிகாரி பெர்னார்ட் அர்னால்ட் 2-ம் இடத்தில் இருந்த மைக்ரோசாஃப்ட் நிறுவனர் பில்கேட்ஸைப் பின்னுக்குத் தள்ளியிருப்பதாக புளூம் பர்க் கூறியுள்ளது.


தற்போதும் ஜெஃப் பெசோஸ் 125 பில்லியன் டாலர் சொத்துக்களுடன் முதலிடத்திலும், 108 பில்லியன் டாலர் சொத்துக்களுடன் பெர்னார்ட் 2-ம் இடத்திலும், 107 பில்லியன் டாலர் சொத்துக்களுடன் பில்கேட்ஸ் 3-ம் இடத்திலும் உள்ளனர்.

இந்தியாவின் மிகப் பெரிய கோடீஸ்வரரான முகேஷ் அம்பானி 51.8 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் 13 வது இடத்தில் உள்ளார்.

மேலும், இந்தியாவில் இருந்து அசிம் பிரேம்ஜி 20.5 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் 48வது இடத்திலும், ஹெச்.சி.எல் நிறுவனர் ஷிவ் நாடார் 92வது இடத்திலும், உதய் கோடாக் 96வது இடத்திலும் உலகப் பணக்காரர்கள் பட்டியலில் இடம்பெற்றுள்ளனர்.

Loading...

மேலும் பார்க்க:
First published: July 18, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...