சமீபத்தில் லூதியானாவில் நடந்த ஒரு சம்பவம் நாடு முழுவதும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. பைக் விபத்தில் இறந்த ஒரு நபரின் விபத்து காப்பீட்டு கிளைமை இன்சூரன்ஸ் நிறுவனம் ரத்து செய்துள்ளது. விபத்தில் உயிரிழந்த நபர் ஓட்டிச்சென்ற பைக்கின் என்ஜின் 150cc க்கும் அதிகமாக இருந்தது தான் கிளைம் மறுகப்பட்டதற்கான காரணம் என்று தெரிய வந்துள்ளது.
பைக் பிரியர்களுக்கு என்றே சமீப காலமாக எக்கச்சக்கமான மாடல்களில் நவீன அம்சங்களோடு பலவிதமான பைக்குகள் சந்தையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. அதிலும் அதிவேக பைக்குகளை பயன்படுத்துவது தற்போது ட்ரெண்ட் ஆகவே உள்ளது. பைக்குகளுக்கான காப்பீடு மட்டுமில்லாமல், கூடுதல் பாதுகாப்புக்காக தனிநபர் விபத்து காப்பீடும் வாங்க வேண்டியது அவசியமாகிவிட்டது. பெரும்பாலான வாகன ஓட்டிகள் தனிநபர் விபத்து காப்பீடு பெற்றுள்ள நிலையில், தனிநபர் விபத்து காப்பீடு கிளைம் பற்றிய முக்கியமான தகவல் ஒன்றை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும்.
உங்கள் பைக்கின் என்ஜின் 150சிசி-க்கும் அதிகமாக இருந்தால் மோட்டார் இன்ஷூரன்ஸ் பாலிசியின் படி இன்சூரன்ஸ் நிறுவனம் உங்கள் தனிநபர் விபத்துக் காப்பீடு கிளைமை மறுக்கலாம். மேற்கூறிய பாலிசி விதியை உண்மைகாக்கும் வகையில் சமீபத்தில் லூதியானாவில் ஒரு சம்பவம் நடந்தது. லூதியானாவில் சேர்ந்த ஒரு பைக்கர் பைக் ஓட்டிச்செல்லும் போது சாலை விபத்தில் இறந்துவிட்டார். இறந்தவர் தனிநபர் விபத்து காப்பீட்டு பெற்றிருந்தார்.
அவரின் குடும்பம் காப்பீட்டுக்கு கிளைம் கோரிய போது இன்சூரன்ஸ் நிறுவனம் கிளைமை மறுத்துவிட்டது. அதற்கான காரணமாக, அவர் ஓட்டிச் சென்ற பைக்கின் என்ஜின் 150சிசி அதிகமாக இருந்தது தான் என்று நிறுவனம் குறிப்பிட்டிருந்தது. இறந்தவர் ஓட்டி சென்ற பைக்கின் என்ஜின் 346 சிசி ஆகும். எனவே அவர் சாலை விபத்தில் உயிரிழந்து இருந்தாலும், உரிய பாலிசி வைத்திருந்தாலும், கிளைம் வழங்கப்படவில்லை. .
லூதியானாவில் பைக் விபத்தில் உயிரிழந்த நபர் தனிநபர் விபத்து காப்பீட்டை எச்டிஎப்சி எர்கோ இன்சூரன்ஸ் நிறுவனத்தில் பெற்றிருந்தார. காப்பீடு பெற்ற நபர் வாகனம் ஓட்டிச் செல்லும்போது உடல்ரீதியான பாதிப்பு அடைந்தாலோ அல்லது இறப்பு ஏற்பட்டாலோ, அவருடைய மோட்டார் ஸ்கூட்டர் அல்லது பைக் 150 சிசி இன்ஜினுக்கு அதிகமாக இருக்கும்போது பாலிசியின் நிபந்தனைகள் மற்றும் விதிமுறைகளின் பொது பிரிவு 8ன் படி விபத்து காப்பீட்டின் கிளைம் வழங்கப்படாது.
Also read... PM-KISAN: பிரதமரின் விவசாய திட்டம்... விவசாயிகளுக்கு காத்திருக்கும் தீபாவளி பரிசு!
மேற்கூறிய விதிமுறைகள் விபத்தில் உயிரிழந்த நபர் பெற்றிருந்த காப்பீட்டில் உள்ளன. விபத்து காப்பீடு இன்சூரன்ஸ் நிறுவனம் கிளைமை மறுத்த நிலையில் நாடு முழுவதுமே தனிநபர் விபத்து காப்பீடு பெற்றிருந்த பைக்கர்களிடம் இருந்து எதிர்வினையை ஏற்படுத்தியது. எனவே இன்ஷூரன்ஸ் நிறுவனம் இதைப் பற்றிய விளக்கம் அளிக்க வேண்டிய சூழ்நிலையும் ஏற்பட்ட து.
மிகவும் இக்கட்டான சூழ்நிலையில் உயிரிழந்த நபரின் குடும்பத்திற்கு பாலிசி கிளைம் மறுக்கப்பட்டது பலரிடமிருந்து கண்டனங்களை ஏற்படுத்தியுள்ளது. இதன் தொடர்ச்சியாக, எச் டி எப் சி எர்கோ வருத்தத்தை தெரிவித்துக் கொண்டு, கிளைம் தொகையை உயிரிழந்த நபரின் குடும்பத்திற்கு வழங்கியுள்ளது. நீங்கள் எந்த வகையான காப்பீடு வாங்கும் பொழுதும் அதில் உள்ள நிபந்தனைகள் மற்றும் விதிமுறைகளை தெளிவாக புரிந்துகொண்டு காப்பீட்டை பெற்றுக் கொள்ளவும்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Accident, Insurance, Personal Finance