ஹோம் /நியூஸ் /வணிகம் /

ரூ.37.5 லட்சம் வரி பாக்கி கட்ட சொல்லி கூலி தொழிலாளிக்கு நோட்டீஸ் அனுப்பிய அதிகாரிகள்..

ரூ.37.5 லட்சம் வரி பாக்கி கட்ட சொல்லி கூலி தொழிலாளிக்கு நோட்டீஸ் அனுப்பிய அதிகாரிகள்..

மாதிரிப்படம்

மாதிரிப்படம்

அவர் பான் கார்டுடன் இணைக்கப்பட்ட கணக்கின் வருமானத்திற்கு ரூ. 37.5 லட்சம் "பாக்கி" செலுத்த உத்தரவிட்டு நோட்டீஸ் அனுப்பியிருந்தனர்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Bihar |

பீகார் மாநிலத்தின் ககாரியா மாவட்டத்தில் உள்ள மகுனா கிராமத்தில் வசிப்பவர் கிரிஷ் யாதவ். ஒரு நாளுக்கு 500 ரூபாய் சம்பளத்திற்கு கூலி வேலை செய்து வருகிறார்.

இவருக்கு சில நாட்கள் முன்பு வரித்துறையிடம் இருந்து ஒரு நோட்டீஸ் வந்துள்ளது. அதில் அவர் பானில் இணைக்கப்பட்ட கணக்கின் வருமானத்திற்கு ரூ. 37.5 லட்சம் "பாக்கி" செலுத்த உத்தரவிட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டு இருந்தது.

ஒரு நாளைக்கு சுமார் ரூ.500, சம்பளம் வாங்கும் கிரிஷ் இதைக் கண்டு அதிர்ந்துள்ளார். உடனே தனக்கு அருகில் உள்ள அலாலி காவல் நிலையத்தை அணுகியுள்ளார். அவர் கொடுத்த புகாரின் படி எஃப்.ஐ.ஆர் பதிந்து  போலீசார் விசாரித்து வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் இது ஒரு மோசடி வேலை என்று தெரியவந்துள்ளது.

இந்தியாவில் 82 குழந்தைகளுக்கு பரவியுள்ள தக்காளி காய்ச்சல்.. இதன் பாதிப்பு என்ன?

கிரீஷ் டெல்லியில் கூலிவேலை செய்யும் போது ஒரு இடைத்தரகர் மூலம் பான் கார்ட் வாங்க முயற்சித்துள்ளார். ஆனால் இடைத்தரகரிடம் இருந்து எந்தத் தகவலும் வராததால் அதை அப்படியே விட்டுள்ளார். ஆனால் அந்த பான் எண்ணின் கீழ்தான் இப்போது நோட்டிஸ் வந்துள்ளது.

வருமானத்துறை அறிக்கையின்படி கிரீஷ் ராஜஸ்தானில் உள்ள ஒரு நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். ரூ 3.75 லட்சம் வரி பாக்கி செலுத்தாமல் விட்டுள்ளார் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் போலீஸ் விசாரணையில், தான் ராஜஸ்தானுக்கு சென்றதில்லை என்றும் குறிப்பிட்ட அந்த நிறுவனம் குறித்துத் தனக்கு எதுவும் தெரியாது என்றும் அவர் தெரிவித்துள்ளார். இது வருமான வரித்துறையின் தவறா? இடைத்தரகர்  மோசடியா ? என்ற பார்வையில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்

Published by:Ilakkiya GP
First published:

Tags: Income tax