• HOME
  • »
  • NEWS
  • »
  • business
  • »
  • Bigbasket ஆஃப்லைன் ரீடெயில் விற்பனையில் நுழைந்தது - 200 Fresho ஸ்டோர்கள் திறக்க இலக்கு

Bigbasket ஆஃப்லைன் ரீடெயில் விற்பனையில் நுழைந்தது - 200 Fresho ஸ்டோர்கள் திறக்க இலக்கு

Big Basket

Big Basket

BigBasket நிறுவனம் Fresho ஸ்டோர்கள் மூலம் ஆஃப்லைன் ரீட்டெயில் பிசினஸில் நுழைந்துள்ளது.

  • Share this:
டாடாவுக்கு சொந்தமான ஆன்லைன் மளிகை விற்பனையாளரான பிக்பாஸ்கெட் (BigBasket) நிறுவனம், கர்நாடக மாநிலத் தலைநகர் பெங்களூருவில் ஃப்ரெஷோ (Fresho) என்ற பிராண்ட் பெயரில் தனது முதல் ஃபிசிக்கல் ஸ்டோரை திறந்து உள்ளது. இதன் மூலம் BigBasket நிறுவனம் ஆஃப்லைன் ரீட்டெயில் பிசினஸில் நுழைந்துள்ளது. பெங்களூருவில் உள்ள பசவேஷ்வர் நகரில் தற்போது புதிதாக அமைக்கப்பட்டுள்ள Fresho ஸ்டோர், பிக் பாஸ்கெட்டின் "ஃபார்மர் கனெக்ட்" (Farmer Connect) திட்டத்தில் பங்கேற்ற 3 விவசாயிகளால் திறக்கப்பட்டு உள்ளது.

மேலும் வரும் 2023-ஆம் நிதியாண்டில் நாடு முழுவதும் சுமார் 200 Fresho ஃபிசிக்கல் அவுட்லெட்களைத் திறக்கத் திட்டமிட்டுள்ளதாக பிக்பாஸ்கெட் நிறுவனம் கூறி இருக்கிறது. தவிர வரும் 2026-ஆம் ஆண்டுக்குள் 800 Fresho ஸ்டோர்களை உருவாக்க உள்ளதாக BigBasket-ன் இணை நிறுவனரும் தலைமை நிர்வாக அதிகாரியுமான ஹரி மேனன் கூறி இருக்கிறார். இது குறித்து பேசிய ஹரி மேனன், தங்களது இந்த ஃப்ரெஷோ ஸ்டோர்கள் உயர்தர தயாரிப்புகளை மிகவும் போட்டி விலையில் வழங்கும். ஃப்ரெஷோ ஸ்டோர்கள் மூலம் வாடிக்கையாளர்கள் தங்கள் விருப்பத்திற்கு ஏற்றவாறு பழங்கள் மற்றும் காய்கறிகள் மற்றும் பிரெட் முட்டை போன்ற தினசரி அத்தியாவசிய பொருட்களை ப்ரெஷ்ஷாக வாங்கி கொள்ள முடியும் என்றார்.

Also read:  புதிய Yamaha FZ-X பைக் எப்படி இருக்கு? ஒரு ரைட் ரிப்போர்ட்

பிக்பாஸ்கெட் எப்போதுமே வாடிக்கையாளர்களுக்கு முன்னுரிமை அளிக்கும் அணுகுமுறையை தொடர்ந்து கடைப்பிடித்து வருகிறது. பழங்கள், காய்கறிகள் மற்றும் மளிகைப் பொருட்கள் வாங்குவதை ஏடிஎம்-களில் பணப் பரிவர்த்தனை செய்வது போல் தடையின்றி செய்யும் வகையில் 'ஃப்ரெஷோ' கடைகள் கேம் சேஞ்சர்களாக இருக்கும். மேலும் எங்களது இந்த ஃப்ரெஷோ ஸ்டோர்கள் இன்னும் ஆன்லைனில் மளிகைப் பொருட்களை வாங்க தொடங்காத சுமார் 500 மில்லியன் வாடிக்கையாளர்களுக்கு அணுகலை வழங்கும் மற்றும் பிக்பாஸ்கெட்டுக்கு புதிய குறிப்பிடத்தக்க வளர்ச்சி வாய்ப்பை உருவாக்கும் என்று கூறி இருக்கிறார்.

மேலும் பேசிய ஹரி மேனன், ஃப்ரெஷோ ஸ்டோர்களில் சேமித்து வைக்கப்படும் தயாரிப்புகள் நிறுவனத்தின் விரிவான 'ஃபார்மர் கனெக்ட்' திட்டத்தால் சப்போர்ட் செய்யப்படுகின்றன. இதற்காக பிக்பாஸ்கெட் நம் நாடு முழுவதும் உள்ள 30,000 விவசாயிகளிடமிருந்து பழங்கள் மற்றும் காய்கறிகளை நேரடியாகப் பெறுகிறது.

Also read:   Netflix வெப்சீரிஸ் தொடர் பார்த்த வடகொரிய மாணவருக்கு ஆயுள் தண்டனை; ஒருவருக்கு மரண தண்டனை

எங்களது ஃப்ரெஷோ ஸ்டோர்கள் கடையில் புதிய பழங்கள் மற்றும் காய்கறிகளை விற்பனை செய்யும் அதே நேரத்தில் BigBasket-ன் பரந்த அளவிலான 50,000-க்கும் மேற்பட்ட தயாரிப்புகளை பெற, வாடிக்கையாளர்கள் Fresho App மூலம் அவற்றை ஆன்லைனில் ஆர்டர் செய்யலாம் அல்லது அவர்களின் வசதிக்கேற்ப Fresho ஸ்டோர்களுக்கு நேரடியாக சென்று அவற்றை வாங்கி கொள்ளலாம் என்றார்.

பெரும்பாலான வாடிக்கையாளர்கள் இன்னும் மளிகை சாமான்கள் மற்றும் புதிய பொருட்களுக்கான ஆஃப்லைன் ஷாப்பிங்கை விரும்புவது எங்களது Fresho ஸ்டோர் வளர்ச்சி பெற பெரும் வாய்ப்பாக அமையும் என்று கருதுவதாகவும் கூறினார். ஒவ்வொரு ஃப்ரெஷோ ஸ்டோரும் சுமார் 2,000 சதுர அடி அளவில் இருக்கும் மற்றும் ரூ. 50-70 லட்சம் வரை முதலீடு தேவைப்படும் என்று big basket கூறி இருக்கிறது. பெங்களூரில் தொடங்கப்பட்ட ஃப்ரெஷோ ஸ்டோரில் வீடியோ AI கருவிகளுடன் ஒருங்கிணைக்கப்பட்ட செல்ஃப் -பில்லிங் கவுண்டர்கள் உள்ளன. இது வாடிக்கையாளர்கள் தங்களுக்கு விருப்பமான பொருட்களைத் தேர்ந்தெடுத்து அவற்றை எடைபோட உதவுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Arun
First published: