ஹோம் /நியூஸ் /வணிகம் /

மைக்ரோசாப்ட் முதல் அமேசான் நிறுவனம் வரை... 2023ல் தொழில்நுட்ப உலகில் மிகப்பெரிய மாற்றங்கள்

மைக்ரோசாப்ட் முதல் அமேசான் நிறுவனம் வரை... 2023ல் தொழில்நுட்ப உலகில் மிகப்பெரிய மாற்றங்கள்

நிறுவனங்கள்

நிறுவனங்கள்

அமேசான் மற்றும் மைக்ரோசாப்ட் போன்ற பெரிய நிறுவனங்கள் உட்பட பல நிறுவனங்கள் தற்போது பெரிய அளவில் ஆட்குறைப்பு நடவடிக்கையில் ஈடுப்பட்டவருகின்றன.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

புத்தாண்டு தொடங்கி சில நாட்களே ஆகி உள்ள நிலையில் தொழில்நுட்ப துறையில் எண்ணற்ற மாற்றங்கள் தற்போது ஏற்பட்டு வருகிறது. குறிப்பாக பொருளாதார மந்தநிலை காரணமாக வேலையில் பணியாட்களை குறைக்கும் நோக்கில் பல தொழில்நுட்ப நிறுவனங்கள் இறங்கி உள்ளன. இதன் பட்டியல் நாளுக்கு நாள் பெரிதாகி வருகிறது என்பது தான் வருத்தத்திற்குரிய விஷயம். மேலும், பணியாட்களின் குறைப்பு அளவிடுதலின் ஒரு பகுதியாக, சமீபத்திய பட்டியலில் சேர்ந்த பெரிய நிறுவனம் மைக்ரோசாப்ட் ஆகும். இந்நிறுவனம் மனித வளம் மற்றும் பொறியியல் பிரிவுகளில் ஆயிரக்கணக்கான ஊழியர்களை பணியில் இருந்து வெளியேற்ற திட்டமிட்டுள்ளது.

மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் இந்த ஆண்டு குறிப்பிட்ட எண்ணிக்கையிலான பணிநீக்கங்கள் குறித்த செய்திகள் வெளியிடப்படவில்லை என்றாலும், கடந்த ஆண்டில் மைக்ரோசாப்ட் செய்த இந்த ஆட்குறைப்பு விகிதம் கணிசமாக அதிக அளவில் உள்ளது என்று ஆய்வறிக்கைகள் கூறுகின்றன. பொருளாதார மந்தநிலை காரணமாகவும், விற்பனை வளர்ச்சியை குறைக்கும் வகையிலும், அமேசான் நிறுவனம் அதிக அளவிலான ஊழியர்களை பணியில் இருந்து வெளியேற்ற தயாராக உள்ளது. மேலும், இந்நிறுவனம் தனது 18,000 ஊழியர்களை இந்த மாத தொடக்கத்தில் பணி நீக்கம் செய்தது. இதனால் ஆயிரக்கணக்கான ஊழியர்கள் நேரடியாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதே போன்று விமியோ, ஷேர்சாட், சிஸ்கோ சிஸ்டம்ஸ், இன்டெல் கார்ப்., மெட்டா, குவால்காம் மற்றும் சேல்ஸ்ஃபோர்ஸ் உட்பட பல பெரிய தொழில்நுட்ப நிறுவனங்களும் தங்களது ஊழியர்களை பணி நீக்கம் செய்ய தொடங்கி உள்ளனர். சமீபத்திய அறிக்கையின்படி, அமேசான், விமியோ, சேல்ஸ்ஃபோர்ஸ் ஆகிய நிறுவனங்கள் ஜனவரி 2023 இன் முதல் ஆறு நாட்களில் கிட்டத்தட்ட 30,611 பேரை பணிநீக்கம் செய்ததாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் சில நாட்களுக்கு முன்பு, கூகுள் ஆதரவுடன் செயல்படும் ஷேர்சாட் நிறுவனம், தனது ஊழியர்களில் 20 சதவீதம் பேரை பணிநீக்கம் செய்துள்ளதாக அறிவித்துள்ளது. இது குறித்து ஷேர்சாட் தலைமை நிர்வாக அதிகாரியான அங்குஷ் சச்தேவா கூறுகையில், "தற்போதைய உலக பொருளாதார சரிவு மிகவும் நீடித்ததாக இருக்கும் என்று வளர்ந்து வரும் சந்தையில் ஒருமித்த கருத்து உள்ளது, எனவே, துரதிர்ஷ்டவசமாக, எங்கள் குழுவின் அளவைக் குறைப்பதன் மூலம் அதிக செலவு சேமிப்புகளை மேற்கொள்ள முடியும்" என்று தனது நிறுவனம் நினைப்பதாக குறிப்பிட்டுள்ளார்.

Also Read : சீனியர் சிட்டிசன்களுக்கு மத்திய அரசின் சூப்பரான பென்சன் திட்டம்; ஆண்டுக்கு ரூ.1.1 லட்சம் வருமானம்... இதோ முழு விபரம்!

சேல்ஸ்ஃபோர்ஸ் இன்க் என்கிற ஒரு பெரிய மென்பொருள் நிறுவனமானது அதன் ஊழியர்களில் சுமார் 10 சதவீதம் பேரை பணிநீக்கம் செய்யப்போவதாகக் கூறியுள்ளது. பொருளாதார மந்தநிலை காரணமாக சேல்ஸ்ஃபோர்ஸ் நிறுவனமும் அதன் மறுசீரமைப்பு திட்டத்தின் ஒரு பகுதியாக சில அலுவலகங்களை மூடுவதாகவும் அறிவித்துள்ளது.

இந்த நிறுவனங்களைத் தவிர, டிவிட்டர், மெட்டா, ஹச்பி, பைஜுவ்ஸ், அன்அகாடெமி, கோல்டன் சாச்ஸ் குரூப், மோரன் ஸ்டான்லி, இன்டெல் கார்ப், ஜான்சன் & ஜான்சன், ஸ்நாப்சாட் ஆகிய நிறுவனங்களும் தற்போது பணிநீக்கங்களை அறிவித்துள்ளன. இது பெரிய அளவில் பல லட்ச ஊழியர்களை பாதித்து வருகிறது.

First published:

Tags: Amazon, Jobs, Microsoft, Unemployment, Wipro