ஹோம் /நியூஸ் /வணிகம் /

57% அதிகம்.. ரீசார்ஜ் விலையை அதிரடியாக உயர்த்திய ஏர்டெல்.. பயனர்கள் ஷாக்!

57% அதிகம்.. ரீசார்ஜ் விலையை அதிரடியாக உயர்த்திய ஏர்டெல்.. பயனர்கள் ஷாக்!

ஏர்டெல்

ஏர்டெல்

குறைந்தபட்ச ரீசார்ஜை ஏர்டெல் அதிரடியாக உயர்த்தியுள்ளது

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Chennai |

தொலைத்தொடர்பு நிறுவனங்கள் அனைத்தும் தனது கட்டணங்களை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.  சந்தாக்களை மட்டும் அல்லாமல் குறைந்தபட்ச ரீசார்ஜ் தொகையையும் தற்போது அதிகரித்து வருகிறது. அந்த வரிசையில் பாரதி ஏர்டெல் நிறுவனம் தனது குறைந்தபட்ச ரீசார்ஜ் பிளான் தொகையை 99 ரூபாயில் இருந்து 155 ரூபாயாக அதிகரித்துள்ளது. இதன் மூலம் ரூ.99 பேக் மூலம் ரீசார்ஜ் செய்யும் ஏர்டெல் வாடிக்கையாளர்களுக்கு, மாதாந்திர அடிப்படையில் 57 சதவீதம் அதிகமாக செலுத்த வேண்டும்.

ஏர்டெல் குறைந்தபட்ச ரீசார்ஜ் திட்டமான ரூ.99,  மூலம்  200எம்பி டேட்டா மற்றும் அழைப்புகளை வினாடிக்கு ரூ.2.5 பைசா வீதம் 28 நாட்களுக்கு வழங்கி வந்தது. ஏர்டெல் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் முதல் இந்த திட்டத்தை ஒடிசா மற்றும் ஹரியானா ஆகிய இரண்டு வட்டங்களில் ரத்து செய்தது.

அதை தொடர்ந்து தற்போது ஆந்திரப் பிரதேசம், பீகார், இமாச்சலப் பிரதேசம், கர்நாடகா, வடகிழக்கு, ராஜஸ்தான் மற்றும் உத்தரப் பிரதேசம் ஆகிய ஏழு வட்டங்களில் ரூ.99 ரீசார்ஜ் திட்டத்தை ஏர்டெல் நிறுவனம் நிறுத்தியுள்ளதாக அறிவித்துள்ளது.  அதோடு கடந்த ஆண்டு, ஏர்டெல் மற்றும் ஜியோ இரண்டும் சில திட்டங்களில் OTT நன்மைகளை நிறுத்தியது. ஆனால் தற்போது தேர்ந்தெடுக்கப்பட்ட ஏர்டெல் ப்ரீபெய்ட் திட்டங்களில்  OTT சந்தாக்களை மீண்டும் அறிமுகப்படுத்தியுள்ளது.

கட்டண உயர்வு தொடர்பாக கூறுகையில் "சிறந்த வாடிக்கையாளர் அனுபவத்தை வழங்குவதில் கவனம் செலுத்தும் வகையில், நாங்கள் மீட்டர் கட்டணத்தை நிறுத்திவிட்டு, வரம்பற்ற குரல், 1 ஜிபி டேட்டா மற்றும் 300 எஸ்எம்எஸ் ஆகியவற்றுடன் ரூ. 155  திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளோம். வாடிக்கையாளர் இந்த திட்டத்தை எந்த தடையும் இல்லாமல் பயன்படுத்தலாம்’’ என்று ஏர்டெல் செய்தித் தொடர்பாளர் கூறினார்.

First published:

Tags: Airtel, Recharge Plan