ஹோம் /நியூஸ் /வணிகம் /

5ஜி சேவையால் டேட்டா வேகமா காலியாகுதா? ஏர்டெல் வழங்கும் சூப்பர் டேட்டா வவுச்சர் பிளான்

5ஜி சேவையால் டேட்டா வேகமா காலியாகுதா? ஏர்டெல் வழங்கும் சூப்பர் டேட்டா வவுச்சர் பிளான்

ஏர்டெல்

ஏர்டெல்

எக்ஸ்ஸ்ட்ரீம் ஆப் சப்ஸ்கிரிப்ஷன் 28 நாட்களுக்கு மட்டுமே என்பதையும், மேலும் இந்த 28 நாட்களுக்கு யூஸர்கள் ஏதாவது ஒரு பிளாட்ஃபார்மை மட்டுமே தேர்வு செய்ய முடியும் என்பதையம் யூஸர்கள் நினைவில் கொள்ள வேண்டும்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

நாட்டின் இரண்டாவது பெரிய டெலிகாம் ஆப்ரேட்டரான  ஏர்டெல் நிறுவனம் தற்போது தனது வாடிக்கையாளர்களுக்கு ரூ150-க்கும் குறைவான விலையில் OTT (ஓவர்-தி-டாப்) பெனிஃபிட்ஸ்களை அளிக்கும், ப்ரீபெய்ட் 4ஜி டேட்டா வவுச்சரை வழங்குகிறது.

இந்த பிளான் மூலம் ரூ.150-க்குள் ஏர்டெல் யூஸர்கள் ஏராளமான டேட்டாவுடன் OTT நன்மைகளையும் சேர்த்து பெறலாம்.  இவை வாடிக்கையாளர்கள் நாட்டில் புதிதாக அறிமுகமாகி இருக்கும் 5ஜி-யை சிறப்பாக அனுபவிக்க உதவும். ஏனென்றால் இன்னும் 5ஜி சேவைக்கென்று தனியாக கட்டணங்கள் நிர்ணயிக்கப்படவில்லை. எனவே யூஸர்கள் தங்களது 4ஜி பிளான்கள் வழியே தேர்ந்தெடுக்கப்பட்ட நகரங்களில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள 5ஜி-யை பயன்படுத்துகிறார்கள்.

எனினும் 4G -ஐ விட 5G அதிவேகமுடையது என்பதால் அடிப்படை 4G திட்டங்கள் பல யூஸர்களுக்கு போதுமானதாக இல்லை. எனவே சீக்கிரம் காலியாகி விடும் டேட்டா பிரச்சனையை சமாளிக்க டேட்டா வவுச்சர் பிளான்கள் உதவுகின்றன. தற்போது நாம் இங்கே  ஏர்டெல் நிறுவனத்தின் ரூ.148 டேட்டா வவுச்சர் பற்றி பார்க்க போகிறோம். இந்த பிளானில் யூஸர்கள் ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் அக்சஸ்-உடன் கூடுதலாக 15GB ஆட்-ஆன் டேட்டாவை 28 நாட்கள் வேலிடிட்டியில் பெறுகிறார்கள். ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீமில் பல பிளாட்ஃபார்ம்கள் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் SonyLIV, LionsgatePlay, Eros Now, Hoichoi மற்றும் பல பிளாட்ஃபார்ம்கள் யூஸர்கள் 28 நாட்களுக்குத் தேர்வு செய்ய கிடைக்கும்.

Read More | கூகுள் பேயில் அதிக கேஷ்பேக் பெற எளிமையான வழிகள் இதோ!

எக்ஸ்ஸ்ட்ரீம் ஆப் சப்ஸ்கிரிப்ஷன் 28 நாட்களுக்கு மட்டுமே என்பதையும், மேலும் இந்த 28 நாட்களுக்கு யூஸர்கள் ஏதாவது ஒரு பிளாட்ஃபார்மை மட்டுமே தேர்வு செய்ய முடியும் என்பதையம் யூஸர்கள் நினைவில் கொள்ள வேண்டும். ரூ.148 பிளானின் வேலிடிட்டியை பொறுத்தவரை இது யூஸர்களின் பேசிக் ப்ரீபெய்ட் பிளானை போன்றே இருக்கும். அதாவது இந்த பிளான் ஸ்டான்ட்அலோன் வேலிடிட்டியுடன் வரவில்லை.

ரூ.148-க்கு 15GB எனும்போது 1GB டேட்டாவின் விலை ரூ.9.86-ஆக இருக்கிறது.

இந்த ரூ.148 பிளானை தவிர யூஸர்கள் தேர்வு செய்ய வேறு சில டேட்டா பேக்ஸ்களும் உள்ளன. ரூ.19 பிளான் 1GB டேட்டா மற்றும் 1 நாள் வேலிடிட்டியுடன் வருகிறது. ரூ.58 பிளான் 3GB டேட்டாவுடன் யூஸரின் பேசிக் பிளான் வேலிடிட்டி வரை வரும். மிக சமீபத்தில் ஏர்டெல் ரூ.65 பிளானை அறிமுகப்படுத்தியது, இது 4GB டேட்டாவுடன் வருகிறது. இதுவும் குறிப்பிட்ட யூஸரின் பேசிக் ப்ரீபெய்ட் பிளான் வரை வேலிடிட்டியை கொண்டிருக்கிறது. ஏர்டெல் வழங்கும் முழு டேட்டா பேக் வவுச்சர் பற்றிய விவரங்களுக்கு ஏர்டெலின் அதிகாரப்பூர்வ வெப்சைட் அல்லது அல்லது ஏர்டெல் ஆப்-ற்கு யூஸர்கள் விசிட் செய்யலாம். விரைவில் புதிய ஆண்டு துவங்க உள்ளதால் நிறுவனம் மேலும் பல ரீசார்ஜ் பிளான்களை அறிமுகபடுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

First published:

Tags: Airtel, Mobile Data, Technology