நாளை நாடு தழுவிய மாபெரும் ’பாரத் பந்த்’- வங்கி சேவைகள் பெரிதும் பாதிக்க வாய்ப்பு!

மத்திய அரசு போராட்டத்தில் ஈடுபடுவோர் கடுமையான விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என்ற எச்சரிக்கையையும் விடுத்துள்ளது.

நாளை நாடு தழுவிய மாபெரும் ’பாரத் பந்த்’- வங்கி சேவைகள் பெரிதும் பாதிக்க வாய்ப்பு!
மாதிரிப்படம்
  • News18
  • Last Updated: January 7, 2020, 6:05 PM IST
  • Share this:
நாளை நாடு தழுவிய வேலைநிறுத்தப் போராட்டத்தால் வங்கி சார்ந்த சேவைகள் பெரிதும் பாதிக்கப்படும் எனக் கூறப்படுகிறது.

நாடு முழுவதும் உள்ள 9 மத்திய வர்த்தக யூனியன்கள் இணைந்து அரசின் ‘முதலீடுகளைத் திரும்பப் பெறும் திட்டம், தனியார்மயமாக்கல், தொழிலாளர் சீர்திருத்தக் கொள்கைகள்' ஆகியவற்றுக்கு எதிர்ப்புத் தெரிவித்து இந்த வேலைநிறுத்தப் போராட்டத்தை மேற்கொள்கின்றனர்.

நாடு முழுவதும் சுமார் 25 கோடிக்கும் அதிகமான தொழிலாளர்கள் இந்த வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுகின்றனர். நாடு முழுவதிலும் உள்ள அத்தனை வங்கிகளும் மூடப்பட்டு இருக்கும் என்பதால் வங்கி சேவை பெரிதும் பாதிக்கப்படும் எனக் கூறப்படுகிறது.


ஏடிஎம் சேவைகள் உட்பட அனைத்தும் சிக்கலாகும். ஜனவரி 8-ம் தேதி காலை 6 மணிக்குத் தொடங்கும் இந்த வேலைநிறுத்தம் அடுத்த 24 மணி நேரத்துக்கு நீடிக்கும். ஆனால், மத்திய அரசு போராட்டத்தில் ஈடுபடுவோர் கடுமையான விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என்ற எச்சரிக்கையையும் விடுத்துள்ளது.

மேலும் பார்க்க: அமெரிக்கா- ஈரான் பிரச்னையால் தொடர்ந்து அதிகரிக்கும் பெட்ரோல், டீசல் விலை!
First published: January 7, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்