Home /News /business /

Bharat Bandh | 18 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள 20 லட்சம் காசோலைகள்..! - வங்கி ஊழியர்கள் ஸ்ட்ரைக்கால் முடக்கம்

Bharat Bandh | 18 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள 20 லட்சம் காசோலைகள்..! - வங்கி ஊழியர்கள் ஸ்ட்ரைக்கால் முடக்கம்

மாதிரிப்படம்

மாதிரிப்படம்

Bharat Bandh Impact | நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் சங்கத்தினர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டதன் விளைவாக அன்றாட வங்கி சேவைகள் பெருமளவில் பாதிக்கப்பட்டன.

    மத்திய அரசின் பொருளாதார கொள்கைகளை கண்டித்து வங்கி ஊழியர்கள் நாடு தழுவிய அளவில் இரண்டு நாட்கள் போராட்டம் நடத்தியதன் விளைவாக 18 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள காசோலைகள் பரிவர்த்தனை முடங்கியது.

    12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, நாடு தழுவிய அளவில் சிஐடியு, ஏஐடியுசி, ஐஎன்டியுசி உள்ளிட்ட தொழிற்சங்கங்கள் இரண்டாவது நாளாக நேற்று வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டன. பொது வேலைநிறுத்தத்தையொட்டி கர்நாடகா மாநிலம் கல்புரகியில் சிஐடியு தொழிற்சங்கத்தினர் மற்றும் இடதுசாரி அமைப்பினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது, மத்திய அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர். இதையடுத்து பாதுகாப்புக்காக அங்கு போலீசார் குவிக்கப்பட்டனர்.

    Also Read: Anbil Mahesh | பள்ளி மாணவர்களுக்கு கோடை விடுமுறை எப்போது? - அமைச்சர் அன்பில் மகேஷ் பதில்

    இடதுசாரி ஆளும் கேரள மாநிலத்தில் தொழிற்சங்கங்கள் போராட்டத்தால் 2-வது நாளாக இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. திருவனந்தபுரத்தில் கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டன. பேருந்துகள், ஆட்டோ, டாக்சி உள்ளிட்ட வாகனங்கள் ஓடாததால் முக்கிய சாலைகள் வெறிச்சோடி காட்சியளித்தன. தலைமை செயலகத்தில் 4,800 ஊழியர்கள் பணியாற்றி வரும் நிலையில், 200 க்கும் குறைவான ஊழியர்களே பணிக்கு வருகை தந்தனர். பணிக்கு வந்த ஒரு சில ஊழியர்களை ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சி தொழிற்சங்கத்தினர் தடுத்து நிறுத்தியதாகக் குற்றச்சாட்டு எழுந்தது.

    Also Read: பெட்ரோல், டீசல் விலை இன்றும் (மார்ச் 30-2022) உயர்ந்தது.. அத்தியாவசிய பொருட்களின் விலை உயரும் அபாயம்..

    புதுச்சேரியில் 2-வது நாளாக கடைகள் அடைக்கப்பட்டன. எனினும் அரசு அலுவலகங்கள் வழக்கம் போல் செயல்பட்டன. பேருந்துகள் இயங்கியதால் பெரியளவில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படவில்லை. 2-வது நாளாக நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் சங்கத்தினர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். இதன் விளைவாக அன்றாட வங்கி சேவைகள் பெருமளவில் பாதிக்கப்பட்டன.

    இந்த வேலைநிறுத்தம் காரணமாக அரசின் கருவூல கணக்குகள் கையாள முடியவில்லை. வாடிக்கையாளர்கள் கணக்கில் பணம் போடுவது, எடுப்பது, காசோலை பரிவர்த்தனை போன்ற சேவைகள் முடக்கப்பட்டன. சென்னையில் இயங்கும் தென்னக காசோலை பரிவர்த்தனை நிலையத்தில் சுமார் 5 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள 6 லட்சம் காசோலைகள் 2 நாட்களில் பரிவர்த்தனை ஆகாமல் கிளைகளில் தேங்கின. தேசிய அளவில் சுமார் 18 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள 20 லட்சம் காசோலைகள் முடங்கியதாக வங்கி ஊழியர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

     
    Published by:Ramprasath H
    First published:

    Tags: Bank Strike, Bharat bandh, Tamil News, Tamilnadu

    அடுத்த செய்தி