Home /News /business /

எச்சரிக்கை... ஆன்லைன் லோன் ஆப்களை பயன்படுத்துவோர் கவனத்திற்கு!

எச்சரிக்கை... ஆன்லைன் லோன் ஆப்களை பயன்படுத்துவோர் கவனத்திற்கு!

லோன் ஆப்

லோன் ஆப்

ஃபின்டெக் ஆப்கள் தங்களது வாடிக்கையாளர்களை கவர பலவகையான கடன் திட்டங்களை கையில் வைத்துள்ளன.

  கொரோனா காலக்கட்டத்தில் பிற ஆப்களைப் போலவே ஃபின்டெக் ஆப்-களின் வளர்ச்சியும் நல்ல முன்னேற்றம் அடைந்துள்ளது என்று தான் சொல்ல வேண்டும். வீட்டில் இருந்த படியே ஒரு சில ஆவணங்களை சமர்ப்பிப்பதன் மூலமாக ஆன்லைன் ஆப்-கள் மூலமாக கடன் பெற முடியும். தொழில்நுட்பத்தின் முன்னேற்றம் மற்றும் ஸ்டார்ட் அப்களின் வளர்ச்சியானது அதிக ஆவணங்கள் இல்லாமல் ஃபின்டெக் நிறுவனங்களிடமிருந்து சிறிய கடன்களை உடனடியாக பெறுவதை எளிதாக்கியுள்ளது.

  ஃபின்டெக் ஆப்கள் தங்களது வாடிக்கையாளர்களை கவர பலவகையான கடன் திட்டங்களை கையில் வைத்துள்ளன. வாடிக்கையாளர்கள் முதலில் வாங்கி கொண்டு பின்னர் குறுகிய காலத்தில் பணத்தை திரும்ப செலுத்த உதவும் Buy Now Pay Later (BNPL), சம்பள பணத்தில் இருந்து பிடித்தம் செய்யவது (EarlySalary) அல்லது குறுகிய காலக்கடனை மாதந்தோறும் வட்டியில்லாத தவணையாக திரும்ப செலுத்துதல் (EMI) ஆகிய பல கடன் திட்டங்களை வழங்குகின்றன. மேலும் வாடிக்கையாளர்கள் எளிமையாக உணர வேண்டும் என்பதற்காக கடனை திரும்ப செலுத்துவதற்கான கால அவகாசத்தையும் 3 முதல் 6 மாதங்களுக்குள் விருப்பப்படி தேர்வு செய்து கொள்ள அனுமதிக்கிறது.

  எனவே மக்கள் விரும்பும் பொருளை வாங்குவதற்காகவும், விரைவில் கடன் கிடைக்கும் என்பதாலும் நிதி தேவைகளுக்கு ஃபின்டெக் ஆப்களை நம்புகின்றனர்.

  தனிநபர் கடன் ஒப்புதலுக்கான வாய்ப்புகளை மேம்படுத்துவது எப்படி?

  ஒரு வங்கி சென்று பர்சனல் லோன் எடுப்பது என்பது மிகப்பெரிய வேலையாகும். குறிப்பாக எந்தவொரு பிணையும் இல்லாமல் பர்சனல் லோன் வாங்குவது என்பது நடக்காத காரியம். அதேபோல் தனிநபருக்கான கடன் அனுமதியை பெறுவதற்கு நிறைய நிபந்தனைகள் மற்றும் ஆவணங்களை பூர்த்தி செய்ய வேண்டிய கட்டாயம் உள்ளது. ஆனால் ஃபின்டெக் ஆப் மூலமாக எளிதாக பர்சனல் லோன் வாங்க முடியும் என்பதால், அதனை பயன்படுத்துவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

  4 ஆண்டுகளில் கோடீஸ்வரர் ஆகலாம்.. எல்.ஐ.சி தரும் அருமையான வாய்ப்பு!

  ஆனால் இங்கேயும் நீங்கள் திரும்ப செலுத்த வேண்டிய தவணைக்கான காலத்தை முறையாக பின்பற்றாவிட்டால் சிக்கல் ஏற்பட வாய்ப்புள்ளது. அதாவது இதுபோன்ற ஃபின்டெக் சேவைகளை பொறுப்பற்ற முறையில் பயன்படுத்துவதன் மூலம் உங்கள் CIBIL ஸ்கோர் கடுமையாக பாதிக்கப்படலாம்.

  நீங்கள் ஃபின்டெக் ஆப் மூலமாக ஒரு கடனை பெறுகிறீர்கள் என்றால், அது உடனடியாக உங்கள் CIBIL கணக்கில் பிரதிபலிக்கும். ஃபின்டெக் ஆப்களின் சேவை மூலமாக பெறப்படும் கடன்கள், கடன் கணக்குகளாக மட்டுமின்றி CIBIL ஸ்கோரையும் பாதிக்கும். எனவே கடனை திரும்ப செலுத்த வேண்டிய தேதிகளை நன்றாக குறித்து வைத்து, தவணைகளை செலுத்துவதன் மூலமாக சிபில் ஸ்கோரை இழக்காமல் தடுக்கலாம்.

  சில அசாதாரணமான சந்தர்ப்பங்களில், உங்கள் கிரெடிட் ஸ்கோர் மோசமாக இருக்கும்போது, ​​வழக்கமாக கடன் வாங்கும் முறையை விட இப்படி ஃபின்டெக் ஆப்கள் மூலமாக வாங்கும் கடனை ஒழுங்காக திருப்பி செலுத்தினால், அது உங்கள் மோசமான கிரெடிட் ஸ்கோரை மீட்டெடுக்க உதவும்.

  எனவே, ஃபின்டெக் சேவைகள் சிறிய கிரெடிட்களுக்கு எளிதான அணுகலை வழங்குவதோடு மட்டுமல்லாமல், புதிதாக கடன் பெறும் நபர்களுக்கு கடனுக்கு விண்ணப்பிக்கும் முன் நல்ல கிரெடிட் ஸ்கோரை உருவாக்குவதற்கான வாய்ப்பையும் வழங்குகிறது.

  அத்தகைய சேவையை பெறுவதன் மூலம், ஏற்கனவே CIBIL மதிப்பெண்களை பெற்றுள்ள நபர்கள் அதை விரைவாக மேம்படுத்தலாம் அல்லது குறைக்கலாம்.

  எனவே, இவை உண்மையில் உங்கள் கிரெடிட் ஸ்கோரை புதுப்பிக்க அல்லது மேம்படுத்த உதவும் கருவிகள் என்பதை உணர வேண்டும். அதேசமயத்தில் ஃபின்டெக் மூலமாக கடன் பெறுவது தவறாகிவிட்டால், உங்கள் கிரெடிட் ஸ்கோர் உண்மையில் மோசமான நிலைக்கு தள்ளப்படும். இது பயன்படுத்த வசதியான கடன் பெறும் கருவியாக இருந்தாலும், நன்மைகளை விட தீமைகளே அதிகம் என்பதை பொருளாதார் நிபுணர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
  Published by:Vijay R
  First published:

  Tags: Business, Loan app

  அடுத்த செய்தி