தற்போது நடந்து கொண்டிருக்கும் டிஜிட்டல் மயமாக்கத்தினால், அனைத்து பரிவர்த்தனைகளும் ஆன்லைனில் செய்யப்படுகின்றன. பெட்டிக்கடைக்காரர்களும், தள்ளுவண்டி கடைக்காரர்களும் கூகுள் பே, ஃபோன் பே, போன்ற யுபிஐ சேவைகளையும், ஆன்லைன் பணபரிவர்த்தனைகளையும் பயன்படுத்த துவங்கி விட்டனர். ஆனால் இதுவே உங்களுக்கும் உங்கள் பணத்திற்கும் எமனாக முடியலாம்.
காலையில் நீங்கள் எழுந்திருக்கும் போதே உங்கள் அக்கவுண்டில் இருந்து 20 ஆயிரம் ரூபாய் எடுக்கப்பட்டிருக்கிறது என்ற எஸ் எம் எஸ் உங்கள் மொபைல் திரையில் தோன்றினால் உங்களுக்கு எப்படி இருக்கும். இது போன்ற சம்பவங்கள் அங்கங்கு நடந்து கொண்டுதான் இருக்கின்றன. முக்கியமாக இந்தியாவில் இதுபோன்ற ஆன்லைன் பணமோசடிகள் மிக அதிக அளவில் நடக்கின்றன.
இது குறித்து ரிசர்வ் பேங்க் ஆப் இந்தியா மூன்று பகுதிகள் அடங்கிய ஒரு புத்தகத்தை வெளியிட்டுள்ளது. அதில் முதல் இரண்டு பகுதிகளில் வங்கிகள் மற்றும் வங்கி அல்லாத பைனான்ஸ் நிறுவனங்கள் மூலம் ஏற்படும் மோசடிகளில் இருந்து தற்காத்துகொள்ளும் வழிமுறைகளையும் மூன்றாம் பகுதியில் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனையில் எந்தவித அசம்பாவிதமும் நிகழா வண்ணம் தற்காத்துக் கொள்ளும் முறையைப் பற்றியும் குறிப்பிடப்பட்டுள்ளது.
உங்கள் பணத்தை உங்களுக்கே தெரியாமல் இப்படி தான் திருடுகின்றனர்...
ஆன்லைன் விற்பனை தளங்கள் மூலம் பணம் திருடுதல்:
இதில் திருடர்கள் ஆன்லைன் விற்பனை தளங்களை அணுகி, அதில் விற்கப்படும் பொருட்களை வாங்குவது போல் நடிப்பார்கள். அவ்வாறு அவர்கள் ஏதாவது ஒரு பொருளைத் தேர்வு செய்து அதற்கான கட்டணத்தை நேரடியாக விற்பனையாளரிடம் கொடுப்பதற்கு பதிலாக போன் பே, கூகுள் பே போன்ற யுபிஐ முறையில் பணம் பரிவர்த்தனை செய்ய முயல்வார்கள். அந்த நேரத்தில் நீங்கள் அவர்களின் கோரிக்கையை ஏற்பதற்காக உங்களுடைய செயலியில் உங்களுடைய கடவுச் சொல்லை உள்ளீடு செய்யும் போது, பணம் உங்களுக்கு வருவதற்கு பதிலாக அவர்களுடைய கணக்கிற்கு சென்று சேர்ந்து விடும். எனவே இதுபோன்று யுபிஐ பணப்பரிவர்த்தனைகளில் எப்போதும் கவனமுடன் இருப்பது நல்லது.
Also Read : UPI பேமெண்ட் செய்யும் போது நினைவில் கொள்ள வேண்டிய 5 பாதுகாப்பு அம்சங்கள்
உங்கள் மொபைல் மற்றும் லேப்டாப்பை கண்காணித்து அதன் மூலம் பண மோசடி:
சில சமயங்களில் நீங்கள் உங்களுக்கே தெரியாமல் கிளிக் செய்யும் லிங்குகளின் மூலமும், நீங்கள் இன்ஸ்டால் செய்யும் செயலிகளின் மூலமும் இந்த திருடர்கள் உங்களின் மொபைல் மற்றும் லேப்டாப் ஆகியவற்றினை தூரத்திலிருந்து இணையத்தின் மூலம் கண்காணிக்க முடியும். இவ்வாறு நீங்கள் பாதுகாப்பற்ற செயலி அல்லது லிங்குகளை இன்ஸ்டால் செய்யும்போது உங்கள் மொபைல் மற்றும் லேப்டாப் ஆகியவற்றின் முழு விவரமும் அவர்களுக்கு சென்று விடும். மேலும் அவற்றை பயன்படுத்தி நீங்கள் பணப்பரிவர்த்தனைகளை செய்ய முயலும் போது அவர்கள் அதைப் பற்றிய முழு விவரத்தையும் தெரிந்து கொண்டு உங்கள் அக்கவுண்டில் இருந்து மிக எளிதாக பணத்தை திருடி கொள்ள முடியும். எனவே தேவையற்ற வலைத்தளங்களுக்கு செல்லாமலும் தேவையற்ற செயலிகளை இன்ஸ்டால் செய்யாமலும் இருப்பது மிகவும் நல்லது.
க்யூ ஆர் கோடுகளின்(QR-code) மூலம் பண மோசடி:
ஆன்லைன் பணப்பரிவர்த்தனையின் போது நாம் க்யூ ஆர் கோடு எனப்படும் கேமராவை வைத்து ஸ்கேன் செய்து பணம் செலுத்தும் முறையை மிக அதிகமாக பயன்படுத்துகிறோம். ஆனால் இவ்வாறு செய்யும்போது சில நேரங்களில் இந்த மோசடிக்காரர்கள் உங்களின் மொபைலில் உள்ள தரவுகளையும், உங்கள் பேங்க் அக்கவுண்ட் பற்றிய தகவல்களையும் மிக எளிதாக திருடி கொள்ள முடியும்.
Also Read : SBI வாடிக்கையாளர்களே உஷார்; இந்த sms வந்தால் என்ன செய்யனும் தெரியுமா?
ஜூஸ் ஜாக்கிங்:
இது நம்மால் நினைத்துக் கூட பார்க்க முடியாத அளவு மிகவும் சாமர்த்தியமான ஒரு நூதன திருட்டு முறை. நீங்கள் வெளியிடங்களுக்கும் அல்லது வெளியூர்களுக்கும் செல்லும்போது ரயில் நிலையங்களிலோ அல்லது வேறு ஏதேனும் பொது இடங்களிலோ உங்கள் மொபைலை சார்ஜ் செய்வதற்காக அங்குள்ள சார்ஜிங் போர்ட்டுகளை பயன்படுத்தி இருப்பீர்கள். அது போன்ற இடங்களில் இந்த நூதன திருட்டு கும்பல் தங்களின் கைவரிசையை காட்டுகின்றனர். நீங்கள் மொபைல் அல்லது லேப்டாப் ஆகியவற்றை புது இடங்களில் சார்ஜ் செய்யும்போது அந்த சார்ஜ் போர்ட்டில் உங்களுக்கே தெரியாமல் உங்கள் டிவைஸை ஹேக் செய்வது மற்றும் உங்கள் தகவல்களை திருடுவதற்கான வைரஸ்களையும் அந்த சார்ஜிங் போர்ட்டுகள் மூலம் உங்களிடம் டிவைசுக்குள் செலுத்தி விடுகின்றனர். எனவே முடிந்தவரை பொது இடங்களில் நம் எலக்ட்ரானிக்ஸ் சாதனங்களை சார்ஜ் செய்வதை தவிர்ப்பது மிகவும் நல்லது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Cyber fraud, Online Frauds