எப்போதும் பணம் அனைவருக்கும் தேவை. அதுவும் இந்த கொரோனா (COVID-19) காலத்தில் பணத்தின் தேவை அதிகமாகவே உள்ளது. தற்போதைய சூழ்நிலையில் கடனளிப்பவரின் ஆதரவை பலர் நாடுகிறார்கள். அவர்களுக்கு உடனடி ஆதரவு அளிக்க "இன்ஸ்டன்ட் கடன்" என கால் (Loan Fraud Call)/SMS/ அல்லது போலியான இணையதள லிங்க்ஸ் மூலம் மக்களை ஏமாற்றும் கும்பல் முதலிடத்தில் உள்ளனர். இதற்குக் காரணம், அவர்கள் உடனடி கடனைப் பற்றி பேசுவது மட்டுமல்லாமல், அதிக ஆவணங்கள் கொடுக்க வேண்டிய அவசியமில்லை என்றும் கூறுகிறார்கள்.
கொரோனா காலத்தில் வேலையின்மை, ஊரடங்கு என மக்களுக்கு பொருளாதார நெருக்கடிகள் அதிகரித்துள்ளது. இத்தகைய சூழ்நிலையில், பலர் வேலை கிடைக்காததால், கடன் வாங்கலாம் (Loan Apply) என முடிவு செய்கின்றனர். ஆனால் அவர்களுக்கு அதற்கு நேர்மாறாக நடக்கிறது.
உடனடி கடன் என்ற பெயரில் கையில் எஞ்சியிருந்த பணமும் காலியானது. பல மாநில அரசுகள், வங்கிகள் சட்ட திட்டங்களை போட்டாலும் ஏமாற்றும் கும்பல் திருந்திய பாடில்லை. அந்தவகையில் இப்போது சமீபத்திய செய்தி ஒன்றை SBI வெளியிட்டுள்ளது. அதிகாரப்பூர்வமற்ற டிஜிட்டல் தளங்கள் மற்றும் மொபைல் ஆப்களில் இன்ஸ்டண்ட் கடன் வழங்குவதாக கூறி மோசடியில் ஈடுபடும் கும்பல் குறித்து கவனமாக இருக்கும்படி வாடிக்கையாளர்களிடம் ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா (State Bank of India-SBI) எச்சரித்துள்ளது.
இதுகுறித்து SBI வங்கி ட்விட்டரில், “உடனடி கடன் ஆப்களின் மோசடி குறித்து வாடிக்கையாளர்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்றும் SBI அல்லது வேறு வங்கியின் பெயரில் அதிகாரப்பூர்வமற்ற லிங்குகளை கிளிக் செய்ய வேண்டாம் என்று SBI மக்களை கேட்டுக்கொண்டது. இத்தகைய தளங்களில் உங்கள் விவரங்களையும் கொடுக்க வேண்டாம்” என்றும் பேங்க் அறிவுறுத்தியுள்ளது. உங்கள் அனைத்து நிதித் தேவைகளுக்கும் https://bank.sbi ஐப் பார்வையிடவும்" என்று நாட்டின் உயர்மட்ட கடன் வழங்குநர் SBI ட்வீட்டில் அழுத்தம் திருத்தமாக கூறியுள்ளது.
இதுமட்டுமல்லாமல், ஆன்லைன் கடன் மோசடி கும்பல்களிடம் இருந்து பாதுகாப்பாக இருப்பதற்கு சில வழிமுறைகளையும் SBI வழங்கியுள்ளது.
- முதலில் கடன் ஆஃபரின் நிபந்தனைகளை படித்து பார்க்க வேண்டும்
- சந்தேகத்திற்குறிய இணைப்புகளை (links) கிளிக் செய்யக்கூடாது.
- ஏதேனும் ஆப்ஸை டவுன்லோடு செய்வதற்கு முன் அதன் உண்மைத்தன்மை குறித்து சரிபார்க்க வேண்டும்.
SBI வங்கியிலோ, yono போன்ற மொபைல் ஆப்ஸிலோ கடனுக்கு விண்ணப்பிக்கலாம். அங்கீகரிக்கப்படாத கடன் ஆப்ஸ்களை நம்பி ஏமாற வேண்டாம் என தனிநபர்களுக்கும், தொழில் நிறுவனங்களுக்கும் ரிசர்வ் வங்கி (RBI) எச்சரிக்கை விடுத்துள்ளது.
வங்கிகள், ரிசர்வ் வங்கியில் பதிவுசெய்யப்பட்ட வங்கி சாரா நிதி நிறுவனங்கள் மற்றும் மாநில அரசுகளால் கட்டுப்படுத்தப்படும் நிறுவனங்களால் முறையான கடன்களை வழங்க முடியும்.
கடந்த மாதம், இந்திய ரிசர்வ் வங்கி ( Reserve Bank of India) தனிநபர்களுக்கும் சிறு வணிகங்களுக்கும் அதிக எண்ணிக்கையிலான அங்கீகரிக்கப்படாத டிஜிட்டல் கடன் தளங்களுக்கு இரையாகிவிடக்கூடாது என்று எச்சரித்திருந்தது. சில மோசடி தளங்கள் அதிக வட்டி விகிதங்களையும் கூடுதல் மறைக்கப்பட்ட கட்டணங்களையும் வசூலிக்கின்றன, ஏற்றுக்கொள்ள முடியாத முறைகளைப் அந்த போலி தளங்கள் பின்பற்றுகின்றன.
கடன் வாங்குபவர்களின் மொபைல் போன்களில் டேட்டாவை அணுக ஒப்பந்தங்களை தவறாக பயன்படுத்துகின்றன. "இதுபோன்ற நேர்மையற்ற செயல்களுக்கு இரையாக வேண்டாம் என்றும், ஆன்லைன் அல்லது மொபைல் ஆப்ஸ்கள் மூலம் கடன்களை வழங்கும் போலி நிறுவனங்களை நம்ப வேண்டாம் என்றும் பொதுமக்களை RBI உஷார் படுத்தியுள்ளது. மேலும், நுகர்வோர் ஒருபோதும் உங்கள் Know Your Customer (KYC) ஆவணங்களின் நகல்களை அடையாளம் தெரியாத நபர்கள், சரிபார்க்கப்படாத / அங்கீகரிக்கப்படாத ஆப்ஸ்களுடன் பகிர்ந்து கொள்ளக்கூடாது, மேலும் இதுபோன்ற சம்பவங்களை சம்பந்தப்பட்ட சட்ட அமலாக்க நிறுவனங்களுக்கு தெரிவிக்க வேண்டும் என்றும் ரிசர்வ் பேங்க் கேட்டுக்கொண்டுள்ளது. அவ்வப்போது, SBI தனது வாடிக்கையாளர்களுக்கு ஃபிஷிங் ட்ரெண்டுகள் மற்றும் இதுபோன்ற மோசடிகளுக்கு எதிரான வழிமுறைகள் குறித்து எச்சரிக்கிறது.
SBI தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் ஹாண்டில் (OTheOfficialSBI) மூலம் தனது வாடிக்கையாளர்களுக்கு இந்த தகவலை அளிக்கிறது. சொத்துக்கள், வைப்புத்தொகை, கிளைகள், வாடிக்கையாளர்கள் மற்றும் ஊழியர்களைப் (assets, deposits, branches, customers, and employees) பொறுத்தவரை SBI இந்தியாவின் மிகப்பெரிய வணிக வங்கியாகும். அதுமட்டுமல்லாமல் SBI நாட்டின் மிகப்பெரிய அடமானக் கடன் வழங்குநராகவும் உள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.