Home /News /business /

பணி இடத்தில் பெண்களுக்கு தேவையானவை என்ன?

பணி இடத்தில் பெண்களுக்கு தேவையானவை என்ன?

Working Women

Working Women

Women Employees | இந்தியாவை பொறுத்தவரை வேலை பார்க்கும் பெண் என்பது ஒரு சவாலான சூழல் தான். இரண்டு மாதங்களுக்கு முன்பு பெண்கள் தினத்தன்று பல நிறுவனங்கள் கணக்கெடுப்புகளை நடத்தின. இதில் அலுவலகத்தில் போதிய வசதியில்லாததால் அல்லது அலுவலக நேரம் ஒத்து வராததால் பல பெண்கள் வேலையை விடக்கூடிய சூழல் ஏற்பட்டதாக தெரிவித்துள்ளனர்.

மேலும் படிக்கவும் ...
  பணியிடங்களில் பெண் ஊழியர்களின் எண்ணிக்கை கணிசமாக குறைந்துள்ளது என்ற தகவல் சில வாரங்களுக்கு முன் கணக்கெடுப்பில் வெளியாகி இணையத்தில் வைரலாக பரவியது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு என்று ஒப்பிடும் பொழுது வேலை செய்யும் பெண்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்து இருந்தது. பெரும்பாலான இல்லங்களில் பெண்கள் பணிக்குச் செல்கிறார்கள். ஆனால் கடந்த 4 அல்லது 5 ஆண்டுகளில் வேலை செய்யும் பெண்கள் தங்கள் வேலையை விட்டு நீங்கும் சூழல் ஏற்பட்டு உள்ளது.

  இதனால் ஒட்டு மொத்தமாக ஒப்பிடும்பொழுது அலுவலகங்களில் வேலை செய்யும் பெண்களின் எண்ணிக்கை குறைந்து கொண்டே வருகிறது. அதுமட்டுமில்லாமல் சமீபத்திய ஒரு கணக்கெடுப்பின்படி பெண்கள் உயர்கல்வியை விரும்புவதால், புதிதாக வேலைக்குச் செல்லும் பெண்களின் எண்ணிக்கை குறைவதற்கு அதுவும் ஒரு காரணமாக இருக்கிறது என்பது கண்டறியப்பட்டுள்ளது.

  இந்தியாவின் ஊழியர்களின் எண்ணிக்கை அடுத்த சில ஆண்டுகளில் உலகிலேயே முதன்மையாக மாறும் சாத்தியம் உள்ளது. அதாவது, 2027ம் ஆண்டுக்குள், இந்தியாவில் வேலை பார்க்கும் மக்களின் எண்ணிக்கை, ஒட்டுமொத்த உலக தொழிலாளர் எண்ணிக்கையில் 18.6% அளவு இருக்கும் என்று ஐக்கிய நாடுகளின் மக்கள்தொகை தரவுகளின் ப்ளூம்பெர்க் செய்தி ஆய்வு தெரிவிக்கிறது.

  கிட்டத்தட்ட ஐந்தில் ஒரு பங்குக்கு பணியாளர்களின் எண்ணிக்கை இந்தியாவில் இருந்தாலும், இந்தியாவின் பெண் ஊழியர்கள் பங்கேற்பு விகிதம் - Labour Force Participation Rate (LFPR) - வேலை செய்யும் வயதுடைய பெண்களின் எண்ணிக்கை (வேலை செய்து கொண்டிருப்பவர் மற்றும் வேலை தேடிக்கொண்டிருப்பவர் அல்லது வேலை செய்ய தயாராக இருப்பவர்) இதுவரை இல்லாத 23.3% ஆகக் குறைந்துள்ளது.  இது மட்டுமில்லாமல் உயர் கல்விக்காக அல்லது மேற்படிப்புக்காக பதிவு செய்யும் பெண்களின் எண்ணிக்கையும் கடந்த 4 முதல் 5 ஆண்டுகளில் கணிசமாக உயர்ந்துள்ளதால் வொர்க்ஃபோர்ஸில் பெண்களின் பங்கு அல்லது எண்ணிக்கை குறைந்துள்ளது. ஏற்கனவே கார்பரேட் உலகில் பெண்கள் தங்கள் திறமைகளை அதிகமாக வெளிக்காட்ட முடியாத வண்ணம் தான் இருக்கின்றனர். இந்தியாவை பொறுத்தவரை இந்த சூழல் அவ்வளவு சாதகமானதாக தெரியவில்லை. பெண்கள் முன்னணியில் இருந்து வேலை செய்யும் இடங்களில் அதிக இன்னோவேஷன் காணப்படும், அதுமட்டுமில்லாமல் கிரேயிட்டிவிட்டி அதிகரிக்கும், நிறுவனத்தின் நிதி வளர்ச்சியும் சிறப்பாக இருக்கும் என்று முன்னணி வணிக நிறுவனங்கள் தெரிவிக்கின்றன.

  Also Read : மத்திய அரசு துறைகளில் காலியாக உள்ள 10 லட்சம் பணியிடங்களை நிரப்ப பிரதமர் மோடி உத்தரவு

   

  இந்தியாவை பொறுத்தவரை வேலை பார்க்கும் பெண் என்பது ஒரு சவாலான நிலைதான். இரண்டு மாதங்களுக்கு முன்பு பெண்கள் தினத்தன்று பல நிறுவனங்கள் கணக்கெடுப்புகளை நடத்தின. இதில் அலுவலகத்தில் போதிய வசதியில்லாததால் அல்லது அலுவலக நேரம் ஒத்து வராததால் பல பெண்கள் வேலையை விடக்கூடிய சூழல் ஏற்பட்டதாக தெரிவித்துள்ளனர். அதுமட்டும் இல்லாமல் குடும்பம் மற்றும் வேலை இரண்டையும் சரிவர நிர்வகிக்க முடியாத காரணத்தினாலும் பல திருமணமான பெண்களும் சூழ்நிலை கருதி நிரந்தரமாக வேலையில் இருந்து ராஜினாமா செய்திருக்கிறார்கள். பணியிடத்தில் தங்கள் திறனை நிரூபிக்க வேண்டும் சாதிக்க வேண்டும் என்ற பெண்களுக்கு அலுவலகத்தில் தேவையான வசதிகளும் மற்றும் அவர்களுக்கு ஏற்றவாறு அலுவலக நேரத்தை மாற்றி அமைத்து கொடுப்பது இந்த சூழலில் அவசியமாக தெரிகிறது.  மாடர்ன் பெண்கள் உலகம் என்று பலர் கருதினாலும் தற்பொழுதும் திருமணம் மற்றும் குடும்பம், குழந்தைகள் என்று திருமணமான பெண்களுக்கு பொறுப்புகள் குறைவதில்லை. குழந்தை பெற்ற பிறகு குழந்தையை பராமரிப்பதில் பெண்கள்தான் முழு கவனம் செலுத்த வேண்டும் என்ற பார்வையும் இதுவரை நீடித்து வருகிறது. இதனாலேயே பெண்களால் திருமணத்திற்கு பிறகு அல்லது குழந்தை பிறந்த பிறகு கேரியரில் கவனம் செலுத்தி அடுத்தடுத்து முன்னேறிச் செல்ல முடியவில்லை.

  Also Read : விண்வெளி துறையில் தனியார் முதலீடு அதிகரிக்கப்படும் - பிரதமர் மோடி

  நிறுவனங்கள் தங்களின் வளர்ச்சி மற்றும் மேம்பாட்டுக்கு, பெண் ஊழியர்களின் பங்களிப்பும் இருக்க வேண்டும் என்பதை உணர்வதற்கு இது சரியான நேரமாகும். அதுமட்டும் இல்லாமல் பெண்கள் சந்திக்கும் சவால்களை எதிர்கொள்வதற்கு ஏற்றவாறு அலுவலகங்கள் அவர்களுக்கு தேவையான வசதிகளை செய்து கொடுக்க முன்வர வேண்டும்.
  Published by:Selvi M
  First published:

  Tags: India, Women Employees

  அடுத்த செய்தி