இன்று தேசிய பெண் குழந்தைகள் தினம். இந்த நாளில் உங்கள் வீட்டில் பெண் குழந்தைகள் இருந்தால் பெற்றோராகிய நீங்கள் செய்ய வேண்டிய முக்கியமான கடமை குறித்து பார்ப்போம்.
பெண் குழந்தை பிறந்தாலே செலவு என்பார்கள். பெண் குழந்தை பிறந்த உடனே பெற்றோருக்கு சேமிப்பு, கல்யாணம், நகை குறித்த எண்ணங்கள் தோன்ற ஆரம்பித்துவிடும். காலம் காலமாக இந்த கதைகள் இந்த சமூகத்தில் தொடர்ந்து கூறப்பட்டு வருகிறது. ஆனால் உண்மையில் பெண் குழந்தை, ஆண் குழந்தை எதுவாக இருந்தாலும் அவர்களின் எதிர்காலம் சிறப்பாக அமைவது பெற்றோர்களின் சேமிப்பில் தான் உள்ளது. அவர்களின் கல்வி செலவு,எதிர்கால செலவு, திருமண செலவு போன்ற தேவைகளுக்கு பிள்ளைகளின் சிறு வயதிலே பெற்றோர்கள் ஒரு நல்ல சேமிப்பை தொடங்கி விட்டால் அவர்களின் கல்வி மற்றும் கனவுகள் பணத்தால் தடைபடாது. அவர்களின் ஆசைக்கு, வெற்றிக்கு பணம் ஒரு தடையாக அமையாது.
இன்று தேசிய பெண் குழந்தைகள் தினம் என்பதால் பெண் குழந்தைகளின் பெற்றோர்கள் எந்த திட்டத்தில் சேமிக்கலாம், எப்படி சேமிக்கலாம், பாதுகாப்பான திட்டம் எது? போன்ற தகவல்களை பார்க்கலாம். குழந்தையின் எதிர்காலத்திற்காக பணத்தை சேமிக்க விரும்பும் பெற்றோர்கள் மத்திய அரசின் செல்வமகள் சேமிப்பு திட்டத்தில் இணைந்து நன்மைகளை பெறலாம்.சுகன்யா சம்ரிதி யோஜனா எனப்படும் பெண் குழந்தைகளுக்கான செல்வமகள் சேமிப்பு திட்டம் தற்போது பெற்றோர்களிடம் பெரிதும் வரவேற்பு பெற்ற திட்டமாக மாறிவிட்டது. அரசு சார்பில் இந்த திட்டத்தில் பெண் குழந்தைகளுக்காக சேமிக்க விழிப்புணர்வு பிரச்சாரம் செய்யப்படுகிறது.
போஸ்ட் ஆபீஸில் இதற்காக பல வசதிகளும் செய்யப்பட்டுள்ளது. இதில் இருக்கும் மற்றொரு சிறப்பு என்னவென்றால் பிறந்த குழந்தை முதல் 10 வயதுக்குட்பட்ட குழந்தைகளின் பெயரில் சேமிக்கலாம். 250 ரூபாய் முதல் அதிகபட்சமாக 1,50 லட்சம் ரூபாய் வரை இதில் சேமிக்க முடியும். மற்ற எல்லா சேமிப்பு திட்டங்களைக் காட்டிலும் இந்த திட்டத்தில் கூடுதலான வட்டி விகிதம் கொடுக்கப்படுகிறது.
அதிகபட்சமாக இரு பெண் குழந்தைகளின் பெயரில் இந்த திட்டத்தைத் தொடங்கலாம்.பெண் குழந்தை 18 வயதை எட்டியதும் அன்று முதல் அவர் அந்த அக்கவுண்ட் ஹோல்டர் ஆகி விடுவார்.மொத்தம் 14 ஆண்டுகள் அல்லது பெண்ணுக்கு திருமணம் ஆகும்வரை பணம் செலுத்த வேண்டும். ஒரு நிதியாண்டில் குறைந்தபட்சம் 1000 ரூபாயிலிருந்து அதிகபட்சமாக 150000 ரூபாய் வரை வைப்புத்தொகையாகச் செலுத்தலாம். ஆண்டுக்கு 7.6 சதவிகிதம் வட்டி வழங்கப்படுகிறது.
இதையும் படிங்க.. பணத்தை பெருக்க நினைப்பவர்கள் போஸ்ட் ஆபீஸில் இந்த திட்டத்தை தொடங்கினால் நல்லது!
அஞ்சலகங்கள் மற்றும் வங்கிகளில் செல்வமகள் சேமிப்பு திட்டத்தை தொடங்கலாம். ஆன்லைனிலும் அக்கவுண்ட் தொடர வசதி உள்ளது செல்வ மகள் திட்டத்தை தொடங்க வைப்புத் தொகையாளரின் அடையாளம் மற்றும் குடியிருப்பு ஆதாரம் தொடர்பான பிற ஆவணங்கள் தேவை. அதே போல் பெண் குழந்தையின் பிறப்புச் சான்றிதழும் அவசியம்.
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Girl Child, Savings