Home /News /business /

போஸ்ட் ஆபீஸில் இருக்கும் மிகச் சிறந்த சேமிப்பு திட்டம் எது? விரிவான பார்வை!

போஸ்ட் ஆபீஸில் இருக்கும் மிகச் சிறந்த சேமிப்பு திட்டம் எது? விரிவான பார்வை!

போஸ்ட் ஆபீஸ்

போஸ்ட் ஆபீஸ்

போஸ்ட் ஆபீஸில் எந்த முதலீடு திட்டத்தை முதலீடு செய்யலாம், எதில் அதிக லாபம் கிடைக்கும், எதில் வட்டி அதிகம் இதுப்போன்ற விரிவான தகவலை இந்த பதிவில் பார்க்கலாம்.

    அஞ்சலக சேமிப்பை சிறந்த சேமிப்பு என்று பலரும் சொல்லலாம். ஆனால் அதற்கான காரணத்தை நீங்கள் தெரிந்து கொள்வது அவசியமான ஒன்று. லாபம், லாபம் என்ற பேச்சை கேட்டு கண்ணை மூடிக் கொண்டு போய் முதலீடு செய்வதை எப்போதும் தவிர்த்திடுங்கள். போஸ்ட் ஆபீஸில் எந்த முதலீடு திட்டத்தில் முதலீடு செய்யலாம், எதில் அதிக லாபம் கிடைக்கும், எதில் வட்டி அதிகம் இதுப்போன்ற விரிவான தகவலை இந்த பதிவில் பார்க்கலாம்.

    போஸ் ஆபீஸில் முதலீடு செய்யும் பணத்திற்கு வட்டி, வருவாய், பாதுகாப்பு, வரிச்சலுகை கிடைக்கிறது. அதே நேரம் நீங்கள் தேர்ந்தெடுக்கும் திட்டத்தை பொறுத்து லாபம் மாறுபடும். இந்த பதிவில் பார்க்க போவது அஞ்சலக சேமிப்பில் அதிக லாபம் தரும் திட்டங்கள் பற்றி தான்.அஞ்சலகத்தில் அதிக லாபம் தரக்கூடிய திட்டத்தில் முதலிடத்தில் இருப்பது. மூத்த குடிமக்களுக்கான சேமிப்பு திட்டம் தான். ஒய்வு பெற்ற மூத்த குடிமக்களுக்கு அவர்களது தேவைகளை பூர்த்தி செய்ய, கடைசி வாழ்கையின் பாதுகாப்பிற்காக பல்வேறு சேமிப்புத் திட்டங்கள் இந்தியாவில் செயல்பாட்டில் இருக்கின்றன. ஆனால் வங்கியில் கூட கிடைக்காத வட்டி போஸ்ட் ஆபீஸில் மட்டும் தான் கிடைக்கிறது. இந்த திட்டத்தில் 7.4% வரை வட்டி வழங்கப்படுகிறது.

    இதையும் படிங்க.. கொரோனா அச்சம் அடிக்கடி போஸ்ட் ஆபீஸ் போக முடியலையா? அதுக்கும் ஒரு வழி இருக்கு!

    அடுத்தது, கிசான் விகாஸ் பத்திரத் திட்டம், இந்திய தபால் துறை வாயிலாக மத்திய அரசு செயல்படுத்தி வரும் ஒன்பது சிறு சேமிப்புத் திட்டங்களில் கிசான் விகாஸ் பத்திரத் திட்டமும் ஒன்றாகும். இது நல்ல வருவாய் தரும் மிகச் சிறந்த சேமிப்புத் திட்டமாகும். இந்த கிசான் விகாஸ் பத்திரத்தைத் தனிநபரோ அல்லது மூன்று பேர் வரையில் கூட்டாகவோ வாங்க முடியும். 10 வயதுக்கு மேற்பட்ட மைனர் கூட இந்த பத்திரத்தை வாங்கலாம்.நாட்டிலுள்ள எந்தவொரு அஞ்சல் நிலையத்திலும் இந்த கிசான் விகாஸ் பத்திரத்தை நீங்கள் வாங்க முடியும். இத்திட்டத்துக்கான வட்டி 6.9%.

    இதையும் படிங்க.. மார்ச் 31 க்குள் ஒவ்வொரு இந்திய குடிமக்களும் இதை செய்து இருக்க வேண்டும்.. இல்லையெனில் அபராதம்!

    மூன்றாவது, பொது வருங்கால வைப்பு நிதி (PPF) இதில் முதலீடு செய்வது பாதுகாப்பானது மட்டுமல்லாமல், வரி விலக்கு போன்ற பல்வேறு சலுகைகளும் உள்ளன. .போஸ்ட் ஆபீஸில் இந்த திட்டத்தில் முதலீடு செய்ய பெரும்பாலான மக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். அதற்கு மிக முக்கிய காரணம், இந்த திட்டத்தில் வழங்கப்படும் வட்டி தொகை தான். இந்த திட்டத்துக்கு 7.1% வட்டி வழங்கப்படுகிறது.

    அடுத்தது, சுகன்யா சம்ரிதி யோஜனா திட்டம். இதில் 10 வயதிற்குள் உள்ள பெண் குழந்தைகளுக்கு, பெற்றோர் அல்லது காப்பாளரின் உதவியுடன் இந்த கணக்கினை தொடங்க முடியும். இத்திட்டத்தின் வட்டி 7.6 விழுக்காடு ஆகும். . இறுதியாக ரெக்கரிங் டெபாசிட் திட்டம். ஐந்து ஆண்டுகளுக்காக இந்த ரெக்கரி டெபாசிட் திட்டத்தில்  மெச்சூரிட்டிக்கு பிறகு, தேவைப்பட்டால் டெபாசிட் கணக்கை நீட்டித்துக்கொள்ளலாம். அதிகபட்ச வரம்பில்லாமல் மாதத்திற்கு குறைந்தபட்சம் ரூ .100 வைப்பதன் மூலம் தபால் அலுவலகம் மீண்டும் மீண்டும் வரும் வைப்புத் திட்டம் உங்களுக்கு சிறந்த வட்டி விகிதத்தை வழங்கும். தற்சமயம் வட்டி விகிதம் 5.8%



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Sreeja
    First published:

    Tags: Post Office, Savings

    அடுத்த செய்தி