ஹோம் /நியூஸ் /வணிகம் /

தினசரி ரூ.100க்கும் குறைவாக முதலீடு செய்தால், லட்சங்கள் கையில் - எந்த சேமிப்பு திட்டம் தெரியுமா?

தினசரி ரூ.100க்கும் குறைவாக முதலீடு செய்தால், லட்சங்கள் கையில் - எந்த சேமிப்பு திட்டம் தெரியுமா?

மாதிரி படம்

மாதிரி படம்

15 ஆண்டுகால முதிர்வு காலத்தை தேர்வு செய்யும்பட்சத்தில், பாலிசியின் 6, 9 மற்றும் 12ஆவது ஆண்டுகளில் உங்களுக்கு 20 சதவீத தொகை மணிபேக் அடிப்படையில் வழங்கப்படும்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

    எதிர்கால பொருளாதார பாதுகாப்பு எல்லோருக்கும் அத்தியாவசிய தேவையாக இருக்கிறது. அதற்காக இன்று ஒரே நாளில் ஒரு 10, 20 லட்சத்தை தூக்கி, எதிர்கால தேவைக்கு என்று ஒதுக்கி வைக்க முடியுமா? இன்றிலிருந்து சிறுக, சிறுக சேமித்தால் தான் நம் வாழ்க்கையின் பிற்காலத்தில் பெரியதொரு தொகையை பெற முடியும்.

    சரி, இந்த யோசனைக்கு எந்த சேமிப்புத் திட்டம் சரியாக அமையும் என்ற கேள்வி உங்கள் மனதில் எழுகிறதா? உங்களுக்கான சிறந்த தேர்வாக, கிராமப்புற அஞ்சல் நிலைய காப்பீடு திட்டம் அமையும். இந்த திட்டத்தின் சிறப்பம்சம் என்னவென்றால், இது உங்களுக்கு சேமிப்புக்கான உத்தரவாதம் தருவதோடு மட்டுமல்லாமல், வாழ்க்கை காப்பீடு உறுதியும் தருகிறது.

    யாரெல்லாம் திட்டத்தில் சேரலாம்?:

    19 வயது முதல் 45 வயது வரையிலான எந்தவொரு இந்தியரும் இந்தத் திட்டத்தில் இணைந்து கொள்ளலாம். காப்பீடு தொகையாக ரூ.10 லட்சம் உத்தரவாதம் உண்டு. ஒருவேளையில் பாலிசிதாரர் இடைபட்ட காலத்தில் உயிரிழக்கும் பட்சத்தில், அவரது குடும்பத்தினருக்கு இந்தக் காப்பீட்டு தொகை மற்றும் போனஸ் தொகை சென்று சேரும்.

    இதையும் படிக்க : 1 லட்சம் பென்சன் வேண்டுமா? உங்களுக்காகவே எல்.ஐ.சி தரும் அருமையான வாய்ப்பு!

    மெச்சூரிட்டி காலம்:

    அஞ்சல் நிலைய காப்பீடு திட்டத்தில், இரண்டு வகையான மெச்சூரிட்டி முறை கடைப்பிடிக்கப்படுகிறது. அதாவது 15 ஆண்டு முதிர்வு காலம் மற்றும் 20 ஆண்டு முதிர்வு காலம் ஆகியவற்றை நீங்கள் தேர்வு செய்து கொள்ளலாம். 15 ஆண்டுகால முதிர்வு காலத்தை தேர்வு செய்யும்பட்சத்தில், பாலிசியின் 6, 9 மற்றும் 12ஆவது ஆண்டுகளில் உங்களுக்கு 20 சதவீத தொகை மணிபேக் அடிப்படையில் வழங்கப்படும்.

    அதுவே 20 ஆண்டுகால முதிர்வு காலம் என்றால் 8, 12 மற்றும் 16ஆவது ஆண்டுகளில் இந்த மணிபேக் தொகை கிடைக்கும். மூன்று தவணைகளில் உங்களுக்கு 60 சதவீத முதிர்வு தொகை வழங்கப்பட்டது போக, எஞ்சியுள்ள 40 சதவீத முதிர்வு தொகையானது பாலிசியின் முதிர்வு காலத்தில் வழங்கப்படும்.

    எவ்வளவு ப்ரீமியம் தொகை?:

    25 வயதுடைய நபர் ஒருவர், ரூ.7 லட்சத்திற்கான காப்பீடு தேர்வு செய்து, 20 ஆண்டுகால திட்டத்தில் இணைந்தார் என்றால் நாள்தோறும் அவர் ரூ.95 ப்ரீமியம் தொகை செலுத்த வேண்டும். இது மாதத்திற்கு ரூ.2,850 ஆகும். அதுவே 6 மாதங்களுக்கு கணக்கிட்டால் ரூ.17,000 ஆகும்.

    உங்களுக்கு 8, 12 மற்றும் 16ஆவது மாதங்களில் மணிபேக் தொகையாக தலா ரூ.1.4 லட்சம் என்ற வகையில் மொத்தம் ரூ.4.2 லட்சம் கிடைக்கும். 20ஆம் ஆண்டு பாலிசி முதிர்வு காலத்தில் ரூ.2.8 லட்சம் கிடைக்கும். இதுமட்டுமன்றி இடைப்பட்ட காலத்தில் சேர்ந்த போனஸ் தொகையானது முதிர்வு காலத்தில் ரூ.6.72 லட்சமாக கிடைக்கும். ஆக மொத்தம், உங்களுக்கு கிடைக்கக் கூடிய மொத்த தொகை ரூ.13.72 லட்சமாக இருக்கும். குறிப்பிட்ட கால இடைவெளியில் சீரான பண வரவை எதிர்பார்க்கும் நபர்களுக்கு இந்தத் திட்டம் உதவிகரமாக இருக்கும்.

    Published by:Raj Kumar
    First published:

    Tags: Business, Govt Scheme, Post Office, Savings