Home /News /business /

என்னது! இந்தியர்கள் அந்த விஷயத்திற்காக தான் அதிக இன்சூரன்ஸ் எடுக்கிறார்களா?

என்னது! இந்தியர்கள் அந்த விஷயத்திற்காக தான் அதிக இன்சூரன்ஸ் எடுக்கிறார்களா?

இன்சூரன்ஸ்

இன்சூரன்ஸ்

இதில், பிரீமியம் தொகை குறைவு என்பது குறிப்பிடத்தக்கது., மிடில்-கிளாஸ் மக்கள் மட்டுமல்லாமல், அப்பர்-கிளாஸ் மக்களின் சேமிக்கும் பழக்கத்தை பெரிதாக பாதித்துள்ளது.

    கோவிட் தாக்கத்துக்கு பிறகு, யாருக்கு வேண்டுமானாலும் எந்த நேரத்திலும் அசம்பாவிதம் ஏற்படலாம் என்ற சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால் ஏற்படும் நெருக்கடிகளைத் தவிர்க்க மருத்துவ காப்பீடு மற்றும் ஆயுள் காப்பீட்டை பலரும் பெறுகிறார்கள். சம்பளம் வாங்கும் ஊழியர்களுக்கு நிறுவனங்களே மருத்துவக் காப்பீடை வழங்கும் நிலையில், குடும்பத்தின் பாதுகாப்பான எதிர்காலத்துக்காக பலரும் ஆயுள் காப்பீட்டில் முதலீடு செய்கிறார்கள். காப்பீட்டுத் துறை முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு வளர்ச்சி கண்டுள்ளது. மேலும், சமீபத்தில் வெளியான அறிக்கையின் படி, நடப்பு நிதியாண்டில் எந்த வகையான காப்பீடுகளை மக்கள் வாங்குகிறார்கள் என்பது பற்றிய விவரங்கள் உள்ளன.

    காப்பீட்டில் மிகவும் பிரபலமான ULIP திட்டங்கள் இந்த ஆண்டும் அதிக நபர்களால் தேர்வு செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆண்டின் நான்காவது காலாண்டில் அதாவது ஜனவரி 21 முதல் மார்ச் 21 வரை கொஞ்சம் குறைந்திருந்த ULIP, தற்போது ஆண்டுக்கு ஆண்டுக்கு எவ்வளவு வளர்ச்சி அடைந்துள்ளது என்ற விகிதத்தின் அடிப்படையில் கணிசமான முன்னேற்றம் கண்டுள்ளது. நடப்பு நிதியாண்டில் ULIP ரீடெயில் வருடாந்திர பிரீமியம் 33% வளர்ச்சியடைந்துள்ளது.

    பென்ஷன் முதலீடுகளுக்கு சமமாக, சேமிப்பில் (non-par சேமிப்புகள்) அதிக ஆர்வம் காட்டி வருகிறார்கள். இதில், பிரீமியம் தொகை குறைவு என்பது குறிப்பிடத்தக்கது.

    பணியில் இருந்து ஓய்வு பெற்ற பிறகும் யாரெல்லாம் வருமான வரி செலுத்த வேண்டும் தெரியுமா?

    ஈக்விட்டி பங்கு சந்தைகள் வளர்ந்து வரும் அதே நேரத்தில், வசதியான நபர்கள் மற்றும் வைட்-காலர் பணிகளில் இருக்கும் இளைஞர்கள் பலரும் ULIP முதலீட்டையே விரும்புகிறார்கள்.

    அடுத்ததாக, பென்ஷன் வழங்கும் இன்சூரன்ஸ் திட்டங்கள் அதிகப்படியான வளர்ச்சியைப் பெற்றுள்ளது. எதிர்காலத்தில் நிதி மற்றும் பொருளாதார ரீதியான பாதுகாப்புக்காக நிலையான வருமானம் வேண்டிய அவசியம் அதிகரித்துள்ளது. அதற்கு ஏற்றார் போல காப்பீட்டு நிறுவனங்கள் மற்றும் முதலீட்டு நிறுவனங்களும் மாதாந்திர பென்ஷன் வழங்கும் இன்சூரன்ஸ் திட்டங்களை ஆயுள் காப்பீட்டுடன் சேர்த்து வழங்கி வருகிறது. சமீபத்தில் பலரும் பென்ஷன் வழங்கும் காப்பீட்டு திட்டங்களை அதிகப்படியாக வாங்கி வருகின்றனர்.

    ரூ. 20 லட்சத்துக்கு மேல் பணம் எடுக்க, டெபாசிட் செய்ய புது விதி! நோட் பண்ணிக்கோங்க!

    கோவிட் தாக்கம் பரவலாக, மிடில்-கிளாஸ் மக்கள் மட்டுமல்லாமல், அப்பர்-கிளாஸ் மக்களின் சேமிக்கும் பழக்கத்தை பெரிதாக பாதித்துள்ளது. பண வசதி இருப்பவர்கள் இதனால் கூடுதலாக முதலீடு செய்ய வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால், பார்டிசிபேட்டிங் முதலீடு போல இல்லையென்றாலும், பிரீமியம் குறைவு என்பதால், non-par savings இல் பலரும் சேமித்து வருகிறார்கள்.

    ஆனால், நீண்ட கால இன்சூரன்ஸ் என்றால், பார்டிசிபேட்டிங் திட்டங்கள் தான் அதிக பயனுள்ளதாக இருக்கும்.

    குரூப் டெர்ம் இன்ஷூரன்ஸ் ப்ரீமியத்திலும் கணிசமான வளர்ச்சி இருப்பதை அறிக்கை வெளியிட்டுள்ளது. மிகப்பெரிய தனியார் நிறுவனங்கள், தங்களுடைய பிரபலமான பிராண்டுகளுடன், புதுமையான அணுகல் மற்றும் விநியோக நெட்வொர்க்குடன் தங்களின் சந்தை மதிப்பை அதிகரித்து வருகின்றனர்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Sreeja
    First published:

    Tags: Insurance, Life Insurance

    அடுத்த செய்தி