Home /News /business /

அரசு பாதுகாப்புடன் கிடைக்கும் சேமிப்பு திட்டம்.. இன்னும் ஏன் டைம் வேஸ்ட் பண்றீங்க?

அரசு பாதுகாப்புடன் கிடைக்கும் சேமிப்பு திட்டம்.. இன்னும் ஏன் டைம் வேஸ்ட் பண்றீங்க?

சேமிப்பு திட்டம்

சேமிப்பு திட்டம்

சுமார் 15 ஆண்டுகளுக்கு முதலீடு செய்தால் நல்ல தொகை உங்கள் கையில் ரிட்டன்ஸாக கிடைக்கும்.

    நல்ல வருவாய்க்கு முதலீடு திட்டங்களில் சேமிப்பது நல்ல பழக்கம் தான். அதே சமயம் முதலீடு பாதுகாப்பானதாகவும் இருக்க வேண்டும் ரிட்டன்ஸூம் சரியாக கையில் கிடைக்க வேண்டும். அதற்கு மிகச் சிறந்த திட்டம் தான் பி.பி.எஃப். அரசால் பாதுகாக்கப்படும் ஒரு சேமிப்பு திட்டமாக இது இருப்பதால் உங்களின் முதலீடு பாதுகாப்பாக இருக்கும் எந்த பயமும் கொள்ள வேண்டாம். இது நீண்ட கால சேமிப்பு திட்டமாக இருப்பதால் நல்ல முதிர்வு தொகையும் கிடைக்கிறது.

    மாதம் ரூ. 1000 முதலீடு செய்து வந்தால் ரூ. 12 லட்சம் வரை உங்களால் ரிட்டர்ன்ஸ் பெற முடியும். இதில் எதில் சந்தேகமும் தயக்கமும் கொள்ள வேண்டாம். ஒவ்வொரு காலாண்டுக்கும் ஒரு முறை வட்டி விகிதம் மாற்றப்படும். சராசரி வட்டி விகிதமானது 7 முதல் 8 வரை இருக்கும். தற்போது இதற்கு வழங்கப்படும் வட்டியானது 7.1% ஆக உள்ளது. ஆன்லைனிலும் இந்த திட்டத்திற்கான வட்டியை எப்போது வேண்டுமானாலும் நீங்கள் சரிபார்த்துகொள்ளலாம். அனைத்து தகவல்களும் பொதுவாகவே இருக்கும்.

    ஆண்டு தோறும் ரூ. 500 முதல் ரூ. 1.5 லட்சம் வரை நீங்கள் சுமார் 15 ஆண்டுகளுக்கு முதலீடு செய்தால் நல்ல தொகை உங்கள் கையில் ரிட்டன்ஸாக கிடைக்கும். 15 ஆண்டுகள் கழித்து இந்த பணத்தை எடுத்துக் கொள்ள இயலும் அல்லது மேலும் ஐந்து ஆண்டுகளுக்கு திட்டத்தை நீட்டித்துக் கொள்ளவும் முடியும். கம்மி தொகையாக மாதம் ரூ. 1000 முதலீடு செய்கிறீர்கள் என்று வைத்துக் கொண்டால் 15 ஆண்டுகளில் உங்களின் சேமிப்பில் 1.80 லட்சம் இருக்கும். இதற்கான வட்டியானது ரூ. 1.45 லட்சமாக இருக்கும். எனவே உங்களின் மெச்சூரிட்டியின் போது நீங்கள் ரூ. 3.25 லட்சத்தை பெற முடியும்.

    ஒருவேளை விருப்பப்பட்டு மேலும் 5 ஆண்டுகள் நீட்டித்தால் முதலீடு ரூ. 2.40 லட்சமாக இருக்கும். உங்களுக்கான வட்டி தொகை 2.92 லட்சமாக இருக்கும். மெச்சுரிட்டியின் போது நீங்கள் ரூ. 5.32 லட்சம் பெற முடியும். இதுவே 30 ஆண்டுகள் என்றால்
    12.36 லட்சம் பணத்தை மெச்சூரிட்டியாக பெற்றுக்கொள்ள முடியும். நீங்கள் ஐந்து ஆண்டுகள் பி.பி.எஃப்.-ல் தவணை மாறாமல் முதலீடு செய்து வந்தால் 6வது ஆண்டில் நீங்கள் கடனை வாங்கிக் கொள்ள முடியும்.எனவே நல்ல முதலீடு திட்டத்தை தேடி அலைபவர்கள் பி.பி.,எப் திட்டத்தை தாரளமாக தேர்ந்தெடுக்கலாம்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Sreeja Sreeja
    First published:

    Tags: PPF

    அடுத்த செய்தி