2023-இல் இந்தியாவில் உங்கள் வரிகளைக் குறைப்பதற்கான உத்திகளைக் கண்டறிய முயற்சித்து வருகிறீர்களா? 2023 ஆம் ஆண்டிற்கான இந்தியாவில் சிறந்த முதலீடுகள் வரிகளில் உங்கள் பணத்தை மிச்சப்படுத்துவதற்கு ஏராளமான வழிமுறைகளை பொருளாதார நிபுணர்கள் ஆய்வு செய்துள்ளனர். இவை சரியான முறையில் உங்களின் வரியை குறைப்பதற்கும், வரி சலுகையை பெறுவதற்கும் உதவுகின்றன. இந்த பதிவில், தேசிய ஓய்வூதிய திட்டம் முதல் பொது வருங்கால வைப்பு நிதி திட்டம் வரை, 2023 ஆம் ஆண்டுக்கான சில வரிச் சேமிப்பு குறிப்புகள் குறித்து தான் பார்க்க போகிறோம்.
வரி செலுத்துவோர் முதலீடு செய்வதற்கு முன் தங்கள் இலக்கை கருத்தில் கொள்ள வேண்டியது முதல் விஷயம். ஏனெனில் வரியில் மட்டுமே பணத்தைச் சேமிக்க வேண்டுமா அல்லது நல்ல வருமானம் ஈட்ட வேண்டுமா என்பதை யோசிக்க வேண்டும். இதற்காக பல வரி சேமிப்பு திட்டங்கள் உள்ளன. இதற்கு ஒரு முக்கிய உதாரணம் வங்கியில் நாம் அதிகம் பயன்படுத்த கூடிய ஃபிக்ஸ்டு டெபாசிட் (FD) முறையாகும். இவை பாதுகாப்பான முதலீட்டு விருப்பங்கள் என்றாலும், இவற்றின் வருமானம் பொதுவாக அதிகமாக இருக்காது.
இருப்பினும், ரிசர்வ் வங்கி வட்டி விகிதத்தை உயர்த்திய பிறகு, வங்கிகளும் ஃபிக்ஸ்டு டெபாசிட் மீதான வருமானத்தை உயர்த்தியுள்ளன. ஒரு வரம்பிற்குப் பிறகு வரி-சேமிப்பு ஃபிக்ஸ்டு டெபாசிட்களில் திரட்டப்படும் வட்டிக்கு வரி செலுத்தப்பட வேண்டும். மேலும், செல்வத்தை பெருக்குவதும் உங்கள் இலக்குகளில் ஒன்றாக இருந்தால், இந்த திட்டங்களில் முதலீடு செய்ய வேண்டும். ஏனெனில் இவை மிக அதிக வருமானத்தை தருகின்றன.
அடுத்தாக சுகன்யா சம்ரித்தி யோஜனா, தேசிய ஓய்வூதிய திட்டம் (NPS), யூனிட் இணைக்கப்பட்ட காப்பீட்டுத் திட்டம் (ULIP), பொது வருங்கால வைப்பு நிதி (PPF), ஈக்விட்டி இணைக்கப்பட்ட சேமிப்புத் திட்டங்கள் (ELSS), தேசிய சேமிப்புச் சான்றிதழ்கள் (NSC) ஆகிய திட்டங்கள் மிகவும் பயனுள்ள முதலீட்டு வழிகளாகும். இதில் நீங்கள் நல்ல வருமானத்தைப் பெறுவது மட்டுமல்லாம் வரிகளையும் சேமிக்க முடியும். கூடுதலாக, ஈக்விட்டி இணைக்கப்பட்ட சேமிப்புத் திட்டங்கள் மூன்று ஆண்டுகளில் முதிர்ச்சியடைகிறது. எனவே, உங்கள் பணம் நீண்ட காலத்திற்கு அப்படியே இருப்பதில்லை. இருப்பினும், இதன் வருவாய் நிலையானது அல்ல என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும்.
Also Read : பான் கார்டு வைத்திருப்பவர்கள் கவனத்திற்கு... இந்த தவறை செய்தால் ரூ.10,000 அபராதம்!
தேசிய ஓய்வூதியத் திட்டம் என்பது வரிச் சலுகைகள், வருமானம் மற்றும் ஓய்வூதிய நிதிகளைக் கருத்தில் கொள்ளும்போது உகந்த முதலீட்டு உத்தியாகும். நீங்கள் ஓய்வு பெறும்போதும் இதில் முதலீடு செய்யலாம். இது வரி இல்லாத முதலீடுகளையும் வெகுமதிகளையும் கொண்டுள்ளது. இதன் மூலம் 9% முதல் 12% வரை லாபம் பெறலாம். எனவே மேற்குறிப்பிட்ட வழிகளை பயன்படுத்தி உங்களின் வரிகளை நீங்கள் குறைத்து கொள்ளலாம்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: House Tax, Income tax, Property tax, Savings