முகப்பு /செய்தி /வணிகம் / Bank Closed : மக்களே உஷார்... அடுத்த 6 நாட்களில் 5 நாட்கள் வங்கிகள் இயங்காது

Bank Closed : மக்களே உஷார்... அடுத்த 6 நாட்களில் 5 நாட்கள் வங்கிகள் இயங்காது

மாதிரி படம்

மாதிரி படம்

குடியரசு தினம் மற்றும் வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தம் காரணமாக அடுத்துவரும் 6 நாட்களில் 5 நாட்கள் வங்கிகள் இயங்காது. இதனால் வங்கி சேவை கடுமையாக பாதிக்கப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது.

  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

நாடு முழுவதும் பணப்பரிவர்தனைக்கு முதுகெலும்பாக வங்கிகள் செயல்பட்டு கொண்டிருக்கின்றன. தனியார் நிறுவனங்கள், தொழில் நிறுவனங்கள், வெகுஜன மக்கள் உள்ளிட்ட பலரும் வங்கிகளில் பணப்பரிவர்தணை மேற்கொண்டு வருகின்றனர். வங்கி வார விடுமுறை நாட்கள் முடிந்து செயல்பட தொடங்கும் முதல் நாள் அன்று பொதுவாக வங்கிகளில் கூட்டம் அலைமோதும். இந்நிலையில் வரும் நாட்களில் 5 நாட்கள் வங்கி சேவை இயங்காது என்பதால் வங்கி சேவை முற்றிலும் பாதிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.

காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும், பழைய ஓய்வூதியத்தை மீண்டும் செயல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அகில இந்திய வங்கி ஊழியர்கள் சங்கம் சார்பில் ஜனவரி 30 (திங்கள் கிழமை) மற்றும் ஜனவரி 31 (செவ்வாய் கிழமை) போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஜனவரி 28 ஆம் தேதி 4 ஆவது சனிக்கிழம என்பதால் அன்றைய தினம் மற்றும் அதற்கு அடுத்த நாள் ஜனவரி 29 ஆம் தேதி ஞாயிறு பொதுவிடுமுறை என்பதால் ஜனவரி 28 முதல் 31 ஆம் தேதி வரை 4 நாட்கள் தொடர்ந்து வங்கிகள் இயங்காது. இதேப்போன்று நாளை (ஜனவரி 26) குடியரசு தினம் அரசு விடுமுறை என்பதால் வங்கிகள் இயங்காது. இதனால் வரும் 6 நாட்களில் 5 நாட்களில் வங்கிகள் இயங்காமல் இருக்கும்.

இதனிடையே, மும்பையில் வங்கி வேலைநிறுத்தம் தொடர்பாக துணை தலைமை தொழிலாளர் ஆணையர் முன்னிலையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் எந்த சமரசமும் ஏற்படவில்லை. இதையடுத்து, சமரச கூட்டம் ஜனவரி 27 ஆம் தேதி தள்ளி வைக்கப்பட்டுள்ளது. வங்கிகள் தொடர்ந்து இயங்காது என்பதால் பொதுமக்கள் ஏடிஎம் மையங்களில் பணம் எடுப்பது மற்றும் பணம் கையிருப்பை உறுதி செய்து கொள்ள அறிவிறுத்தப்பட்டுள்ளது.

First published:

Tags: Bank