முகப்பு /செய்தி /வணிகம் / ஏப்ரல் மாதத்தில் இந்த தேதிகளில் மட்டும் வங்கிகள் இயங்காது: முழு விவரம்!!

ஏப்ரல் மாதத்தில் இந்த தேதிகளில் மட்டும் வங்கிகள் இயங்காது: முழு விவரம்!!

கோப்பு படம்

கோப்பு படம்

வங்கி விடுமுறைகள் குறிப்பிட்ட மாநிலங்களில் அனுசரிக்கப்படும் பண்டிகைகளைப் பொறுத்தது என்பதையும், அவை ஒவ்வொரு மாநிலத்திற்கும் வேறுபடக்கூடும் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

  • News18
  • 1-MIN READ
  • Last Updated :

ஒவ்வொரு மாதமும் தேசிய பண்டிகைகள், உள்ளூர் பண்டிகைகள், விழாக்களுக்கு ஏற்றவாறு வங்கிகள் விடுமுறை தேதிகளை அறிவிப்பது வழக்கம். அந்த வகையில் ஏப்ரல் மாதம் எந்தெந்த நாட்களில் வங்கிகள் இயங்காது என்பது குறித்து ஒரு ரிசர்வ் வங்கி (RBI) ஒரு பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி இன்று தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்றதால் மாநிலம் முழுவதும் அரசு மற்றும் தனியார் வங்கிகள் அனைத்தும் செயல்படாது என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டது. ஒவ்வொரு மாதமும் குறிப்பிட்ட நாட்களை விடுமுறை நாட்களாக அறிவிக்கும் முடிவு மூன்று விஷயங்களை கருத்தில் கொண்டு எடுக்கப்படும்.

அவை, பேச்சுவார்த்தைக்குட்பட்ட கருவிகள் சட்டத்தின் கீழ் விடுமுறை, நிகழ்நேர மொத்த தீர்வு விடுமுறை மற்றும் வங்கிகளின் கணக்குகளை முடித்தல் போன்றவை ஆகும். வங்கி விடுமுறைகள் குறிப்பிட்ட மாநிலங்களில் அனுசரிக்கப்படும் பண்டிகைகளைப் பொறுத்தது என்பதையும், அவை ஒவ்வொரு மாநிலத்திற்கும் வேறுபடக்கூடும் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். அனைத்து காரணிகளையும் கருத்தில் கொண்டு, 2021 ஏப்ரல் மாதத்திற்கான வங்கி விடுமுறை பட்டியலை குறித்து பின்வருமாறு காண்போம்.

ஏப்ரல் 10: மாதத்தின் இரண்டாவது சனிக்கிழமை என்பதால் அணைத்து வங்கிகளும் மூடப்படும்.

ஏப்ரல் 13: குடி பத்வா, தெலுங்கு புத்தாண்டு தினம், உகாதி விழா, சஜிபு நோங்மபன்பா (செயிரோபா), 1 வது நவராத்திரி, வைசாக்கி போன்ற பண்டிகைகள் காரணமாக மஹாராஷ்டிரா, தெலுங்கானா, ஆந்திரா, உள்ளிட்ட மாநிலங்களில் வங்கிகள் செயல்படாது.

ஏப்ரல் 14: டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கர் ஜெயந்தி, தமிழ் புத்தாண்டு தினம், விஷு , பிஜு விழா (திரிபுரா), செயிரோபா (மணிப்பூர்), போஹாக் பிஹு (அசாம், அருணாச்சல பிரதேசம்) பண்டிகைகள் இருப்பதால் அன்றைய தினம் தமிழ்நாடு, கேரளா, திரிபரா, மணிப்பூர், அசாம், அருணாச்சலப்பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் மட்டும் வங்கிகள் மூடப்படும்.

Also read... கொரோனா காலத்திலும் முன்னேற்றம் கண்ட இன்சூரன்ஸ் தொழில் - கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய இன்சூரன்ஸ் பாலிசிகள்!

ஏப்ரல் 15: ஹிமாச்சல் தினம், பெங்காலி புத்தாண்டு தினம், போஹாக் பிஹு, சர்ஹுல் பண்டிகைகள் காரணமாக ஹிமாச்சல் பிரதேசம், மேற்கு வங்கம், அசாம், ஜார்கண்ட் உள்ளிட்ட மாநிலங்களில் வங்கிகள் செயல்படாது.

ஏப்ரல் 21: ஸ்ரீ ராம் நவ்மி (சைட் தஷைன்), காரியா பூஜா. இது மேற்கு வங்கம், அசாம், கோவா, ஜம்மு-காஷ்மீர், ஜார்கண்ட், கர்நாடகா, கேரளா, லட்சத்தீப், மணிப்பூர், மேகாலயா, நாகாலாந்து, அருணாச்சல பிரதேசம், மிசோரம், புதுச்சேரி, தமிழ்நாடு ஆகிய நாடுகளில் நடைபெறும் எனவே இந்த பண்டிகை தேசிய விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஏப்ரல் 24: மாதத்தின் நான்காவது சனிக்கிழமை என்பதால் வங்கிகள் நாடு முழுவதும் மூடப்படும்.

ஏப்ரல் 25: மகர்ஷி பசுராம் ஜெயந்தி. இமாச்சலப் பிரதேசம், குஜராத், ஹரியானா, ராஜஸ்தான் ஆகிய நாடுகளில் இது கடைபிடிக்கப்பட வேண்டிய விடுமுறை என்பதால் அன்று வங்கிகள் செயல்படாது.

உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.

First published:

Tags: Bank holiday