Home /News /business /

நவம்பர் மாதத்தில் தொடர்ச்சியாக வரும் வங்கி விடுமுறை நாட்கள்... முழு விவரம்!

நவம்பர் மாதத்தில் தொடர்ச்சியாக வரும் வங்கி விடுமுறை நாட்கள்... முழு விவரம்!

வங்கி

வங்கி

தீபாவளி காரணமாக நவம்பர் 14ம் தேதியும், குருநானக் ஜெயந்தி காரணமாக நவம்பர் 30ம் தேதியும் வங்கிகள் செயல்படாது.

பண்டிகை மாதங்களில், வங்கி ஊழியர்களுக்கு பல விடுமுறைகள் கிடைக்கின்றன.  அதன்படி நவம்பரில், தீபாவளி மற்றும் குரு நானக் ஜெயந்தி ஆகிய இரண்டு முக்கிய திருவிழாக்களில் வங்கிகள் மூடப்படும் இது தவிர நான்கு ஞாயிறு மற்றும் இரண்டு சனிக்கிழமைகளில் மூடப்படும்.

வழக்கமாக, வங்கிகள் ஞாயிறு மற்றும் இரண்டாவது, நான்காவது சனிக்கிழமைகளில் செயல்படாது. ஆனால், 2020 நவம்பரில், தீபாவளி இரண்டாவது சனிக்கிழமையன்று வருகிறது. அதாவது வங்கி ஊழியர்களுக்கு இந்த ஆண்டு ஒரு விடுமுறை குறைகிறது.
தீபாவளி வார இறுதி நாட்களைத் தவிர வேறு எந்த நாளிலும் இருந்திருந்தால், வங்கிகள் கூடுதலாக ஒரு நாள் மூடப்பட்டிருக்கும்.

ALSO READ |  நவம்பர் 1 முதல் சமையல் கேஸ் சிலிண்டர் பெறுவதில் புதிய நடைமுறை..!

பொதுவான விடுமுறைகள் தவிர, பல மாநிலங்களில் உள்ள வங்கிகள் மாநில-குறிப்பிட்ட திருவிழாக்கள் அல்லது சந்தர்ப்பங்கள் காரணமாக இயங்காது. நவம்பர் மாதத்தில் 1, 8, 15, 22 மற்றும் 29 ஆகிய தேதிகள் ஞாயிற்றுக்கிழமை என்பதால் அந்த நாட்களில் வங்கிகள் செயல்படாது. இந்த நாட்களைத் தவிர, நான்காவது சனிக்கிழமை காரணமாக நவம்பர் 28 அன்று வங்கிகள் மூடப்படும். இவை பொதுவான விடுமுறை ஆகும்.

இது தவிர தீபாவளி காரணமாக நவம்பர் 14ம் தேதியும், குருநானக் ஜெயந்தி காரணமாக நவம்பர் 30ம் தேதியும் வங்கிகள் செயல்படாது. நவம்பர் 16 ஆம் தேதி, பாய் தூஜ் காரணமாக பல மாநிலங்களில் வங்கிகள் மூடப்படும். மணிப்பூரில், நிங்கோல் சகௌபா பண்டிகை காரணமாக நவம்பர் 17 அன்று செயல்படாது. பீகார் மற்றும் ஜார்க்கண்டில், சாத் பூஜை காரணமாக வங்கிகள் இயங்காது.

ALSO READ |  ’தமிழக அரசு அலுவலகங்கள் அனைத்திலும் பிரதமர் மோடியின் புகைப்படத்தை வைக்கவேண்டும்’ - பாஜகவினர் வலியுறுத்தல்

நவம்பர் 24 ஆம் தேதி, லச்சித் திவாஸின் காரணமாக அசாமில் வங்கிகள் மூடப்படும். மேகாலயாவில், செங் குட் ஸ்னெம் பண்டிகை காரணமாக சேவைகளை வழங்க மாட்டார்கள் என்பதால் நவம்பர் 26 ஆம் தேதி வாடிக்கையாளர்கள் வங்கிகளுக்குச் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.

இது தவிர, ஈத் இ-மிலாட்-உன்-நபி காரணமாக ஜம்மு- காஷ்மீரில் வங்கிகள் நவம்பர் 30ம் தேதி செயல்படாது. மேலும், ஹரியானா தினம், கன்னட ராஜ்யோத்சவா, புதுச்சேரி விடுதலை தினம்,
குட், கோவர்தன் பூஜை, காளி பூஜை, மற்றும் விக்ரம் சம்வத் புத்தாண்டு  ஆகியவையும் நவம்பரில் கடைபிடிக்கப்படும். ஆனால் இந்த நாட்கள் அனைத்தும் ஞாயிற்றுக்கிழமைகளில் வருகின்றன.

ALSO READ |  அடிக்கடி ஏற்பட்ட கோளாறால் ஆத்திரம்.. ரூ 2.4 கோடிக்கு வாங்கிய சொகுசு காரை கொளுத்திவிட்டு வீடியோ எடுத்த யூ ட்யூபர்..

அதேபோல, அக்டோபர் 2020ல், மிலாட்-இ- ஷெரீப்பின் காரணமாக அக்டோபர் 29ம் தேதி ஒரு சில மாநிலங்களில் வங்கிகள் மூடப்படும். ஈத்-இ-மிலாட் காரணமாக பல மாநிலங்களில் அக்டோபர் 30ம் தேதி வங்கிகள் இருக்காது.



அக்டோபர் 31ம் தேதி, மகர்ஷி வால்மீகி அல்லது சர்தார் படேல் ஜெயந்தி காரணமாக வங்கிகள் ஒரு சில மாநிலங்களை இயக்காது என்பது குறிப்பிப்பிடத்தக்கது.
Published by:Sankaravadivoo G
First published:

Tags: Bank, Diwali

அடுத்த செய்தி