முகப்பு /செய்தி /வணிகம் / Bank Holiday | ஜூன் மாதத்தில் இந்த 8 நாட்கள் வங்கிகள் இயங்காது.. முழு விவரங்கள் இங்கே

Bank Holiday | ஜூன் மாதத்தில் இந்த 8 நாட்கள் வங்கிகள் இயங்காது.. முழு விவரங்கள் இங்கே

Bank Holiday

Bank Holiday

Bank Holidays | இந்திய ரிசர்வ் வங்கி அடுத்த மாதம் வங்கி விடுமுறை நாட்களின் பட்டியலை ஏற்கனவே தயாரித்துள்ளது. இது ஒவ்வொரு ஆண்டு தொடக்கத்திலும் வங்கிகள் தங்கள் வருடாந்திர விடுமுறையைப் பெறுவதற்கான திட்டத்தை வகுத்துள்ளது. ரிசர்வ் வங்கியால் அறிவிக்கப்பட்ட வங்கி விடுமுறை நாட்களில், அனைத்து பொதுத்துறை, தனியார் துறை, கூட்டுறவு வங்கிகள் மற்றும் பிராந்திய வங்கிகளின் கிளைகள் மூடப்பட்டிருக்கும்.

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

இந்தியாவின் பல பகுதிகளில் உள்ள வங்கிகளுக்கு அடுத்த மாதம் குறைவான விடுமுறை நாட்களே இருக்கின்றன. அடுத்த மாதம் அதாவது வரும் ஜூன் 2022-ல் 8 வங்கி விடுமுறை நாட்கள் உள்ளன. இந்த விடுமுறைகள் தனியார் மற்றும் பொதுத் துறை வங்கிகளுக்கு பொருந்தும்.

வார இறுதி நாட்களைத் தவிர, நாட்டின் பல்வேறு நகரங்களில், ரிசர்வ் வங்கியின் விடுமுறை காலண்டர் நிகழ்ச்சிகள் வித்தியாசமாக இருக்கும். இந்தியாவில் வங்கி விடுமுறைகள் Negotiable Instruments Act, Real-time gross settlement, Closing of bank accounts (வங்கி கணக்குகளை மூடுதல்) என மூன்றாக வகைப்படுத்தப்பட்டுள்ளன.

இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) வெளியிட்ட பட்டியலின் படி, ஜூன் மாதத்தில் வங்கிகள் எட்டு நாட்களுக்கு மூடப்பட்டிருக்கும். இதில், இரண்டு விடுமுறை நாட்கள் Negotiable Instruments Act-n கீழ் (Negotiable Instruments Act) பட்டியலிடப்பட்டுள்ளன. மீதமுள்ள 6 நாட்களில் 4 ஞாயிற்று கிழமைகள், இரண்டாவது மற்றும் நான்காவது சனிக்கிழமைகள் ஆகிய வார இறுதி விடுமுறைகள் ஆகும். இந்திய ரிசர்வ் வங்கி அடுத்த மாதம் வங்கி விடுமுறை நாட்களின் பட்டியலை ஏற்கனவே தயாரித்துள்ளது. இது ஒவ்வொரு ஆண்டு தொடக்கத்திலும் வங்கிகள் தங்கள் வருடாந்திர விடுமுறையைப் பெறுவதற்கான திட்டத்தை வகுத்துள்ளது.

ரிசர்வ் வங்கியால் அறிவிக்கப்பட்ட வங்கி விடுமுறை நாட்களில், அனைத்து பொதுத்துறை, தனியார் துறை, கூட்டுறவு வங்கிகள் மற்றும் பிராந்திய வங்கிகளின் கிளைகள் மூடப்பட்டிருக்கும். வர இறுதி விடுமுறைகளை தவிர ஜூன் மாதத்தில் 2 வங்கி விடுமுறைகள் மட்டுமே உள்ளன. இருப்பினும், இந்த 2 நாட்களில் நாடு முழுவதும் உள்ள அனைத்து வங்கிகளும் மூடப்படாது.

எடுத்துக்காட்டாக வரும் ஜூன் 2ஆம் தேதி (வியாழக்கிழமை), மகாராணா பிரதாப் ஜெயந்தியை (Maharana Pratap Jayanti) முன்னிட்டு ஷில்லாங்கில் அனைத்து பொதுத்துறை, தனியார் துறை, வெளிநாட்டு வங்கிகள், கூட்டுறவு வங்கிகள் மற்றும் பிராந்திய வங்கிகளின் கிளைகள் மூடப்பட்டிருக்கும். அதே நேரத்தில் நாட்டின் பிற பகுதிகளில் வங்கிகளுக்கு விடுமுறை இல்லை. அதே போல வரும் ஜூன் 15-ஆம் தேதி புதன்கிழமை, ஒய்எம்ஏ தினம் / குரு ஹர்கோவிந்த் ஜியின் பிறந்தநாள் / ராஜ சங்கராந்தியை உள்ளிட்டவற்றை முன்னிட்டு மிசோரம் தலைநகரம் ஐசவ்ல், புவனேஷ்வர், ஜம்மு மற்றும் ஸ்ரீநகரில் உள்ள வங்கிகளுக்கு விடுமுறை ஆகும்.

Also Read : FIXED DEPOSIT : எந்த வங்கியில் பணத்தை போட்டால் லாபம் பார்க்கலாம்! முழு லிஸ்ட்

ஜூன் 2022 வங்கி விடுமுறை நாட்களின் முழுப் பட்டியல் இங்கே...

Negotiable Instruments Act-ன் கீழ் வரும் விடுமுறை நாட்களின் பட்டியல் :

ஜூன் 2: மகாராணா பிரதாப் ஜெயந்தி - ஷில்லாங்

ஜூன் 15: ஒய்.எம்.ஏ. நாள்/ குரு ஹர்கோவிந்த் ஜியின் பிறந்தநாள்/ ராஜ சங்கராந்தி - ஐசவ்ல், புவனேஷ்வர், ஜம்மு, ஸ்ரீநகர்

மேற்கண்ட இந்த 2 நாட்கள் தவிர நாடு முழுவதும் உள்ள வங்கிகள் 6 வார இறுதி விடுமுறை நாட்களை கொண்டுள்ளன. இவை கீழே குறிப்பிடப்பட்டுள்ளன.,

ஜூன் 5 - ஞாயிறு

ஜூன் 11 - இரண்டாவது சனிக்கிழமை

ஜூன் 12 - ஞாயிறு

ஜூன் 19 - ஞாயிறு

ஜூன் 25 - நான்காவது சனிக்கிழமை

ஜூன் 26 - ஞாயிறு

First published:

Tags: Bank holiday, Reserve Bank of India