வங்கி வேலைகளை முடிக்க திட்டமா... ஆகஸ்ட் 19 - ஆகஸ்ட் 23 வரை எந்தெந்த தினங்களில் வங்கிகளுக்கு விடுமுறை?

மாதிரி படம்

பிராந்திய மற்றும் தேசிய விடுமுறைகள் மற்றும் வாராந்திர விடுமுறை இருப்பதன் காரணமாக இந்த ஆகஸ்ட் மாதம் வங்கிகளுக்கு வழக்கத்தை விட சற்று கூடுதல் நாட்கள் விடுமுறைகள் வருகின்றன.

  • Share this:
ரிசர்வ் வங்கி (RBI) விடுமுறை காலண்டர் படி ஆகஸ்ட் 19 முதல் (இன்று முதல்) வரும் 23-ம் தேதி வரை, நாட்டின் சில மாநிலங்களில் உள்ள வங்கிகளுக்கு 5 நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. ஆகஸ்ட் மாதம் என்பது பண்டிகை காலத்தின் தொடக்கத்தைக் குறிக்கும் மாதமாக இருப்பதால், பல மாநிலங்களில் அந்தந்த கலாச்சாரத்திற்கு ஏற்ப சில பண்டிகைகள் கொண்டாடப்படுகின்றன. இந்த பண்டிகைகள் காரணமாக வங்கிகளுக்கு விடுமுறை அளித்துள்ளது மத்திய ரிசர்வ் வங்கி. பல பிராந்திய மற்றும் தேசிய விடுமுறைகள் மற்றும் வாராந்திர விடுமுறை இருப்பதன் காரணமாக இந்த ஆகஸ்ட் மாதம் வங்கிகளுக்கு வழக்கத்தை விட சற்று கூடுதல் நாட்கள் விடுமுறைகள் வருகின்றன. அதிக விடுமுறை கொண்ட இந்த மாதத்தின் முதல் நாளான ஆகஸ்ட் 1-ம் தேதியே ஞாயிற்றுக்கிழமையில் தான் தொடங்கியது.

எனவே வாடிக்கையாளர்கள் சிரமத்தை தவிர்க்க தங்கள் வங்கிகளின் எந்த பிராஞ்சிற்கும் செல்வதற்கு முன், RBI-ன் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் கிடைக்கும் விடுமுறை காலண்டரை சரிபார்த்து விட்டுகு முன்பு அதற்கேற்ப திட்டமிடுவது நல்லது. இன்று முதல் ஆகஸ்ட் 23 வரையிலான காலகட்டத்தில், 5 வங்கி விடுமுறைகள் உள்ளன. எனவே மக்கள் வங்கிகளுக்கு செல்ல திட்டமிடும் இன்று வங்கிகளுக்கு வேலை நாளா என்பதை கவனிக்க வேண்டும். முஹர்ரம், ரக்ஷா பந்தன் மற்றும் ஓணம் ஆகியவை இந்த (ஆகஸ்ட் 19 - 23) காலகட்டத்தில் வரும் சில பிரபல பண்டிகை விடுமுறைகள் ஆகும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

எந்தெந்த தினங்களில் என்ன பண்டிகைகளுக்காக எந்த மாநில வங்கிகளுக்கு விடுமுறை நாட்கள் இருக்கின்றன என்பதை தற்போது பார்ப்போம்:

ஆகஸ்ட் 19: திரிபுரா, குஜராத், பஞ்சாப் மகாராஷ்டிரா, மத்தியப் பிரதேசம், உத்தரப் பிரதேசம், டெல்லி, மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களில் உள்ள வங்கிகள் முஹர்ரம் காரணமாக இன்று மூடப்பட்டிருக்கும். குறிப்பாக அகர்தலா, அகமதாபாத், பெலப்பூர், ஹைதராபாத், ஜெய்ப்பூர், ஜம்மு, கான்பூர், லக்னோ உள்ளிட்ட நகரங்களில் இருக்கும் வங்கிகளுக்கு இன்று விடுமுறையாகும்.

ஆகஸ்ட் 20: தென் மாநிலங்களில் ஓணம் பண்டிகை வெகு விமரிசையாக கொண்டாடப்படுவதால் கேரளா,தமிழ்நாடு, கர்நாடகா முழுவதும் வங்கிகளுக்கு நாளைய தினம் விடுமுறையாகும். இதனால் பெங்களூரு, சென்னை, கொச்சி மற்றும் திருவனந்தபுரம் உள்ளிட்ட முக்கிய நகரங்களில் இருக்கும் வங்கிகளும் மூடப்படும்.

Also read... Gold Rate: இரண்டாவது நாளாக குறைந்தது தங்கம் விலை... இன்று (ஆகஸ்ட் 19-2021) சவரன் எவ்வளவு தெரியுமா?

ஆகஸ்ட் 21: திருவோணத்தையொட்டி கேரளாவில் இருக்கும் (திருவனந்தபுரம் மற்றும் கொச்சி உட்பட) அனைத்து வங்கிகளும் ஆகஸ்ட் 21 அன்று மூடப்படும்.

ஆகஸ்ட் 22: ரக்ஷபந்தன் மற்றும் வார விடுமுறை (ஞாயிறு) காரணமாக நாடு முழுவதும் இருக்கும் வங்கிகள் ஆகஸ்ட் 22 அன்று மூடப்பட்டிருக்கும்.

ஆகஸ்ட் 23: அடுத்த வாரத்தின் முதல் நாளான ஆகஸ்ட் 23-ம் தேதி திங்கட்கிழமை அன்று ஸ்ரீ நாராயண குரு ஜெயந்தியையொட்டி, கேரளாவில் இருக்கும் வங்கிகளுக்கு மீண்டும் ஒரு விடுமுறை நாளாக இருக்கிறது.
Published by:Vinothini Aandisamy
First published: