முகப்பு /செய்தி /வணிகம் / மார்ச் மாதத்தில் வங்கிகளுக்கு 13 நாட்கள் விடுமுறை - வங்கி செல்ல திட்டமிடும் முன்பாக இதை சரிபார்க்கவும்

மார்ச் மாதத்தில் வங்கிகளுக்கு 13 நாட்கள் விடுமுறை - வங்கி செல்ல திட்டமிடும் முன்பாக இதை சரிபார்க்கவும்

வங்கி விடுமுறை

வங்கி விடுமுறை

Bank Holidays March 2022 | மார்ச் மாதத்தில் மொத்தம் 13 நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை வருகிறது என ரிசர்வ் வங்கி குறிப்பிட்டுள்ளது. எஞ்சியுள்ள நாட்கள் அனைத்தும் வார இறுதி விடுமுறை ஆகும்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

நடப்பு நிதியாண்டின் கடைசி மாதம் வர இருக்கிறது. இந்த சமயத்தில் ஏராளமான கணக்கு, வழக்குகளை முடிக்க வேண்டிய கடமை உங்களுக்கு இருக்கலாம். அதேசமயம், மார்ச் மாதத்தில் நீங்கள் வங்கிகளுக்கு செல்ல திட்டமிடும் முன்பாக முக்கியமான விஷயம் ஒன்றை மனதில் கொள்ளுங்கள். அதாவது, அடுத்த மாதத்தில் 13 நாட்களுக்கு வங்கிகள் விடுமுறையில் இருக்கும். அதிர்ச்சி அடையாமல் இந்த செய்தியை படித்து, அதற்கு ஏற்ப உங்கள் வங்கி சார்ந்த நடவடிக்கைகளை திட்டமிட்டுக் கொள்ளவும்.

மார்ச் மாதத்தில் எந்தெந்த நாட்களில் வங்கிகளுக்கு விடுமுறை என்பது குறித்து ரிசர்வ் வங்கி அறிவிப்பு வெளியிட்டுள்ளது. ஆனால், இந்த நாட்களில் ஆன்லைன் பேங்கிங் சேவைகள் அனைத்தும் செயல்படும் என்பது சற்று ஆறுதலான விஷயம்.

மார்ச் மாதத்தில் மொத்தம் 13 நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை வருகிறது என ரிசர்வ் வங்கி குறிப்பிட்டுள்ளது. எஞ்சியுள்ள நாட்கள் அனைத்தும் வார இறுதி விடுமுறை ஆகும். எனினும், அனைத்து மாநிலங்களிலும் அல்லது அனைத்து பிராந்தியத்திலும் 13 நாட்களுக்கு வங்கிகள் மூடப்பட்டிருக்காது என்பதை கவனத்தில் கொள்ளவும்.

நாட்டின் பல்வேறு பகுதிகளில் மாநில அரசு அறிவிக்கும் விடுமுறை நாட்களையும் சேர்த்து இந்தப் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. உதாரணத்திற்கு, பீகாரில் கொண்டாடப்படும் பீகார் திவாஸ் பண்டிகை நாளில், அங்கு வங்கிகளுக்கு விடுமுறை விடப்படும் என்றாலும், இது அஸ்ஸாம், திரிபுரா போன்ற பிற மாநிலங்களுக்கு பொருந்தாது.

ஆகவே, விடுமுறை பட்டியலில் உள்ள நாட்களில், உங்கள் மாநிலம் அல்லது பகுதி சார்ந்த விடுமுறையாக அது வருகிறதா என்பதை உறுதி செய்து கொள்ளவும்.

விடுமுறை நாட்களின் பட்டியல்

மகா சிவராத்திரி - மார்ச் 1

லோசர் - மார்ச் 3

சக்பார் குட் - மார்ச் 4

ஹோலிகா டஹான் - மார்ச் 17

ஹோலி பண்டிகை - மார்ச் 18

ஹோலி அல்லது யசோங் 2ஆம் நாள் - மார்ச் 19

பீகார் திவாஸ் - மார்ச் 2

Also Read : பெர்சனல் லோன் பற்றிய உண்மைகள்.. இனியாவது கவனமாய் இருங்கள்!

மேலே குறிப்பிடப்பட்டுள்ள பண்டிகை நாட்கள் மட்டுமல்லாமல், வார இறுதி நாட்களில் வரும் விடுமுறைகளையும் நாம் கணக்கில் கொள்ள வேண்டும்

ஞாயிறு - மார்ச் 6

இரண்டாம் சனிக்கிழமை - மார்ச் 12

ஞாயிறு - மார்ச் 13

ஞாயிறு - மார்ச் 20

நான்காம் சனிக்கிழமை - மார்ச் 26

ஞாயிறு - மார்ச் 27

Also Read : Fixed Deposit திட்டத்தில் முதலீடு செய்ய விருப்பமா?

விடுமுறை நாட்கள் ஒவ்வொரு மாநிலத்திற்கும் வேறுபடுகிறது என்பதையும், அனைத்து வங்கி நிறுவனங்களும் ஒரே மாதிரியான விடுமுறையை கடைப்பிடிப்பதில்லை என்பதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

First published:

Tags: Bank holiday, Banks