ஹோம் /நியூஸ் /வணிகம் /

FDக்கான வட்டி விகிதங்களை உயர்த்தியுள்ள வங்கிகளின் லிஸ்ட் - சீக்கிரம் பணத்தை டெபாசிட் செய்து பயன்பெறுங்கள்!

FDக்கான வட்டி விகிதங்களை உயர்த்தியுள்ள வங்கிகளின் லிஸ்ட் - சீக்கிரம் பணத்தை டெபாசிட் செய்து பயன்பெறுங்கள்!

வணிகம்

வணிகம்

இந்திய ரிசர்வ் வங்கியின் ரெப்போ ரேட் 50 bps உயர்விற்குப் பிறகு பல பொது மற்றும் தனியார் வங்கிகள் தங்களுடைய நிலையான வைப்புத் தொகைக்கான வட்டி விகிதங்களை அதிகரித்துள்ளன.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

இன்றைக்கு உள்ள சூழலில் சேமிப்பு என்பது அனைவரும் கடைப்பிடிக்க வேண்டிய அத்தியாவசிய தேவைகளில் ஒன்றாகிவிட்டது. மக்களும் தங்களின் பொருளாதார தேவைகளை நிறைவேற்றிக் கொள்வதற்காக ஏதாவது ஒரு சேமிப்புத்திட்டங்களில் முதலீடு செய்யத் தொடங்குகின்றனர். அதற்கேற்றால் போல் பொது மற்றும் தனியார் வங்கிகள், அஞ்சல் அலுவலகங்கள் அனைத்தும் தொடர் வைப்பு நிதி எனப்படும் ஆர்டி, நிலையான வைப்பு நிதி எனப்படும் எஃப்டி, பொது வருங்கால வைப்பு நிதி, செல்வமகள் சேமிப்புத்திட்டம், மாதாந்திர வருமான திட்டம் போன்ற சேமிப்புத்திட்டங்கள் நடைமுறையில் உள்ளது.

இந்த சூழலில் தான் இந்திய ரிசர்வ் வங்கியின் ரெப்போ ரேட் 50 bps உயர்விற்குப் பிறகு பல பொது மற்றும் தனியார் வங்கிகள் தங்களுடைய நிலையான வைப்புத் தொகைக்கான வட்டி விகிதங்களை அதிகரித்துள்ளன. அதிலும் தீபாவளி மற்றும் நவராத்திரி போன்ற பண்டிகை நாள்களையொட்டி வட்டி விகிதங்களை உயர்த்தியது முதலீட்டாளர்களின் கவனத்தை அதிகளவில் ஈர்த்துள்ளது என்று தான் கூற வேண்டும். ஆனால் இந்த வட்டி விகித உயர்வு என்பது குறிப்பிட்ட காலம் மட்டுமே என்பதால் தற்போது உயர்ந்துள்ள வட்டி விகிதங்களில் எது உங்களுக்கானதோ? அதை நீங்கள் தேர்வு செய்து கொள்ளுங்கள். இதோ உங்களுக்கான லிஸ்டை இங்கு தெரிந்துக்கொள்ளுங்கள்.

FD க்கான வட்டி விகிதங்களை உயர்த்தியுள்ள வங்கிகள்:

உஜ்ஜீவன் ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கி - இந்த வங்கியில் FD களுக்கு 7.7 சதவீத வட்டியை வழங்குகிறது. இதன் முதலீட்டுக் காலம் 990 நாட்களாகும்.

பெடரல் வங்கி ( Federal Bank) - மற்ற தனியார் வங்கிகளை விட 7.5 சதவீதத்தில் வட்டியை பெடரல் பேங்க் வழங்குகிறது. இதன் முதிர்வு காலம் 700 நாள்கள் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதே போன்று ஐடிஎஃப்சி ஃபர்ஸ்ட் பேங்க் (IDFC first bank) , ஆர்பிஎல் பேங்க் ( RBL bank) மற்றும் யெஸ் பேங்க் (Yes bank) போன்ற இந்த தனியார் வங்கிகள் வாடிக்கையாளர்களுக்கு நிலையான வைப்புத் தொகைக்கான வட்டியை 7.25 சதவீதத்துடன் வழங்குகிறது.

கர்நாடகா வங்கி முதலீட்டுக் காலம் 555 நாள்கள் உள்ள எப்படிகளுக்கு 7.20 சதவீத வட்டியை வழங்குகிறது.

சிட்டி யூனியன் வங்கி (city union bank) மற்றும் DCB வங்கி ஆகியவை FD களுக்கு 7.10 சதவீத வட்டியை வழங்குகின்றன. இதன் முதலீட்டுக் காலம் 700 நாள்களாகும்.

Also Read : டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வீழ்ச்சியடைய என்ன காரணம்?

மேலும் SBI, Bank of Baroda (BoB), HDFC வங்கி மற்றும் IDBI வங்கி உள்ளிட்ட முன்னணி வங்கிகளும் FD களில் முதலீடு செய்ய வரையறுக்கப்பட்ட கால பண்டிகை சலுகையைக் கொண்டுள்ளன. முதலீட்டுக் காலம் முறையே 1,000 நாட்கள், 555 நாட்கள் மற்றும் 3 ஆண்டுகள் 1 நாள் முதல் 5 ஆண்டுகள் மற்றும் 555 நாட்கள் என நிர்ணயிக்கப்பட்டதோடு அவற்றிற்கு 6.40 சதவீத வட்டியை வழங்குகிறது.

மத்திய வங்கியின் துணை நிறுவனமான டெபாசிட் இன்சூரன்ஸ் மற்றும் கிரெடிட் கேரண்டி கார்ப்பரேஷன், ரூ.5 லட்சம் வரையிலான நிலையான வைப்புகளில் முதலீடுகளுக்கு உத்தரவாதம் அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Published by:Janvi
First published:

Tags: Banks, Interest, Interest rate hike