முகப்பு /செய்தி /வணிகம் / சீனியர், சூப்பர் சீனியர்களின் வைப்பு நிதிக்கு இனி 9.5% வட்டி... எந்தெந்த வங்கியில் தெரியுமா?

சீனியர், சூப்பர் சீனியர்களின் வைப்பு நிதிக்கு இனி 9.5% வட்டி... எந்தெந்த வங்கியில் தெரியுமா?

காட்சிப்படம்

காட்சிப்படம்

Senior Citizens High Interest Fixed deposit : கடந்த சில மாதங்களாக வங்கிகள் வைப்பு நிதியின் வட்டி விகிதத்தை ஏற்றி கொண்டு வருகின்றனர். அதில் சீனியர் மற்றும் சூப்பர் சீனியர்கள் வைப்பு நிதிக்கான வட்டி 9.5 சதவீதம் வரை அதிகரித்துள்ளது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

முதன்மையான தனியார் வங்கிகள் தொடர்ந்து வைப்பு நிதியில் வட்டி விகிதத்தை உயர்த்திக் கொண்டு வருகின்றனர். பொது கணக்கு முதல் சீனியர் சிட்டிசன்களின் கணக்குகள் வரை வட்டி உயர்வு பெற்றுள்ளது. குறிப்பாக எஸ்பிஐ வங்கி,ஹெச்.டி.எப்.சி வங்கி, பஞ்சாப் வங்கி, எஸ் வங்கி மற்றும் யூனிட்டி வங்கி போன்றவை தொடர்ந்து வட்டியை உயர்த்தி வருகின்றனர். சீனியர் சிட்டிசன் நிலையான வைப்பு கணக்குகளுக்கு வட்டியை அதிகமாக வழங்கும் வங்கிகள் பற்றிப் பார்ப்போம்.

ஹெச்.டி.எப்.சி வங்கி:

ஹெச்.டி.எப்.சி வங்கியில் சீனியர் சிட்டிசன்களுக்கு 5 வருடம் முதல் 10 வருடம் வரை வைப்பு கணக்கு வைத்திருப்பவர்களுக்கு 7.75 சதவீதம் வட்டி வழங்கப்படுகிறது. 2 கோடிக்குக் குறைவாகத் தொகை வைப்பு வைக்கும் 60 வயது கடந்தவர்களுக்கு இந்த புதிய வட்டி விகிதம் பிப்ரவரி 21 ஆம் தேதியில் இருந்து நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

எஸ் வங்கி:

எஸ் வங்கியில் சீனியர் சிட்டிசன்களுக்கு 8.25% வட்டி 35 மாதக்கால வைப்பு கணக்குகளுக்கு வழங்கப்படுகிறது. 15 மாதங்களில் இருந்து 25 மாதங்கள் வரை மற்றும் 35 மாதங்களில் இருந்து 36 மாதங்கள் வரை 2 கோடிக்குக் குறைவாக வைப்பு செலுத்தும் கணக்குகளுக்கு 8 % வட்டி வழங்கப்படுகிறது. இந்த முறை பிப்ரவரி 23 ஆம் நாள் முதல் அமலுக்கு வந்துள்ளது.

பஞ்சாப் வங்கி:

பஞ்சாப் வங்கி, 2 வருடத்திற்கு மேல் தொடங்கி 3 வருடம் வரை உள்ள சீனியர் சிட்டிசன் கணக்கு வைப்புக்கு 7.5% வட்டி வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 666 நாட்கள் கணக்கு வைப்பு தொடங்கினால் 8.05% வட்டி வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த முறை பிப்ரவரி 22 முதல் அமலுக்கு வந்துள்ளது.

யூனிட்டி வங்கி:

யூனிட்டி வங்கி, சீனியர் சிட்டிசன்களுக்கு 1001 நாள் நிலையான வைப்பு தொடங்குபவர்களுக்கு 9.5% வட்டி வழங்குகின்றனர். மேலும் 181-201 நாட்கள் வைப்பு மற்றும் 501 நாள் வைப்பு போன்ற திட்டத்தின் கீழ் வைப்பு கணக்கு தொடங்கும் சீனியர் சிட்டிசன்களுக்கு 9.25% வட்டி வழங்குகின்றனர். இந்த முறை பிப்ரவரி 15 ஆம் நாள் முதல் அமலுக்கு வந்துள்ளது.

Also Read : 2023இல் இந்தியாவில் தொழில்நுட்ப துறையினர் 10% சம்பள உயர்வைப் பெறலாம்- ஆய்வில் தகவல்

எஸ்.பி.ஐ வங்கி:

மத்திய அரசின் எஸ்.பி.ஐ வங்கி 5 முதல் 10 ஆண்டுகள் உள்ள சீனியர் சிட்டிசன் நிலையான வைப்பு கணக்குகளுக்கு 7.5% வட்டி வழங்கிவருகின்றனர். அம்ரித் கலாஷ் வைப்பு திட்டத்தின் மூலம் 400 வைப்பு கணக்கிற்கு 7.6% வட்டி வழங்கப்படுகிறது. இத்திட்டம் பிப்ரவரி 15 ஆம் நாள் தொடங்கப்பட்ட நிலையில் மார்ச் 31 ஆம் நாள் வரை நடைமுறையில் இருக்கும். 60 வயதை நிறைந்தவர்கள் இத்திட்டத்தின் கீழ் நிலையான வைப்பு கணக்கு தொடங்கி வட்டியை பெற்றுக்கொள்ளலாம்.

First published:

Tags: Banks, Fixed Deposit, Interest, Interest rate