Home /News /business /

செகண்ட் ஹேண்ட் கார் வாங்கவும் லோன் கிடைக்கும்... என்னென்ன ஆவணங்கள் தேவை? 

செகண்ட் ஹேண்ட் கார் வாங்கவும் லோன் கிடைக்கும்... என்னென்ன ஆவணங்கள் தேவை? 

Car Loan

Car Loan

Car Loan | நீங்கள் செகண்ட் ஹேண்ட் அல்லது யூஸ்டு காரை வாங்க விண்ணப்பிக்கும் போது, இரண்டு விஷயங்கள் முக்கியமானவை. ஒன்று விண்ணப்பதாரரின் தகுதிகள், இரண்டாவது நீங்கள் வாங்க திட்டமிட்டுள்ள காரின் ஆவணங்கள். இந்த இரண்டு விஷயங்களும் சரியாக இருந்தால், நீங்கள் உடனடியாக கடனைப் பெறலாம்.

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 4 minute read
  • Last Updated :
புதிய கார் வாங்க மட்டும்தான் கடன் பெற முடியும் என்று மக்கள் நினைக்கிறார்கள், ஆனால் அது உண்மையல்ல. ஏறக்குறைய அனைத்து வங்கிகளும் நீங்கள் தகுதிக்கான நிபந்தனைகளைப் பூர்த்தி செய்தால், செகண்ட் ஹேண்ட் கார்களை வாங்கவும் கடன் வழங்குகின்றன.

செகண்ட் ஹேண்ட் கார் வாங்க போதுமான அளவு பணம் இல்லாமல் திண்டாடி வருகிறீர்களா? கவலையை விடுங்க. பொது மற்றும் தனியார் வங்கிகள் இரண்டிலிருந்தும் செகண்ட் ஹேண்ட் அல்லது வேறு ஒருவருக்கு சொந்தமான கார்களை வாங்க கடன் பெற முடியும். புதிய கார் வாங்க மட்டுமே கடன் பெற முடியும் என்று மக்கள் நினைக்கிறார்கள், ஆனால் அது உண்மையல்ல. ஏறக்குறைய அனைத்து வங்கிகளும் நீங்கள் தகுதிக்கான நிபந்தனைகளைப் பூர்த்தி செய்தால், இரண்டாவது கை கார் வாங்குவதற்கு கடன்களை வழங்குகின்றன.

சம்பளம் மற்றும் சுயதொழில் செய்பவர்கள் செகண்ட் ஹேண்ட் கார் வாங்க விண்ணப்பிக்கலாம். கடன் பெறுவோரின் தகுதிக்கான அளவுகோல்கள் வேறுபடலாம். வங்கிகள் உங்கள் கடன் விண்ணப்பத்தை ஏற்றுக்கொள்வதற்கு முன், கார் மதிப்பீடு மற்றும் உங்கள் கிரெடிட் ஸ்கோரும், உங்கள் வருமானம் ஆகியவை கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும்.

வங்கிகளில் கடனுக்கு விண்ணப்பிப்பதற்கான தகுதி நிபந்தனைகளை நீங்கள் பூர்த்தி செய்தால், பயன்படுத்திய காருக்கான கடனை உடனடியாக எந்த தொந்தரவும் இல்லாமல் பெறலாம். பெரும்பாலான வங்கிகள் காரின் மொத்த மதிப்பில் 95% வரை கடனை வழங்குகின்றன. இருப்பினும், உங்கள் கிரெடிட் ஸ்கோர், வருமானம் மற்றும் பழைய காருக்கான தகுதி ஆகியவை தங்களது அளவுகோலுடன் பொருந்தினால் சில வங்கிகள் 100 சதவீதம் கூட லோன் வழங்குகின்றன.



இருப்பினும், சில வங்கிகள் மூன்று ஆண்டுகளுக்கு மேல் பழையான கார்களுக்கு கடன் வழங்க மறுக்கலாம். எனவே, விண்ணப்பிக்கும் முன், கடன் வழங்குபவரிடம் இதைச் சரிபார்க்க வேண்டும்.

Also Read : மாதம் ரூ.3000 கொடுக்கும் மத்திய அரசின் சூப்பர் திட்டம்

நீங்கள் செகண்ட் ஹேண்ட் அல்லது யூஸ்டு காரை வாங்க விண்ணப்பிக்கும் போது, இரண்டு விஷயங்கள் முக்கியமானவை. ஒன்று விண்ணப்பதாரரின் தகுதிகள், இரண்டாவது நீங்கள் வாங்க திட்டமிட்டுள்ள காரின் ஆவணங்கள். இந்த இரண்டு விஷயங்களும் சரியாக இருந்தால், நீங்கள் உடனடியாக கடனைப் பெறலாம். இதற்காக ஆன்லைன் மூலமாக கூட விண்ணப்பிக்கலாம் அல்லது நேரில் வங்கியை அணுகியும் கடன் பெறலாம். அதற்கு முன்னதாக நீங்கள் தயாராக வைத்திருக்க வேண்டிய விஷயங்கள் இதோ...

Also Read : உங்கள் கிரெடிட் ஸ்கோர் உயர வேண்டுமா - இந்த வழிமுறையை பின்பற்றுங்கள்

லோன் பெறும் முன்பு தயாராக இருக்க வேண்டியவை:

கடன் பெறுவதற்கு முன்பு வட்டி விகிதங்களை சரிபார்த்துக் கொள்வது நல்லது. இரண்டு அல்லது பல வங்கிகளிடம் கடனுக்கான கால அவகாசம் மற்றும் வட்டி விகிதம் ஆகியவை பற்றி பரிசோதிக்க வேண்டும்.

உங்கள் கிரெடிட் ஸ்கோர் 750 அல்லது அதற்கு மேல் இருந்தால், சிறந்த வட்டி விகிதங்களை வழங்க வங்கியுடன் பேச்சுவார்த்தை நடத்த முயற்சி செய்யலாம்.

Also Read : இனி வட்டி கொஞ்சம் எக்ஸ்ட்ராவா கிடைக்கும்... சூப்பர் நியூஸ் சொன்ன பேங்க்..

கடனுக்கு விண்ணப்பிக்கும் முன், செயலாக்கக் கட்டணம் மற்றும் பிற மறைக்கப்பட்ட கட்டணங்களையும் நீங்கள் சரிபார்க்க வேண்டும்.

புதிய காருக்கான கடனுக்கான வட்டி விகிதத்தை விட பழைய கார் கடனுக்கான வட்டி விகிதம் அதிகமாக இருக்கும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.



கடன் தொகையில் காப்பீட்டு செலவுகள் சேர்க்கப்படாது. புதிய காரை விட பயன்படுத்திய காரின் விலை குறைவாக இருப்பதால், கடன் தொகை மற்றும் காப்பீட்டு செலவு ஒப்பீட்டளவில் குறைவாக இருக்கும். கார் காப்பீட்டுக்கான புதுப்பித்தல் பிரீமியமும் குறைவாக இருக்கும்.

Also Read : இன்சூரன்ஸ் எடுக்கும் போது கவனிக்க வேண்டிய முக்கிய விஷயங்கள்!

ஆவணங்களைச் சமர்ப்பிப்பதில் தாமதம் ஏற்பட்டால், கடனை வழங்குவதற்கு நீண்ட கால அவகாசம் ஏற்படும் என்பதால், உங்களிடம் தொடர்புடைய ஆவணங்கள் தயாராக இருப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். கடன் செயல்முறை தொந்தரவில்லாமல் மற்றும் குறைந்த நேரத்தை எடுத்துக்கொள்வதற்காக நிறுவப்பட்ட கடன் வழங்குநரைத் தேர்ந்தெடுப்பது நல்லது.

Also Read : ஃபீச்சர் ஃபோன்களுக்கான யூபிஐ சேவைகள் அறிமுகம்

சில சிக்கலைத் தவிர்க்க முடிந்தவரை கார் மெக்கானிக்கின் உதவியைப் பெற வேண்டும். கடனைப் பெறுவதில் ஏதேனும் சிக்கலைத் தவிர்க்க, கார் பதிவு மற்றும் காப்பீடு தொடர்பான அனைத்து ஆவணங்களையும் சரிபார்ப்பது நல்லது.

பயன்படுத்திய காருக்கு கடன் பெற விண்ணப்பிக்க, கடன் விண்ணப்பப் படிவம், கார் மதிப்பீட்டு அறிக்கை, அடையாளச் சான்று, முகவரிச் சான்று மற்றும் வருமான ஆவணங்கள் தேவைப்படும். சில வங்கிகளில்  முன்பணத்தை செலுத்த வேண்டியிருக்கும், எனவே அந்தப் பணத்தை ஒதுக்கி வைத்துவிட்டு, பயன்படுத்திய காரை வாங்குவதற்கு எவ்வளவு கடன் தேவை என்பதைச் சரிபார்க்கவும்.

Also Read : state bank வாடிக்கையாளர்கள் மிஸ் செய்யக்கூடாத திட்டம்.!

EMI மற்றும் வெவ்வேறு தவணைக்காலங்களுக்குப் பொருந்தும் வட்டியைக் கணக்கிட்டு, உங்களுக்கு வசதியானதைத் தேர்ந்தெடுக்கவும். உங்கள் கிரெடிட் ஸ்கோர் குறைவாக இருந்தாலோ அல்லது கார் ஆவணங்கள் சரியாக இல்லாமலோ இருந்தால், கடன் விண்ணப்பம் நிராகரிக்கப்படலாம் அல்லது வட்டி விகிதம் அதிகரிக்கலாம்.



 

 

3 வருட காலத்திற்கு பயன்படுத்திய கார் கடனுக்கான வட்டி விகிதங்கள் மற்றும் EMI தொகை (7 லட்சத்திற்கு) :

1. பேங்க ஆப் இந்தியா: 6.85 சதவீதம் வட்டியுடன் சேர்ந்து மாதம் ரூ.21 ஆயிரத்து 566 கடன் தவணையாக செலுத்த வேண்டியிருக்கும்.

2.கனரா பேங்க்: 7.30 சதவீத வட்டியுடன் சேர்ந்து மாதம் ரூ.21 ஆயிரத்து 710 கடன் தவணையாக செலுத்த வேண்டியிருக்கும்.

3. பஞ்சாப் நேஷனல் பேங்க்: 7.75 சதவீத வட்டியுடன் சேர்ந்து மாதம் ரூ.21 ஆயிரத்து 855 கடன் தவணையாக செலுத்த வேண்டியிருக்கும்.

4. சென்ட்ரல் பேங்க்: 8.60 சதவீத வட்டியுடன் சேர்ந்து மாதம் ரூ.22 ஆயிரத்து 130 கடன் தவணையாக செலுத்த வேண்டியிருக்கும்.

5. பாரத ஸ்டேட் வங்கி: 8.70 சதவீத வட்டியுடன் சேர்ந்து மாதம் ரூ.22 ஆயிரத்து 162 கடன் தவணையாக செலுத்த வேண்டியிருக்கும்.

6. ஐசிஐசிஐ வங்கி: 12 சதவீத வட்டியுடன் சேர்ந்து மாதம் ரூ.23 ஆயிரத்து 250 கடன் தவணையாக செலுத்த வேண்டியிருக்கும்.

7. HDFC வங்கி: 13.75 சதவீத வட்டியுடன் சேர்ந்து மாதம் ரூ.23 ஆயிரத்து 839 கடன் தவணையாக செலுத்த வேண்டியிருக்கும்.

8. ஆக்சிஸ் வங்கி: 13.25 சதவீத வட்டியுடன் சேர்ந்து மாதம் ரூ.23 ஆயிரத்து 670 கடன் தவணையாக செலுத்த வேண்டியிருக்கும்.

9. பஞ்சாப் அண்ட் சிந்த் பேங்க்: 9.85 சதவீத வட்டியுடன் சேர்ந்து மாதம் ரூ.22 ஆயிரத்து 538 கடன் தவணையாக செலுத்த வேண்டியிருக்கும்.

10. பேடரல் பேங்க்: 13.80 சதவீத வட்டியுடன் சேர்ந்து மாதம் ரூ.23 ஆயிரத்து 856 கடன் தவணையாக செலுத்த வேண்டியிருக்கும்.
Published by:Selvi M
First published:

Tags: Bank Loan, Cars

அடுத்த செய்தி