ஹோம் /நியூஸ் /வணிகம் /

ஃபிக்சட் டெபாசிட்களுக்கு அதிக வட்டி வழங்கும் வங்கிகள் எவை தெரியுமா?

ஃபிக்சட் டெபாசிட்களுக்கு அதிக வட்டி வழங்கும் வங்கிகள் எவை தெரியுமா?

ஃபிக்சட் டெபாசிட்

ஃபிக்சட் டெபாசிட்

Fixed Deposit | வங்கிகளில் நிலையான வைப்பு தொகைக்கான காலத்தை 7 நாட்கள் முதல் 10 ஆண்டுகளாக நமது விருப்பதற்கு ஏற்ப தேர்வு செய்துகொள்ளலாம். ஃபிக்சட் டெபாசிட் தொகையின் வட்டி விகிதம் நீங்கள் தேர்வு செய்யும் காலத்திற்கு ஏற்ப மாறுபடும்.

நிலையான வைப்புத்தொகை எனப்படும் ஃபிக்சட் டெபாசிட் நடுத்தர மக்களின் நம்பகமான சேமிப்புகளில் ஒன்றாக உள்ளது. ஃபிக்சட் டெபாசிட் என்பது வங்கி அல்லது வங்கி சாராத நிதி நிறுவனங்களில் நிதியை குறிப்பிட்ட காலகட்டத்திற்கு வைப்பு வைப்பது, அப்படி முதிர்வு காலம் வரை வைக்கப்படும் பணத்திற்கு வட்டி கிடைக்கும். முதிர்வு காலம் வரை அந்த நிதியை வங்கியில் இருந்து எடுக்க முடியாது, ஏதாவது காரணத்திற்காக பணத்தை பாதியில் எடுக்க நேர்ந்தால் அதற்கான அபராதம் செலுத்த வேண்டியிருக்கும்.

வங்கிகளில் நிலையான வைப்பு தொகைக்கான காலத்தை 7 நாட்கள் முதல் 10 ஆண்டுகளாக நமது விருப்பத்திற்கு ஏற்ப தேர்வு செய்துகொள்ளலாம். ஃபிக்சட் டெபாசிட் தொகையின் வட்டி விகிதம் நீங்கள் தேர்வு செய்யும் காலத்திற்கு ஏற்ப மாறுபடும். நீண்ட கால சேமிப்பை போலவே 1 அல்லது இரண்டு ஆண்டுகளுக்கு போடப்படும் ஃபிக்சட் டெபாசிட்களுக்கும் அதிக வட்டிகளை கொடுக்கும் வங்கிகளையும், அதன் வட்டி விகிதத்தையும் கீழே பட்டியலிட்டுள்ளோம்.

ஒராண்டுக்கான FD வட்டி விகிதங்கள்:

1. ஆர்பிஎல் வங்கி ஓராண்டுக்கான ஃபிக்சட் டெபாசிட்டுகளுக்கு 6.25 சதவீத வட்டி வழங்குகிறது.

2. இந்தஸ்இந்த் வங்கி ஒரு வருட ஃபிக்ஸட் டெபாசிட்டிற்கு வழங்கும் வட்டி விகிதம் 6 சதவீதம்.

3. பந்தன் பேங்க் ஓராண்டு ஃபிக்சட் டெபாசிட்டுளுக்கு 5.75 சதவீத வட்டியை வழங்குகிறது.

Read More : வந்தாச்சு புதிய விதி... இனி ரூ.20 லட்சத்துக்கு மேல் பணப்பரிவர்த்தனை செய்ய இது கட்டாயம்!

4. ஐடிஎஃப்சி வங்கி ஒரு வருட ஃபிக்சட் டெபாசிட்டிற்கு 5.75 சதவீத வட்டி வழங்குகிறது.

5. டிசிபி பேங்க் 5.5 சதவீத வட்டியை ஒருவருட ஃபிக்சட் டெபாசிட்டிற்கு வழங்குகிறது.

2 ஆண்டுக்களுக்கான FD வட்டி விகிதங்கள்:

1. இந்தஸ்இந்த் வங்கி இரண்டு வருட ஃபிக்சட் டெபாசிட்டிற்கு வழங்கும் வட்டி விகிதம் 6.50 சதவீதம்.

2.ஆர்பிஎல் வங்கி இரண்டு வருட ஃபிக்சட் டெபாசிட்டுகளுக்கு 6.50 சதவீத வட்டி வழங்குகிறது.

3. பந்தன் பேங்க் 2 ஆண்டு ஃபிக்சட் டெபாசிட்டுளுக்கு 6.25 சதவீத வட்டியை வழங்குகிறது.

4. ஐடிஎஃப்சி வங்கி இரண்டு வருட ஃபிக்சட் டெபாசிட்டிற்கு 6.25 சதவீத வட்டி வழங்குகிறது.

5. டிசிபி பேங்க் 5.75 சதவீத வட்டியை இரண்டு வருட ஃபிக்சட் டெபாசிட்டிற்கு வழங்குகிறது.

ஃபிக்சட் டெபாசிட் பாதுகாப்பானதா?

வாடிக்கையாளர்களின் 5 லட்சம் ரூபாய் வரையிலான வைப்புத்தொகையை வங்கிகள் காப்பீடு செய்கின்றன. பெரும்பாலான வங்கிகள் டெபாசிட் இன்சூரன்ஸ் மற்றும் கிரெடிட் கியாரண்டி கார்ப்பரேஷன் (டிஐசிஜிசி) மூலம் நிர்வகிக்கப்படுகின்றன,  இந்திய ரிசர்வ் வங்கியின் (ஆர்பிஐ) துணை நிறுவனமான இது டெபாசிட்களை காப்பீடு செய்கிறது. எனவே நீங்கள் வங்கியில் செய்யும் டெபாசிட்களுக்கு பாதுகாப்பு உண்டு.

Read More : ரூ. 20 லட்சத்துக்கு மேல் பணம் எடுக்க, டெபாசிட் செய்ய புது விதி! நோட் பண்ணிக்கோங்க!

ஃபிக்ஸட் டெபாசிட் முதிர்ச்சி அடைந்த பிறகு என்ன செய்ய வேண்டும்?

முதிர்வடைந்த வைப்புத்தொகையை வாடிக்கையாளர் விரும்பினால் மீண்டும் வேறு ஏதாவது ஒரு ஃபிக்சட் டெபாசிட் திட்டத்தில் சேமிக்கலாம் அல்லது பணத்தை உங்களுடைய சேமிப்பு கணக்கிற்கு மாற்றிக்கொள்ளலாம். இல்லையேல் வட்டித்தொகையை மட்டும் சேமிப்பு கணக்கிற்கு மாற்றிக்கொண்டு, மீதமுள்ள தொகையை அடுத்தக்கட்ட சேமிப்பிற்கு பயன்படுத்தலாம்.

பான் கார்டு இல்லாமல் ஃபிக்ஸட் டெபாசிட் செய்தால்?

கோடக் மஹிந்திரா வங்கியின் கூற்றுப்படி, பான் கார்டு இல்லாத வாடிக்கையாளருக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள பின்விளைவுகள் ஏற்படும்,

- 20 சதவீத டிடிஎஸ் அல்லது அதற்கு மேற்பட்ட விகிதத்தில் பிடித்தம் செய்யப்படலாம்.

- வருமான வரித்துறையிடமிருந்து TDS கிரெடிட் கிடைக்காது

- படிவம் 15G/H மற்றும் பிற விலக்கு சான்றிதழ்கள் செல்லாது

First published:

Tags: Bank, Business, Fixed Deposit