வீட்டுக்கடன் மீதான வட்டியை குறைத்தது வங்கிகள்

வங்கிகள் வீட்டுக்கடன் மீதான வட்டியை குறைத்து வருகின்றன. ஒரு சில வங்கிகள் இது வரை இல்லாத அளவிற்கு வீட்டுக்கடன் வட்டியை குறைத்துள்ளன.

வீட்டுக்கடன் மீதான வட்டியை குறைத்தது வங்கிகள்
கோப்புப் படம்
  • Share this:
கொரோனா காலத்தில் ஏற்பட்டுள்ள பொருளாதார சுணக்கத்தை சீர் செய்ய, இந்திய ரிசர்வ் வங்கி தொடர்ந்து வட்டி விகிதங்களை குறைத்து கொண்டே இருந்தது. மார்ச் மாத இறுதியில் 0.75 சதவிதமும், மே மாதம் 0.40 சதவிதமும் ரிசர்வ் வங்கி வட்டி விகிதத்தை குறைத்தது. இதை தொடர்ந்து பாரத ஸ்டேட் வங்கி தொடங்கி அனைத்து வங்கிகளும் வீட்டு கடன் மீதான வட்டியை குறைத்து வருகின்றன.

LIC HOUSING FINANCE நிறுவனம் வழங்கும் வீட்டுக்கடன் மீதான வட்டியை இதுவரை இல்லாத அளவிற்கு 6.9 சதவிதமாக குறைத்துள்ளது. அதாவது, 50 லட்சம் வரை பெறப்படும் வீட்டுக்கடனுக்கு குறைந்தபட்ச வட்டி விதிகம் 6.9 சதவிதத்தில் இருந்து தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒருவரின் சிபில் ஸ்கோரை பொறுத்து இந்த வட்டி விகிதம் அதிகரிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பாரத ஸ்டேட் வங்கி வீட்டுக்கடன் வட்டியின் குறைந்தபட்ச அளவாக 6.95 சதவிதமாக குறைத்துள்ளது. இது கடந்த 15 ஆண்டுகளுக்கு முன் இருந்த வட்டி விகிதம் என்பதால், 2004ம் ஆண்டு இருந்ததை போல், வீட்டுக்கடன் வாங்குபவர்களின் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புகள் உள்ளதாக பாரத ஸ்டேட் வங்கி தெரிவித்துள்ளது.


ஹெச்டிஎப் சி வங்கி வழங்கும் வீட்டு கடன் வட்டி விகிதமும், 6.90 சதவிதமாக குறைக்கப்பட்டுள்ளது. மற்றொருபுறம்,பேங்க ஆப் இந்தியா, செண்ட்ரல் பாங்க் ஆப் இந்தியா போன்ற வங்கிகள் இன்னும் குறைவாக, 6.85 சதவித வீட்டுக்கடன் வட்டியை குறைத்துள்ளன.

மிகக்குறைந்த அளவாக, யூனியன் பாங்க் ஆப் இந்தியாவில், வீட்டுக்கடன் வட்டி 6.70 அளவிற்கு குறைக்கப்பட்டுள்ளது. இதற்கு மேல் குறைவான வட்டியை வங்கிகளால் வழங்க முடியாது என்றாலும், ஒருவரின் சிபில் ஸ்கோரை பொறுத்து, வட்டி விகிதங்கள் அதிகரிக்கும் என்பது கவனிக்கதக்கது.

மேலும் படிக்க...கொரோனா உயிரிழப்பு எண்ணிகையில் தவறு நடந்துள்ளது - ஒப்புக்கொண்ட பெரு அதிபர்

வட்டி விகிதம் குறைவாக இருந்தாலும், வீட்டுக்கடன் வழங்கும் போது, வங்கிகள் விதிக்கும் ப்ராசஸிங் கட்டணம், பதிவு கட்டணம் போன்ற இதர கட்டணங்களில் மாறுபாடு இருக்கும் என்பதால், வீட்டுக்கடன் வாங்கும் போது வங்கிகள் விதிக்கும் கூடுதல் கட்டணங்களையும் கணக்கில் கொள்ள வேண்டும் என்ற கருத்தும் முன் வைக்கப்படுகிறது.
First published: July 23, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading