இந்தியாவில் கடந்த சில வருடங்களாகவே வங்கிகள் அபரிமிதமான முன்னேற்றம் அடைந்து வருகின்றன. இன்ஸ்டன்ட் பேமெண்ட், பணப்பரிமாற்றங்கள் முதல் உடனடி கடன் ஒப்புதல்கள் வரை பல்வேறு வகையான சேவைகள் வழங்கப்படுகின்றன. அதேவேளையில் மற்றொருபுறம் மோசடிகளும் அதிகரித்து வருகின்றன.
வங்கி நிறுவனங்களும் தங்களது வாடிக்கையாளர்களை நிதி மோசடி தொடர்பாக எச்சரித்து வருகின்றன. சமீபத்தில் ஐசிஐசிஐ வங்கி கூட புதிய வகை நிதி மோசடி குறித்து தனது வாடிக்கையாளருக்கு மின்னஞ்சல் அனுப்பியுள்ளது. வங்கி மோசடி செய்பவர்கள் மக்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணத்தை வாட்ஸ்அப் மூலம் ஏமாற்றி மோசடி செய்வது தெரிகிறது.
1. வாட்ஸ்அப்/ஃபேஸ்புக் கணக்கு மூலம் மோசடிகள்:
மோசடி செய்பவர்கள் வாடிக்கையாளரின் ஃபேஸ்புக் அல்லது வாட்ஸ்அப் கணக்கை அணுகி, வாடிக்கையாளரின் தொடர்பு பட்டியலில் உள்ள தொடர்புகளுக்கு பணம் கேட்டு செய்திகளை அனுப்புகிறார்கள். ஐசிஐசிஐ வங்கி கூற்றின் படி "இந்த அவநம்பிக்கையான காலங்களில், நிதிக்கான பல உண்மையான கோரிக்கைகளை நாங்கள் பார்த்திருக்கிறோம், எனவே தெரிந்த தொடர்புகளின் கோரிக்கை வழக்கத்திற்கு மாறானதாக இல்லை" என தெரிவித்துள்ளது.
ஹோம் லோனில் வீடு வாங்க நினைப்பவர்கள் இதையெல்லாம் கட்டாயம் நோட் பண்ணுங்க!
சிலர் நம்பகமான நபர்களின் தொடர்புகளில் இருந்து நிதி தொடர்பான கோரிக்கைகள் வருவதால், உதவி கோரிய நபர்களை தொடர்பு கொள்ளாமலேயே பணத்தை அனுப்பி விடுகின்றனர்.
இதுபோன்ற சந்தர்ப்பங்களில் கவனமாக இருக்கவும், சம்பந்தப்பட்ட நபரை தொடர்பு கொண்டு எப்போதும் உறுதிப்படுத்திக் கொள்ளவும் ஐசிஐசிஐ வங்கி எச்சரித்துள்ளது. உங்கள் வாட்ஸ்அப் அல்லது ஃபேஸ்புக் கணக்குகள் ஹேக் செய்யப்பட்டால், அதனை உடனடியாக சைபர் க்ரைம் போன்றவர்களின் கவனத்திற்கு கொண்டு செல்வது நல்லது.
2. ஃபிஷிங்:
கணக்கு எண்கள், லாகின் ஐடிகள், உள்நுழைவு மற்றும் பரிவர்த்தனை பாஸ்வேட், மொபைல் எண்கள், முகவரிகள், டெபிட் கார்டு கட்ட மதிப்புகள், கிரெடிட் கார்டு எண்கள், CVV எண்கள், PAN, பிறந்த தேதிகள், தாய்மார்களின் இயற்பெயர்கள், பாஸ்போர்ட் எண்கள் போன்ற வாடிக்கையாளர் தகவல்களைப் பெற, மோசடி செய்பவர்கள் மின்னஞ்சல் ஃபிஷிங், குரல் ஃபிஷிங் மற்றும் எஸ்எம்எஸ் ஃபிஷிங் ஆகியவற்றின் கலவையைப் பயன்படுத்துகின்றனர்.
ஃபிஷர்கள் ஆன்லைன் வங்கியின் யூசர்களை ஏமாற்றுவதற்காக அதிநவீன சமூக பொறியியல் நுட்பங்களைப் பயன்படுத்தி, சிக்கலான தாக்குதல்களை மேற்கொள்ள தங்கள் தொழில்நுட்பத்தை உருவாக்கியுள்ளனர்.
3. விஷிங்:
விஷிங் என்பது, ஃபோன் மூலம் உங்களிடமிருந்து தனிப்பட்ட தகவலைப் பெறுவதற்கான ஒரு கான் ஆர்ட்டிஸ்ட்டின் முயற்சியைக் குறிக்கிறது. யூஸர் ஐடி, லாகின் மற்றும் பரிவர்த்தனை கடவுச்சொற்கள், ஒன் டைம் பாஸ்வேர்டு, பாஸ்வேர்டுகள் (OTPகள்), URNகள் (தனிப்பட்ட பதிவு எண்கள்), கார்டு பின்கள், CVVகள், அல்லது பிறந்த தேதி அல்லது தாயின் இயற்பெயர் போன்ற தனிப்பட்ட தகவல்களை பெற மோசடி கும்பல்கள் இந்த முறையை பயன்படுத்துகின்றனர்.
இனி அதிக தொகைக்கு ஆயுள் காப்பீடு எடுப்பது எளிதல்ல.. பிடியை இறுக்கும் இன்ஷூரன்ஸ் நிறுவனங்கள்
மோசடி செய்பவர்கள் வாடிக்கையாளர்களை தொடர்பு கொண்டு தனிப்பட்ட மற்றும் நிதி தகவல்களை சொல்லி தங்களை வங்கியில் இருந்து பேசுவதைப் போல் காட்டிக்கொள்வார்கள். அதன் பின்னர் உங்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல்களை வைத்து கணக்கில் உள்ள பணக்களை எடுக்க முயல்வார்கள்.
ஸ்மசிங்:
இது குறுச்செய்தி மூலமாக செய்யப்படும் மோசடி ஆகும். நாடு முழுவதும் உள்ள செல்போன் யூஸர்கள் தங்கள் கணக்கு காலாவதியாகிவிட்டது, புதுப்பிக்கப்பட வேண்டும் அல்லது புதிய திட்டத்தில் பதிவு செய்ய வேண்டும் என்று பரிந்துரைக்கும் செய்திகளைப் பெறுகின்றனர். செய்தியில் கட்டணமில்லா தொலைபேசி எண்கள் மற்றும் இணைப்புகள் உள்ளன. அதனை தொடர்பு கொள்ளும் நபர்களின் வங்கி கணக்குகளை ஹேக்கர்கள் அல்லது மோசடி கும்பல் பணத்தை திருடலாம்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Bank, Bank accounts